9 “அங்குன், மீ தும்கொ ஸங்கரியொ. மகுவொ, தேவ் தேன். வெக்குவொ, தேவ் அப்படன்; தெட்டுவொ, தேவ் கவாட் ஹுடன்.
மீ விசார் பொடெவேளு பகவானுக் ஸீ பொவெஸ்; பகவான் மொர் ப்ரார்தனாக் அய்கி மொர் விசார் ஜவட்யாஸ்.
பகவான்ஜோள் மீ ஒண்டெ மகெஸ்; தெல்லெ மொகொ புஜ்ஜய். “மொர் ஜிவ்னம் பூரா மீ பகவான்கெ த⁴வ்ராம் ர:னொ; பகவான்கெ ஸிங்காருக் ஸிலேத் ர:னொ; மீ தெங்கொ த்⁴யான் கெர்லேத் ர:னொ" மெனெஸ்தேஸ் மொர் ஆஸெ. (ஸங் 16:11; 18:6; 65:4; லூக் 2:37)
‘பகவான்கெ தோணுக் ஸா’ மெனி மொர் மொன்னு ஸங்கெஸ்; பகவானு, மீ தும்ரெ தோணுக் ஸாஸ்தக் ஆஸெகன் ஸே.
ஸிம்ஹு பில்லல்னு க²வ்ணம் நீ:ஸ்தக் பூ⁴க்கன் ர:வாய்; பகவானுக் வெக்கிலி அவஸ்தெங்கொ சொக்கட்யெ ஒண்டெ மெளி உன்னொ பொட்னா.
மீ பகவானுக் ஸீ ப்ரார்தன கெரெஸ்; தெனு மொகொ ஜவாப் தியாஸ்; மொகொ அவெ அஸ்கி தா⁴குனுக் ஜவட்யாஸ்.
ஆபத் காலும் மொகொ ஸீ பொ³வொ; மீ தும்கொ கபடு; துமி மொகொ கெனம் கெரன்.
மொர் ப்ரேமுடுக் எதுர் ஸீ மீ கவாட் ஹுடிஸ். மொர் ப்ரேமுடுக் மீ ஸான் முஸெனி. தெனு ஜேட்யாஸ். தெங்கொ ஸெத்து³க் அய்கெ மொர் மொன்னு தெங்கொ பஸ்குடூஸ் ஜியெஸ். மீ தெங்கொ வெக்கிலி ஜீஸ். தெங்கொ ஸான் முஸெனி. தெங்கொ பொ³வி ஸீஸ். தெனு மொகொ ஜவாப் தியானி.
மீ ரகசியம்கன் வத்தொ கெர்ரெனி; கொங்கினாக் களானாஸ்தக் ஹந்தாரும் ஸங்கிரெனி. மீ இஸ்ரயேல்னுக் விருதாகன் பொவி மொர் ஆக்³ஞான்தானுக் சல்த கெல்லுவொ மெனி ஸங்கிரெனி. பகவான்கன் ஸேஸ்தெ மீ நிஜ்ஜம்யெ ஸங்கரியொ; நீதி ஹொயெஸ்தேஸ் மெனரியொ.
துமி மொர் நாவ் ஸங்கி மொகொ பாய்ம் பொடன்; மொகொ ஸீ ப்ரார்தன கெரன்; மீ தும்கொ ஜவாப் தொவு.
மொகொ ஸீ ப்ரார்தன கேர்; மீ தொகொ ஜவாப் தொ³வு; தொகொ களானாஸ்தெயெகின், துரெ புத்திக் அந்தானாஸ்த ம:ட்ட க்ரியானுக் மீ கெரு.
தெப்பொ மீ உபவாஸ் ரீ: து³க்கு வஸ்தர் பி²ல்லி, மத்திம் பி³ஸி, மொர் தேவ் ஹொயெ மொர் மஹா ப்ரபுஜோள் ஜுகு மெல்லியெஸ்.
துமி விஸ்வாஸ்கன் ப்ரார்தன கெரெதி, மகஸ்த அஸ்கி கள்ளன்" மெனி ஸங்க்யாஸ்.
எங்கொ தீ³தெங்காம் பா³புக் ஒப்பயெதானுக் கெரெஸ்தெனொ கோன்?" மெனி புஸ்யாஸ். தெல்லெகொ தெனு “ம:ட்டதெனொ" மெனி ஸங்க்யாஸ். ஏசு தெங்கொஜோள், “வரி வசூல் கெரஸ்தெனுகின், மோல் பெட்கின் தும்கொ ஸொம்மர் முல்லொகன் தேவுகெ ராஜ்யமுக் பாத்யம் கெல்லன்" மெனி தீ⁴ர்குகன் மீ தும்கொ ஸங்கரியொ. (லூக் 18:14)
ம:ட்ட தனவான்கன் ஹொதெ சாலமோன் ரஜொ மெளி எல்லெ பூ²லுன்ஸோன் ஸிங்கார் வஸ்தர் க⁴ல்லி ஹொதெனி மெனி தீ⁴ர்குகன் மீ தும்கொ ஸங்கரியொ.
தேஹாலிம் துமி ப்ரார்தன கெரஸ்தவேளு காய் மகன்கீ தெல்லெ கள்ளிடியாஸ் மெனி விஸ்வாஸ் கெருவொ; துமி மகெதானுக் அப்பய்.
மீ தும்கொ அஸ்கினாக் எல்லெ ஸங்கரியொ. ஜாக்ரதகன் ர:வொ’’ மெனி மென்யாஸ்.
காமெனெதி மகஸ்தெனு கள்ளன். வெக்கஸ்தெனு தெக்கி தெரன். தெட்டஸ்தெங்கொ ஹுடாய்
பெடா வாட்கன் பா³ப் மஹிமெ பொந்தஸ்தக் துமி மொர் நாவ்ஹால் காய் மகராஸ்கீ தெல்லெ அஸ்கி மீ கெரு.
துமி மொகொ களைளியானி. மீஸ் தும்கொ களைளியெஸ். துமி பொள்ளொ தேஸ்ததானுக்கின், தெல்லெ பொள்ளொ நிள்சி ரா:ஸ்ததானுக் மீ தும்கொ ந்யமுன் கெரெஸ். துமி மொர் நாவ்ஹால் பா³ப்ஜோள் மகஸ்தஅஸ்கி தெனு தும்கொ தேன்.
துமி மொர் ஸெந்தொகின், மொர் வத்தான் தும்ரெ ஸெந்தொ நிள்சி ரி:யெதி துமி ப்ரேவ் பொடி மகஸ்த அஸ்கி தெனி பொடய்.
ஏசு தெகொ ஸீ, “தேவுகெ தெ⁴ரும் கிஸான்யெ மெனிகின் பேஸ்தக் பனி தே மெனி துரெஜோள் மகஸ்தெனு கோன் மெனி தொகொ களைரி:யெதி தூஸ் தெங்கொஜோள் பனி மகி ரா:ய். தெனு மெளி தொகொ நிஜ்ஜம் ஜிவ்னம் தேரிய பனிக் தீரா:ன்’’ மெனி ஸங்க்யாஸ். (எரே 2:13; 17:13; யோவா 7:38)
மொன்னு தில்ல ஸுட்டுனாஸ்தக் கொப்பிம் சொக்கட்யெ கெரி, மஹிமெகின், கெனம்கின், நாஸ் ஹோனா ஜிவ்னம் அப்பய் மெனி நொம்கெகன் ஜிவெதி நித்ய ஜிவ்னம் அப்பய்.
காமெனெதி “ஸெர்க ஹொயெ கெ⁴டிம் மீ தும்ரெ ப்ரார்தனாக் அய்கி ஜவாப் தியெஸ். தும்கொ ரக்ஷண் கெரஸ்தக் தின்னு அவெவேளு மீ தும்கொ ஹேது கெரெஸ்" மெனி தேவ் ஸங்கிரியாஸ். ஏலா, தேவ் தும்கொ ஹேது கெரரிய காலு எல்லேஸ்; ரக்ஷண் கெரரிய தின்னு எல்லேஸ். (ஏசா 49:8)
விஸ்வாஸ் நீ:ஸ்தக் கொன்னின் தேவுக் ஒப்பயெஸ்தெனொகன் ரா:ன் முஸுனா. காமெனெதி தேவுக் களைளுனொ மெனி ஹவ்டஸ்தெனொ தெனு ஜீவ் ஸெந்தொ ஸே மெனிகின், தெங்கொ பாய்ம் பொடஸ்தெங்கொ தெனு ப²லன் தேராஸ் மெனி விஸ்வாஸ் கெர்னொ.
தேஹாலிம் தேவுகெ ஒத்தாஸ் அம்கொ கொப்பொ பஜெ மெனெத் மெளி, தெங்கொ கிருபொ பொரெ ஸிங்காஸனம் லெகுத்த அமி தைர்யம்கன் ஜவாய். தேட்ரீ: தேவுகெ தயவுகின், கிருபொ அம்கொ அப்பய்.
தும்ராம் கொங்கதி ஞான் உன்னொ ரி:யெதி, தெனொ தேவ்ஜோள் மகந்தக். தெனு தெகொ ஞான் தேன். தெனு அஸ்கினாக் லெ:க்க நீ:ஸ்தக் ஸொந்தோஷ்கன் தேஸ்தெனு.
விஸ்வாஸ்கன் கெரரிய ப்ரார்தன வியாதினுக் ஜவடய். பகவான் தெகொ பரொ கெரன். தெனொ பாப் கெரி ரி:யெதி தேவ் தெகொ க்ஷமொ கெரன்.
அமி தேவுகெ ஆக்³ஞான்தானுக் ஜிவி, தேவுக் ஒப்பயெஸ்தெ கெரெதி, அமி மகஸ்த அஸ்கி தெனு அம்கொ தேன்.
“எல்லெ தியத்தீரா பட்ணமுகெ ஸபா மென்க்யானும் தெவ்டதெனு யேசபேல்கெ போதனான்தானுக் ஜிவ்யானி. ‘சாத்தான்கெ லோத் ஞான்’ மெனி ஸங்கினி பொடரிய துஷ்ட க்ரியான் தும்கொ களய்ரெனி. தேஹாலிம் மீ தும்கொ ஸங்கரியொ: மீ அவஸ்த லெங்கு துமி விஸ்வாஸும் தீ⁴ர்குகன் நிள்சி ர:வொ.