2 “துமி இஸ்ரயேல்னுஜோள் இஸனி ஸங்குவொ: துமி காஸ்தக் அநுமதி தெனி பொடெ மூகுன் கோன்யெமெனெதி:
தெல்லெகொ மீ, “மஹா ப்ரபு பகவானு, மீ அண்டுவான் நா: ந:ன்ன ஒர்ஸுரீ: அத்தொ லெங்கு மொஜ்ஜியெ மூகுக்தீ, துஸ்ர மூகுன் ஹனி தகெ பொ³ஸுலாக்தீ கய்ரெனி; அண்டு ஹொயெ பொ³ஸுலாக் மீ கொப்பிம் கய்ரெனி” மெனி ஸங்கெஸ்.
ரஜாகெ விஸேஷ க²வ்ணமுக்கின், திராட்செ ரெஸ்ஸுக் பீதி அபுலுக் அண்டு கெல்லஹோனா மெனி தானியேல் அபுல் மொன்னும் தீ⁴ர்குகன் தீர்மான் கெல்லியெஸ். த்யெதானுக் ரா:ஸ்தக் தெனொ ரஜாங்குகெ ப்ரதான அதிகாரிஜோள் அநுமதி மகெஸ்.
பகவான் மோசேக்கின் ஆரோனுக் ஸீ,
இஸான் ஜீவுனுக் துமி காஹோனா. தெல்லெ ஜீவுன் தும்கொ அண்டுகன் ரா:ய். துமி தெல்லெகொ ஹாத் மெளி தெரஹோனா.
பக்ஷினும் தும்கொ அண்டுகன் ஸேஸ்தெ: திஸ்ளொ, கெ⁴ருட், மாம்ஸ பக்ஷி,
தெமாம் தெவ்ட கிடான் ஹுடய். துங்கி ஜாஸ்ததானுக் பாய்ஞ் மெளி ரா:ய். திஸான் ஜீவுனுக் துமி கவாய்.
சலரிய ந:ன்ன ஜீவுனும் தும்கொ அண்டுகன் ஸேஸ்தெ: ஹுந்திர், சுஞ்சு, கஸ்பொ,
ப²ங்கிலின் ஸேஸ்தெ மூகுனுக்கின், லுமரிய மூகுனுக் துமி கவாய்.
பனிம்தீ, க²வ்ணமும்தீ பொள்டியெதி தெல்லெ பனிகின் க²வ்ணம் அண்டு ஹோய்.
துமி காஸ்தக் மெனி ஸேஸ்தெ ஜீவுனும் கோனதி ஒண்டெ மொரி ர:த, மொஜ்ஜியெ மூகுக் ஹாத் தெரெ மெனிக் வீள்டொ லெங்கு அண்டுகன் ரா:ய்.
தெவ்ட மூகுன் லுமய். ஹொயெதி ப²ங்கிலின் ரா:னா. தெல்லெ மூகுக் துமி காஹோனா. உதாரணகன் முயி லுமய். ஹொயெதி தெக ப²ங்கிலின் ஜுண்ணா. தேஹாலிம் தெல்லெ அஸுத்த⁴ மூகு. துமி முயிக் காஹோனா.
திஸோஸ் பனிம் ஜிவரிய ஜீவுனும் பொக்குகின், அள்நி ஸேஸ்தெ ஜீவுனுக் துமி கவாய்.
தோண் பிஸ்தர் ஜாரிய க²வ்ணம் மெனிகுக் அண்டு கெர்னா. மொன்னும்ரீ: பராட் அவஸ்தேஸ் மெனிகுக் அண்டு கெரய்" மெனி ஸங்க்யாஸ்.
வெகுள வெகுள நொவ்வொ போதனாக் அய்கிலேத் ரா:ஹோனா. காய் கவாய், காய் காஹோனா மெனரிய போஜன ப்ரமாண் முக்யம் நா: தேவுகெ கிருபொஹால் மொன்னுக் பலம் கெல்லஸ்தேஸ் முக்யம். போஜன ப்ரமாண் கொக்கிக் ஒத்குனா.
காஸ்த, பேஸ்த, ஸுத்தி⁴ கெரரிய க்ரியான் ஸரீர ஸுத்தி⁴க் ஸம்பந்தம் ஹொயெஸ்தெ. தேவ் அஸ்கிதெக நொவ்வொகன் உரு கெரரிய தின்னு லெங்குமூஸ் எல்லெ ஆசார்னுன் ரா:ய்.