பிலிப்பியர் 4:9 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார். Onani mutuwoபரிசுத்த பைபிள்9 என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 நீங்கள் எவற்றை எல்லாம் என்னிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டறிந்தீர்களோ அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்போது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார். Onani mutuwo |