Baibulo la pa intaneti

- Zotsatsa -




பிலிப்பியர் 1:27 - பரிசுத்த பைபிள்

27 நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன்.

Onani mutuwo Koperani

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.

Onani mutuwo Koperani

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 என்னதான் நடந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் வந்து உங்களைப் பார்க்கக்கூடியதாய் இருந்தாலும், வரமுடியாதிருந்து உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி ஒரே மனதுடன் ஒன்றாக நிலைத்து நிற்கிறீர்கள் என்றும்,

Onani mutuwo Koperani

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 என்னதான் நடந்தாலும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு தகுதியுடைய விதத்தில் நடந்துகொள்ளுங்கள். அப்போது நான் உங்களைப் பார்க்க நேரில் வர முடிந்தாலும், வர முடியாத சந்தர்ப்பத்தில் உங்களைக் குறித்துக் கேள்விப்பட நேர்ந்தாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காக ஒரே ஆவியோடும் ஒரே மனதோடும் உறுதியாக நின்று ஒன்றுசேர்ந்து போராடுகிறீர்கள் என்றும்,

Onani mutuwo Koperani

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.

Onani mutuwo Koperani




பிலிப்பியர் 1:27

Titsatireni:

Zotsatsa


Zotsatsa