4 தெல்லெ ஸாத் பிடுகுன் ஸமசார் ஸங்கரியவேளு மீ லிக்கஞ்ஜியெஸ். தெப்பொ ஒண்டெ ஸெத்து³, “தெல்லெ ஸாத் பிடுகுன் ஸங்கரிய ஸமசாருக் மொன்னும் தொவ்லெ. லிக்குங்கொ" மெனி ஸங்கெஸ்தெ அய்கெஸ்.
துமி தர்ஸனகன் தெக்கயெ காக்ஷி தும்கொ இவர் பொட்னா. தெல்லெ வத்தான் முத்ரொ தகி ஜ²கி தொவெஸோன் ரா:ய்; செவ்தன் களையெஸ்தெகொஜோள், “எல்லெ செவ்தி தெக்காட்” மெனி மெனெதி தெனொ, “மொர்ஹால் செவ்தன் முஸரெனி; எமாம் லிக்கினி பொடெஸ்தெ இவர் கெல்லன் முஸரெனி” மெனி மெனய்.
தெக பல்சொ பகவான் மொகொ ஸீ, “தூ ஒண்டெ ம:ட்ட பல்காம், ம:ட்ட அக்ஷரும், “மகேர்-சாலால்-அஷ்-பாஸ்” மெனி லிக்கி மெனி ஸங்க்யாஸ்.
தேவ் மொகொ தீரிய எல்லெ ப்ரமாணுக் மீ லிக்கி முத்ரொ தகி மொர் சிஷ்யான்ஜோள் தியெஸ்.
தானியேலு, புலோகுக் ஸெத்ல காலு அவஸ்த லெங்கு தூ எல்லெ வத்தானுக் ஜ²கி தொவி, எல்லெ புஸ்தவுக் முத்ர தகி தோ²வ். புலோகுர் ஸெத்லகன் காய் சலய் மெனி களைளஸ்தக் ஜுகுதெனு ப்ரயாஸ் பொடன். தெல்லெ ப²லன் நீ:ஸ்தக் ஜேடய்” மெனி ஸங்கி முஸடெஸ். (தர்ஸன 22:10)
தெல்லெகொ தெனொ, “தானியேலு, தூ ஜவாய். ஸெத்ல காலு முஸஸ்த லெங்கு எல்லெ வத்தான் ரகசியம்கன் ரா:ய்.
பரிஸுத்த த⁴வ்ராம் 2,300 தின்னு லெங்கு வீள்டொகின், ஸொளபார் தேரிய தகன பலின்கெ தர்ஸனாகெ விவர் எல்லேஸ்: தெல்லெ நிஜ்ஜம்கன் சலய். தூ எல்லெ தர்ஸனாக் மொன்னும் தொவ்லெ. காமெனெதி எல்லெ பூர்தி ஹோஸ்தக் ஜுகு தின்னுன் லகய்” மெனி மெனெஸ்.
"பராட் களானாஸ்த ரகசியம் அங்குன் ஜுகுயெ ஸே. தெவ்டயெ அம்கொகின் அம்ரெ ஸந்ததினுக் பகவான் களட்ரியாஸ். அமி அம்ரெ பகவான்கெ ஆக்³ஞான்தானுக் ஜிவ்னொ ஸேஸ்தேஸ் முக்யம். (பிர 12:13)
தெல்லெ ஸெத்து³, “தூ தர்ஸனாம் தெக்கரிய விவர்னுக் ஒண்டெ புஸ்தவும் லிக்கி எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கெயா பட்ணமுனும் ஸேஸ்தெ தேவுகெ ஸாத் ஸபானுக் தட்டெ’’ மெனி ஸங்கெஸ்.
தூ அத்தொ தெக்கெஸ்தெ அஸ்கி லிக்கி. அத்தொகின், அத்தெங்குட் சலஞ்ஜாரிய கார்யமுனுக் மெளி லிக்கி.
அகாஸும்ரீ: மீ அய்கெ ஸெத்து³ பீர் மொர்ஜோள் வத்தொ கெரெஸ். ஸெந்துர் ஹொல்லெகின், பு⁴ஞி ஹொல்லெ ஹிப்பிரிய தேவு தூது, “ஹுடய் ஸேஸ்தெ புஸ்தவு கொ³ளாக் தூ ஜீ கள்ளெ" மெனி மெனெஸ்.
அங்குன், தெனொ மொகொ ஸீ, “எல்லெ புஸ்தவும்கெ தீர்கதரிஸன வத்தானுக் முத்ரொ தகி ஜ²கி தொ²வுங்கொ. காமெனெதி எல்லெ அஸ்கி பூர்தி ஹோரிய கெ⁴டி லெகுத்த அவ்டியொ. (தானி 12:4)