7 ஹொயெதி மொர் ஸெவ்கன் மோசே தெங்கொஸோன் ஸாதாரண தீர்கதரிஸி நா: தெனொ மொர் மென்க்யானுக் சல்த கெரஸ்தெனொ. தெனொ அஸ்கி விதமும் நொம்கெ ஹொயெஸ்தெனொ. (எபி 3:2)
பகவான் சாத்தான்ஜோள், “மொர் ஸெவ்கன் யோபுக் தூ ஸியெஸ்கீ? தெகொ ஸோன் உத்தமுடுகின், நீதிமான் கோன் ஸே? கொன்னி ஹீன் கெர்னாஸ்தக் தேவுக் தக்கி ஜிவரிய தெகொஸோன் மெனிக் புலோகுர் கொன்னின் நீ:” மெனி ஸங்க்யாஸ்.
பல்சொ தேவ் அபுல் ஸெவ்கன் மோசேக்கின் தெனு களைளியெ ஆரோனுக் எகிப்துக் தட்டியாஸ்.
ஒண்டெதெனொ அபுல் ஸிங்கதிஜோள் வத்தொ கெரரியஸோன் பகவான் மோசேஜோள் வத்தொ கெர்யாஸ். மோசே பகவான்ஜோள் வத்தொ கெர்திகி அபுல் தாமுக் ஜேடய். ஹொயெதி மோசே ஸெங்கொ அவெ நூனுகெ பெடொ, ஜவ்ணொ யோசுவா கொப்பிமூஸ் டேராகெ தாரும் ர:கிலேத் ரா:ய். (ஆதி 32:30; ஸங்க் 12:8; உபா 34:10)
புலோகுர் உஜெ அஸ்கி மென்க்யான் ஸொம்மர் யோவான் ஸ்நானகனூஸ் மேட். ஹொயெதி பரலோகு ராஜ்யமும் ஸாதாரண மெனிக், எல்லெ யோவான் ஸ்நானகன் ஸொம்மர் மேட்கன் ரா:ய் மெனி தீ⁴ர்குகன் மீ தும்கொ ஸங்கரியொ.
துமி தீர்கதரிஸிக் ஸான் ஜியாஸ்தெகீ? ஹாய்! தீர்கதரிஸின் ஸொம்மர் யோவான் ஸ்நானகன் ஜுகு மேட் மெனி மீ தும்கொ ஸங்கரியொ.
மோசே தெல்லெ காக்ஷிக் ஸீதி ஆச்சர்யம் பொடெஸ். தெல்லெ காக்ஷிக் கம்சி ஸாஸ்தக் லெகுத்த ஜியெவேளு,
தேவுகெ ஸெவ்கனுன் நொம்கெ ஹொயாஸ்தெனுகன் ர:னொ.
தேஹாலிம் மீ தொகொஸோன் ஒண்டெ தீர்கதரிஸிக் தட்டு. தெனொ காய் வத்தொ கெர்னொ மெனி மீ தெகொ ஸிக்கடி தொ³வு. மீ தேரிய ஆக்³ஞானுக் தெனொ தும்கொ ஸங்கய். (யோவா 4:25; 8:28; 12:49,50)
பகவான் ஸங்கி ஹொதெதானுக் தேவுகெ ஸெவ்கன் மோசே மோவாபு தேஸும் மொரெஸ்.
மீ ஸங்கெதானுக் தேட் அவன் முஸுனா ஜியெதி, தூ தேவுகெ குடும்பமும் கோனக் சல்த கெல்லுனொ மெனி தொகொ புத்தி ஸங்கி எல்லெ லேக் லிக்கரியொ. ஜீவ் ஸேஸ்தெ தேவுகெ ஸபாக் ஸத்ய வத்தானூஸ் கா²ம்புகன்கின், பலம் தேரிய அஸ்திபார்கன் ஸே.
பகவான்கெ ஸெவ்கன் மோசே மொரெ பல்சொ, நூனுகெ பெடொகின், மோசேக் ஹேதுகன் ஹொதெ யோசுவாஜோள் பகவான் ஸங்கெ வத்தான்: (யாத் 24:13; உபா 1:38)
“மொர் ஸெவ்கன் மோசே மொஜ்ஜியெஸ். அத்தொ தூஸ் எல்லெ இஸ்ரயேல்னுக் சல்த கெர்னொ; தூ எல்லெ மென்க்யான் ஸெந்தொ யோர்தான் நெத்திக் தடி, மீ தும்கொ தேஞ்ஜாரிய தேஸுக் ஜா.