4 அம்கொ விரோத்கன் சூக் கெரரிய அஸ்கினாக் அமி க்ஷமொ கெரரியஸோன் அம்ரெ சூகுனுக் மெளி க்ஷமொ கெருவொ. அம்கொ ஸோதன அவ்னாஸ்ததானுக் சல்த கெருவொ. ஹீன் கெரஸ்தெகொஜோள்ரீ: அம்கொ கபடுவொ’’ மெனி ஸிக்கடி தியாஸ்.
துமி ஸோதனாம் ஸம்டுனா ர:னொ மெனெதி ஜகிலேத் ரீ: ப்ரார்தன கெருவொ. தும்ரெ மொன்னு உற்சாவ்கன் ஸே. ஸரீர்கீ பலஹீன்கன் ஸே" மெனி ஸங்க்யாஸ்.
சூகுனுக் ம:ட்ட கெர்லுனாஸ்தக் ஸெர்சிலி ர:னொ. கொங்க ஹொல்லெதீ தும்கொ மொன்னு பா³த ரி:யெதி கிறிஸ்து தும்கொ க்ஷமொ கெரெஸோன் க்ஷமொ கெருவொ. (எபே 4:32)
துமி மெளி தும்ரெ பை⁴ பெ⁴ய்னான்கெ சூகுனுக் மொன்னுஜந்த க்ஷமொ கெர்னா ஜியெதி, பரலோகும் ஸேஸ்தெ மொர் பா³ப் தும்ரெ பாபுனுக் க்ஷமொ கெர்னான்" மெனி மென்யாஸ். (மத் 6:15)
காமெனெதி தயவு கெர்னாஸ்தெகொ தயவு நீ:ஸ்த நியாவ் ஸார்வோஸ் அப்பய். தயவு கெரஸ்தெனொ தேவுகெ நியாவ் ஸார்வாக் தக்கஸ்த வேஸ் நீ:
அஸ்கி ப்ரசனாம்ரீ: தேவ் மொகொ கபடி, அபுல் உன்னத ராஜ்யமும் மொகொ செர்சுலன். தெங்கோஸ் கொப்பிம் மஹிமெ அப்பந்தக். ஆமென்.
பகவான்கீ நொம்கெ ஹொயாஸ்தெனு; தெனு தும்ரெ மொன்னுக் தைர்யம் தீ³, ஹீன் கெரஸ்தெகொஜோள்ரீ: தும்கொ கபடன்.
மென்க்யானுக் அவரிய ஸோதனோஸ் தும்கொ மெளி அவய். தெகொ மிஞ்சி வேன் ஸோதன அவ்னா. தேவ் நொம்கெ ஹொயாஸ்தெனு. தும்ரெ ஸக்திக் மிஞ்சி ஸோதன பொந்தஸ்தக் தேவ் அநுமதி தேனான். ஸோதன அவஸ்தவேளு தெல்யெ ஸகிஞ்சுலஸ்தக் தேவ் தும்கொ பலம் தீ³ தெமாம்ரீ: பராட் அவஸ்தக் வாட் தெக்கடன்.
புலோகு ஜிவ்னமும்ரீ: தெங்கொ அலக்க³ கெர்னொ மெனி ப்ரார்தன கெரரியொ நா: ஹீன் கெரஸ்தெகொஜோள்ரீ: துமி தெங்கொ கபட்னொ மெனீஸ் மீ ப்ரார்தன கெரரியொ.
‘துமி ககொ நிஞ்ஜிரியாஸ்தெ? ஸோதனாம் ஸம்டுனாஸ்ததானுக் ஜகிலேத் ரீ: ப்ரார்தன கெருவொ’’ மெனி ஸங்க்யாஸ்.
தெய்டா தாமுனும் பொடெ வித்துளுக் நிகர்கன் ஸேஸ்தெனு தேவுகெ வத்தாக் ஸொந்தோஷ்கன் அய்கன். ஹொயெதி தெனு மூள் நீ:ஸ்தெனு. ருவ்வொ தின்னு நொம்கெகன் ரீ: ஸோதன காலும் பஸ்கட் ஜேடன்.
பகவான்ஜோள் துமி பிரி அவி, “அமி கெரெ பாபுனுக் க்ஷமொ கெருவொ. தயவு கெரி அம்ரெ ப்ரார்தனாக் அங்கிஹார் கெருவொ. அமி தும்கொ ஸ்துதி கெரி ஸ்தோத்ரு பலி தேன்.
மொர் மஹா ப்ரபு, அம்ரெ ப்ரார்தனாக் அய்குவொ. மொர் மஹா ப்ரபு, அம்ரெ பாபுனுக் க்ஷமொ கெருவொ. மொர் மஹா ப்ரபு, அம்ரெ ஸெத்து³க் கான் தீ³அய்குவொ. மொர் தேவு, துமீஸ் தேவ் மெனி அஸ்கின் களைளஸ்தக் ஸெணம் அம்கொ கபடுவொ. காமெனெதி எல்லெ பட்ணம்கின், ஏட் ஸேஸ்தெ இஸ்ரயேல்னு தும்கோஸ் பாத்யம்” மெனி மீ ப்ரார்தன கெரெஸ்.
மொர் கஷ்டமுக்கின், மீ பொந்தரிய பாதாக் ஸவொ; மொர் பாபுனுக் க்ஷமொ கெருவொ.
மொன்னு தில்ல ஸுட்டுனாஸ்தக் தூ மொர் போதனானுக் அய்கி ஜிவெஹால், புலோகுர் அஸ்கினாக் ஸோதன அவரிய காலும் மீ தொகொ கபடு.
தொகொ அவஞ்ஜாரிய ஹிம்ஸானுக் ஹவ்டி தக்குங்கொ. தொகொ பரிக்ஷ கெரஸ்தக் பிஸாஸு தும்ராம் தெவ்டதெங்காக் காராம் தொப்பய். தெ³ஸ்ஸு தின்னு தூ ஹிம்ஸொ பொந்தய். மொரன் அவெத் மெளி விஸ்வாஸும் நிள்சி ரா: மீ தொகொ ஜீவ் தேரிய ஜெய க்ரீடு தொ³வு.
பகவான் தொகொ அஸ்கி ஆபத்தும்ரீ: கபடன்; தெனு துரெ ஜீவுக் கபடன்.
பகவானு, தயவு பொரெ தும்ரெ நாவுக் தகெதானுக் மீ கெரெ அக்ரமமுக்கின் சூகுனுக் க்ஷமொ கெருவொ.
பரலோகும்ரீ: துமி தெங்கொ ஸெத்து³க் அய்கி, இஸ்ரயேல்கெ ரஜொகின், தெங்கொ மென்க்யான் கெரெ பாபுனுக் க்ஷமொ கெருவொ. தெனு சொக்கட்யெ கெரஸ்தக் தெங்கொ ஸிக்கடி தெவொ. துமி தெங்கொ பாத்யம்கன் தியெ தேஸும் பொவுஸ் பொடடுவொ.
பரலோகும்ரீ: துமி தெங்கொ மெல்லினிக் அய்கி தெங்கொ பாபுனுக் க்ஷமொ கெருவொ. விரோதின்ஜோள்ரீ: தெங்கொ ஸொடுவி கெரி தெங்கொ ஒள்ட்யானுக் தியெ தேஸுக் பிரி பெல்லி அவொ.
ஸகல துஷ்ட க்ரியானும்ரீ: மொகொ கபடெ தேவு தூதுகன் தெனு ஹொத்யாஸ். மொர் பில்லல்னுக் மெளி தெனூஸ் ஆஸீர்வாத் கெர்னொ மெனி மீ தேவ்ஜோள் மெல்லரெஸ். மொர் நாவ்கின், மொர் ஒள்ட்யான் ஆபிரகாம், ஈசாக்குகெ நாவுன் எங்கொ வாட்கன் நிள்சந்தக். பு⁴லோகுர் எனு விருத்தி ஹொயி எங்கொ ஸந்ததின் அத்தி³ ஹோந்தக்” மெனி மெனெஸ். .
அங்குன் ஏசு தெங்கொ ஸீ, “தும்ராம் ஒண்டெதெனொ அபுல் ஸிங்கதிகெ கே⁴ருக் ஹத்து³ ராதும் ஜீ,
சீலோவாம் கா³மும் கொபுர் பொடி 18 (அடார்) மென்க்யான் மொர்யாஸ்னா; தெனு எருசலேமும் ஜிவரிய துஸ்ர மென்க்யான் ஸொம்மர் சூக்வான் மெனி ஹவ்டராஸ்தெகீ?