22 ஆரோன்கெ ஸந்ததினும் மஹா ப்ரதான ப⁴ட்டர்கன் அபிஷேக் கெர்னி பொடஸ்தெனொ தோ²ர் தோ²ர்னுகன் எல்லெ நியதின்தானுக் சல்த கெல்லுனொ. பகவானுக் ஸமர்பண கெரெ தான்ய பலிக் விஸ்தவும் தகி ஜெள்னொ.
ரி:யெத் மெளி தெங்கொ ஹனி ஹிம்ஸொ கெர்னொ மெனஸ்தேஸ் பகவான்கெ சித்தம். அம்ரெ பாபுனுக் ஜவடரிய பரிஹார பலிகன் தெனு அபுல் ஜீவுக் ஒப்பிஞ்சி தியாஸ்; தேஹாலிம் தெனு அபுல் ஸந்ததினுக் ஸான்; தெனு தீர்க ஆயுஸுகன் ஜிவன்; தெங்கொ வாட்கன் பகவான்கெ சித்தம் பூர்தி ஹொயெஸ். (2 கொரி 5:21)
மொர் மென்க்யான் பாப் கெரெதி தும்கொ வேன் ஸொந்தோஷ் லகரெஸ். தெனு அபுல் பாபுனுக் பரிஹார்கன் தேரிய தட்சணானுக் கய்தி துமி ஸுகம்கன் ர:னொ மெனி ஹவ்டராஸ்.
மந்தானுக்கின், ரெகதுக் கொன்னின் காஹோனா; இஸ்ரயேல்னு கோட் ஜிவெத் மெளி தோ²ர் தோ²ர்னுகன் எல்லெ ப்ரமாணுக் ஹவ்டன் தொவ்லுனொ.
தெல்லெ பெண்டுகெ தொஸ்கர் அபுல் ஹாத் தொவி, தகன பலி தேரிய தாமும் எல்லெ பெண்டுக் மெளி செக்குனொ. பாபுக் பரிஹார்கன் தெனி பொடரிய பலி எல்லேஸ்.
“அபிஷேக் கெர்னி பொடெ மஹா ப்ரதான ப⁴ட்டர் காய்தி பாப் கெரெதி, அஸ்கி மென்க்யான் ஹொல்லெ தெல்லெ சூக் ரா:ய். தேஹாலிம் தெனொ கெரெ பாபுக் பரிஹார்கன் அங்கஹீன் நீ:ஸ்த ஒண்டெ து³டாக் பலி தெ³னொ.
பல்சொ ப⁴ட்டர் அபுல் கேடுர் கஷ்டொ பந்திலி, பஷுது அங்கி க⁴ல்லி, பலி பீடமும் ஜெளெ மூகுகெ ராகுக் வரி பலி பீடம் லெகுத்த லுச்சுனொ.
பல்சொ ப⁴ட்டர் அபுல் பஷுது அங்கிக் ஹெட்டிகி, துஸ்ர வஸ்தர்னுக் க⁴ல்லி, பலி பீடம் லெகுத்த லுச்செ தெல்லெ ராகுக் வரி, கா³மு பராட் ஸுத்தி⁴கன் ஸேஸ்தேட் லுச்சுனொ.
ஸண்கிம் தேல் ஸொடி தெல்லெ பீடுக் ப⁴கிரிகன் புஞ்ஜுனொ. புஞ்ஜெ ப⁴கிரினுக் தெ³ஸ்ஸு குட்கொகன் கெரி பகவானுக் தான்ய பலிகன் தெ³னொ. இஸனி தான்ய பலிகன் தேரிய தட்சணான் பகவானுக் ஒப்பாய்.
பூரா தான்ய பலிக் விஸ்தவும் தகி ப⁴ட்டர் ஜெள்னொ. கொன்னின் காஹோனா.
பல்சொ பெகுலாக்கின், பாய்ஞ்னுக் பனிம் து⁴வி பெ⁴ண்டுகெ துஸ்ர பொஸுலான் ஸெந்தொ தொவி ஜெளெஸ். இஸனி தகன பலி தேரிய தட்சணான் பகவானுக் ஒப்பாய். பகவான்கெ ஆக்³ஞான்தானுக் மோசே எல்லெஅஸ்கி கெரெஸ்.
தெக பல்சொ, அமி பெனெயாக்கான் லெகுத்த பேரோத்ரீ: மோசெரா கா³முக் ப்ரயாண் கெர்யாஸ். தேட் ஆரோன் மொஜ்ஜியெஸ். அமி தெகொ க³டஸ்தலமும் தொவ்யாஸ். தெகொ ப⁴ர்தி தெகொ பெடொ எலெயாசார் மஹா ப்ரதான ப⁴ட்டர்கன் நியமுன் கெர்னி பொடெஸ். (ஸங்க் 20:25-28)
அங்குன், ஜுண்ண நியமந்த்தானுக் ப⁴ட்டர் ஹொயாஸ்தெனு கொப்பிம் நிள்சி ரா:னான். காமெனெதி தெங்கொ மொரன் அவ்டரியஹால் ஜுகுதெனு ப⁴ட்டர்கன் ந்யமுன் கெர்னி பொடராஸ்.