1 பல்சொ ஏசு யோர்தான் நெத்திரீ: பிரி அவெவேளு, தெனு வளுராணுக் ஜாஸ்ததானுக் பரிஸுத்த ஆவி தெங்கொ சல்த கெர்யாஸ். தேட் 40 (சளிஸ்) தின்னு பிஸாஸு தெங்கொ பரிக்ஷ கெரெஸ்.
ஸெர்க, தும்ரெ வத்தாதானுக் மீ ஆகாப் ரஜொஜோள் ஸங்கஸ்தவேளு, பகவான்கெ ஆவி தும்கொ துஸ்ர கோட்டீ பெல்லி ஜேட்யெதி தெனொ தும்கொ வெக்கி ஸீதி துமி அப்புனா ஜியெதி ஆகாப் ரஜொ மொகொ மொரட்டுகய். தும்ரெ ஸெவ்கன் ஹொயெ மீ ந:ன்ன ஒர்ஸுரீ: பகவானுக் கெனம் தீ³, தெங்கொ ஒப்பயெதானுக் ஜிவஸ்தெனொ.
தேட் ஒண்டெ க²டா ஜா²ட் க²ல்லெ பிஸெஸ். தெனொ பகவான்ஜோள், “பகவானு, மீ ஜிவெஸ்தெ புஜ்ஜய். மொர் ஜீவுக் கள்ளுவொ. மொர் ஒள்ட்யான் ஸொம்மர் மீ சொக்கட்தெனொ நா:” மெனி ப்ரார்தன கெரெஸ்.
தேவ் பகவான்கெ ஆவி மொர் ஹொல்லெ ஸே; தெனு மொகொ களைள்ரியாஸ்; துர்பள்னுக் சொக்கட் ஸமசார் ஸங்கி, மொன்னு முட்டெஸ்தெங்கொ பரொ கெரி, காராம் ஸேஸ்தெங்கொஜோள், ‘துமி ஸொடுவி பொந்திதியாஸ்’ மெனிகின், ப⁴ந்தைதுன்ஜோள், ‘தும்கொ ஸுதந்தரம் அப்பில்டியொ’ மெனி ஸங்கஸ்தக் தேவ் மொகொ தட்டிரியாஸ். (மத் 11:5; லூக் 4:18)
தெப்பொ பகவான்கெ ஆவி மொகொ உஞ்சொ பெல்லி ஜியெஸ்; தெனு பெல்லி ஜாராஸ்தெ மொகொ ஒப்பயெனி; மொகொ ராக்³ அவெஸ்; ஹொயெதி பகவான்கெ ஹாத் மொகொ கெட்டி தெர்லி ஹொதெஸ்.
ஏசு ஞானஸ்நான் கள்ளிய பல்சொ, பனிம்ரீ: தீருக் அவ்யாஸ். தெப்பொ அகாஸ் ஹுடயெஸ். கவ்து³ ஹுத்திரி அவரியஸோன் தேவுகெ ஆவி அபுல் ஹொல்லெ ஹுத்திரி அவராஸ்தெ ஏசு தெக்யாஸ்.
பரிஸுத்த ஆவி தெகொ சல்த கெரெதானுக் தெனொ த⁴வ்ராக் அவி ஹொதெஸ். நியாய ப்ரமாண்கெ ரீதிதானுக் நு:ரு ஏசுக் ஸமர்பண கெரஸ்தக் ஜெனாஸ்தெனு த⁴வ்ரா பிஸ்தர் பெல்லி அவெவேளு,
தெப்பொ யோவான் ஸ்நானகன் யோர்தான் நெத்தி லெகுத்த ஜிவரிய அஸ்கி கா³மு மென்க்யானுக் தெக்கி, “துமி பாப் கெரஸ்த ஸொட்டி தேவ்ஜோள் அவொ. ஞானஸ்நான் கள்ளுவொ. தேவ் தும்ரெ பாபுனுக் க்ஷமொ கெரன்’’ மெனி ப்ரஸங்கம் கெரெஸ்.
ஏனோஸ் சேத்துக் பெடொ; சேத் ஆதாமுக் பெடொ; ஆதாமுக் தேவ் உரு கெர்யாஸ்.
பல்சொ, பரிஸுத்த ஆவிகெ பலம்ஹால் ஏசு கலிலேயாக் பிரி ஜியாஸ். ஏசுகெ கீர்த்தி அஸ்கி தாம் ப்ரபல்யம் ஹொயெஸ்.
“பகவான்கெ ஆவி மொர் ஹொல்லெ ஸே. தெனு மொகொ களைள்ரியாஸ். காமெனெதி துர்பள்னுக் சொக்கட் ஸமசார் களடஸ்தக், மொன்னு முட்டெஸ்தெங்கொ பரொ கெரஸ்தக், காராம் ஸேஸ்தெங்கொ ஸொடுவி கெரஸ்தக், தொளா ஸநி நீ:ஸ்தெங்கொ ஸநி தேஸ்தக், ஹிம்ஸொ பொந்தஸ்தெங்கொ ஸொடுவி கெரஸ்தக்,
அங்குன், தெனொ ஸாக்ஷிகன் ஸங்கெஸ்தெ காயொமெனெதி, “பரிஸுத்த ஆவி கவ்து³ஸோன் அகாஸும்ரீ: ஹுத்திரி அவி எங்கொ ஹொல்லெ பிஸெஸ்தெ மீ ஸியெஸ்.
தேவ்ஹால் தட்டினி பொட்யாஸ்தெனு தேவுகெ வத்தானுக் ஸங்கராஸ். தேவ் தெங்கொ லெ:க்க நீ:ஸ்த ஆன்மீக வரமுனுக் தீரியாஸ்.
ஏசு பரலோகுக் ஜாஸ்தக் முல்லொ அபுல்நு களைளியெ அப்போஸ்தலர்னுக் பரிஸுத்த ஆவிகெ ஸக்திஹால் ஜுகு கார்யமுனுக் போதன கெர்யாஸ்.
நாசரேத் கா³ம்கெரெ ஏசுக் தேவ் பரிஸுத்த ஆவிகெ ஸக்திஹால் அபிஷேக் கெர்யாஸ். ஏசு ஸெங்கொ தேவ் ஹொதெஹால் பிஸாஸுகெ ஸக்திம் ஸம்டினி பொடெ அஸ்கினாக் ஏசு பரொ கெரி, சொக்கட்யெ கெர்லேத் அஸ்கி கா³முனுக் ஜியாஸ்.
தெனு பனிம்ரீ: கெட்டர் அவெவேளு, பகவான்கெ ஆவி பிலிப்புக் தேட்ரீ: பெல்லி ஜேட்யாஸ். பல்சொ மந்திரி பிலிப்புக் தெக்கெனி; ரி:யெத் மெளி தெனொ ஸொந்தோஷ்கன் அபுல் கா³முக் ஜியெஸ். (1 ரஜா 18:12; 2 ரஜா 2:11,16; எசே 3:12,14)