29 தும்கொ பூக் வேன் அவி தும்ரெ ஸொந்தம் பில்லல்னுக் மெளி செக்கி கான்.
தும்ரெ விரோதின் பட்ணமுகெ ரவுளுக் பொடி தகி, தும்கொ அஸ்கினாக் ஹிம்ஸொ கெரஸ்தவேளு துமி க²வ்ணம் நீ:ஸ்தக் பாத பொந்தன்; தெப்பொ தும்கொ பூக் வேன் ஹொயி தும்ரெ ஸிங்கதினுக்கின், தும்ரெ பில்லல்னுக் மெளி செக்கி கான் மெனி பகவான் ஸங்கராஸ் மெனி மென்திகி,
பகவானு, துமி கொங்கக் இஸனி கெர்ரியாஸ் மெனஸ்த ஹவ்டி ஸவொ. பெய்லான் ப்ரேவ்கன் ஹொவ்டெ அபுல் பில்லல்னுக்கின், தெனு ஜெனெ பில்லல்னுக் க²னொ பொள்டியொனா! ப⁴ட்டர்னுகின், தீர்கதரிஸின் மொர் மஹா ப்ரபுகெ த⁴வ்ராம் ஹத்யொ கெர்னி பொடராஸ்னா!
பெய்லான் மெளி அபுல் பில்லல்னுக் ஸிஜ்ஜடி கயாஸ். மொர் மென்க்யான் நாஸ் ஹொயி பாத பொந்தெவேளு தெங்கொ எல்லெ கொடூரம் சலெஸ். (உபா 28:57; எசே 5:10)
எருசலேமும் ஜிவரிய மாய் பா³புன் அபுல் பில்லல்னுக் செக்கி கான். பில்லல்னு மெளி அபுல் மாய் பா³புனுக் செக்கி கான்; இஸனி மீ தும்கொ ஜுகு மோஸ்கன் தண்டன தொ³வு; அங்குன் ஜீவ் ஸெந்தொ ஸேஸ்தெ மென்க்யானுக் மீ துஸ்ர தேஸுனுக் தெர்மி ஸொடு. (ரொட்னி 4:10)
தெல்லெ தின்னுநும் கெ⁴ர்வார் பெய்லான்கின், தூத் தேரிய பெய்லான் ஜுகு பாத பொடன்.
காமெனெதி ஒண்டெ தின்னு அவய். ‘கொ³ட்டுன் பாக்யவதின்’ மெனிகின் ‘நு:ருன் ஜென்னாஸ்தெனுகின், தூ³த் தேனாஸ்தெனு பாக்யவதின்’ மெனி மெனன்.