ரோமர் 2:4 - Saurashtra Bible (BSI)4 அத²வா தூ தேவுகெ லெ:க்க நீ:ஸ்த தயவுக்கின், ஸகிஞ்சுலரிய ஸுபாவுக்கின், ஒர்சுலரிய மொன்னுக் ஸாதாரணம்கன் ஹவ்டரியொகீ? தூ நஜ்ஜெ வாடுக் ஸொட்டி சொக்கட் வாடும் ஜனொ மெனீஸ் தேவ் தொகொ தயவு தெக்கடராஸ். எல்லெ தொகொ சொக்கட் களாய். အခန်းကိုကြည့်ပါ။ |
தேவ் மென்க்யானுகெ பாபுனுக் ஜவடரிய பரிஹார பலிகன் ஏசுக் ந்யமுன் கெர்யாஸ். ஏசு பலி ஹொயெஹால் அம்ரெ பாபுன் க்ஷமொ கெர்னி பொடெஸ். ஏசுக் விஸ்வாஸ் கெரரிய அஸ்கின் நீதிமான் ஹொனொ மெனி தேவ் இஸனி கெர்யாஸ். ஜியெ காலும் அந்யாவ் கெரெ மென்க்யானுக் தேவ் தண்டன தியானி. தெனு அஸ்கிதெக ஸகிஞ்சிலியெஹால் மென்க்யானுகெ பாபுனுக் தண்டன அப்பெனி. த்யெலெந்தால் தேவுகெ நீதி பராட் களயெனி.
தெல்லெ ஆவின் கோன்மெனெதி, பூர்வ காலும் நோவா மெனஸ்தெனொ தாரு பந்தெ தின்னுநும் தேவ் தெங்கொஜோள் ராக்³ பொட்னாஸ்தக் ஜுகு நிதான்கன் சல்த கெல்லி மெளி தெங்கொ வத்தாக் அய்குனா ஜியாஸ்தெனு. தெப்பொ ஜலப்ரளயம் அவெவேளு தெல்லெ தாரும் ஆட் ஜெனு கெத்தி³ பிஸ்தர் ஜியாஸ். தெல்லெ தாரு பனிம் தெலி தெங்கொ கபடெஸ். (ஆதி 6:1—7:24)