2 பகவான் யோசுவாஜோள், “ஏலா, எரிகோ பட்ணமுக்கின், தெகொ ரஜாக்கின், பலம் பொரெ யுத்த வீருடுன் அஸ்கினாக் துரெ ஹாதும் ஒப்பிஞ்சி தீடியொ.
தாவீது பகவான்ஜோள், “மீ தெல்லெ பெலிஸ்தியர்னுக் விரோத்கன் யுத்தமுக் ஜவாய்கீ? துமி தெங்கொ மொர்ஜோள் ஒப்பிஞ்சி தேன்கீ” மெனி புஸெஸ். பகவான் தெகொஜோள், “தூ ஜா. நிஜ்ஜம்கன் தூ தெங்கொ அஸ்கினாக் ஜெகிஞ்சய்” மெனி ஸங்க்யாஸ்.
தெங்கொ ஸந்ததினுக் கானான் தேஸுக் பெல்லி அவ்யாஸ். தேட் ஜிவரிய மென்க்யானுக் தெனு ஜெகிஞ்சஸ்ததானுக் கெர்யாஸ். துமி தெல்லெ தேஸுக்கின், தெல்லெ தேஸு ரஜானுக்கின், மென்க்யானுக் தெங்கொ ஹாதும் ஒப்பிஞ்சி தியாஸ். தெங்கொ மொன்னுக் ஒப்பயெஸ்தெ தியாஸ்.
புலோக் பூரா தெங்கொ ஹாதும் ஸே; ரஜானுக் தொப்பிதி துஸ்ர ரஜானுக் ந்யமுன் கெரராஸ். தெனூஸ் ரஜானுக் ஞான்கின் புத்தி தேராஸ்.
எல்லெ ரஜான் ராஜ்ஜலரிய தின்னுநும் பரலோகு தேவ், நாஸ் ஹோனாஸ்த ஒண்டெ நித்ய ராஜ்யமுக் ஸ்தாபிதம் கெரன். தெல்லெ ராஜ்ய பாத்யம் துஸ்ர கொங்கினாக் தெனி பொட்னா. எக முல்லொ ஹொதெ அஸ்கி ராஜ்யமுனுக் தெல்லெ புர்கொ கெரய்.
உன்னத தேவுகெ தீர்மான்தானுக் ரஜாக் எல்லெ தண்டன அப்பரியஹால் தேவூஸ் புலோகுர் ஸேஸ்தெ ஸகல ராஜ்யமுனுக் சல்த கெரராஸ் மெனி அஸ்கின் களைளன். தேவ் அபுல் மொன்னுக் ஒப்பயெதெங்கோஸ் ராஜ்ஜலரிய அதிகார் தேராஸ் மெனிகின், துர்பளுக் மெளி ராஜ்ஜலரிய பாத்யம் தேவ் தேன் முஸய் மெனி அஸ்கின் களைளன்.”
புலோகு ராஜ்யமுன் தேவுகெ ஸநிம் ம:ட்ட லெ:க்க நா: தேவு தூதுனுக்கின், புலோகு மென்க்யானுக் தெனு அபுல் சித்தம்தானுக் சல்த கெரராஸ். துமி ககொ இஸனி கெரராஸ்தெ மெனி கொன்னின் தேவுக் புஸன் முஸுனா.
“ரஜானு! உன்னத தேவ் தும்ரெ பா³ப் நேபுகாத்நேசருக் எல்லெ தேஸுக் ராஜ்ஜலரிய அதிகார்கின் ஸக்திகின் கெனம் தீ³ ஹொத்யாஸ்.
கானான் தேஸு ரஜானுக் துமி ஜெகிஞ்சன். தெங்கொ நாவ் மெளி எல்லெ புலோகுர் ரா:னாஸ்ததானுக் துமி தெங்கொ அஸ்கினாக் நாஸ் கெருவொ. தெல்லெ தேஸு மென்க்யான் பீர் தும்கொ விரோத்கன் அவன் முஸுனாஸ்ததானுக் துமி தெங்கொ அஸ்கினாக் நாஸ் கெருவொ.
இஸ்ரயேல்னு ஜெகிஞ்செ பட்ணமுன்கெ நாவுன் எல்லேஸ்: எரிகோ, பெத்தேலுக் லெகுத்த ஹொதெ ஆயி.
அங்குன் தெனு யோசுவாஜோள், “தெல்லெ தேஸுக் பகவான் அம்கொ தீடியாஸ்” மெனி தீ⁴ர்குகன் ஸங்க்யாஸ். “தேட் ஜிவஸ்தெனு அம்கொ ஹவ்டி தக்கி ஒண்கராஸ்” மெனி மென்யாஸ்.
“தும்ரெ பகவான் எல்லெ தேஸுக் ஜெகிஞ்சி தும்கொ பாத்யம்கன் தேன் மெனி மொகொ களாய். காமெனெதி தும்கொ தெ⁴ரெ தாக் அம்ரெ மென்க்யான் அஸ்கினாக் ஸே. தும்கொ ஹவ்டி அஸ்கின் ஒண்கராஸ்.
பகவான் யோசுவாஜோள்,
இஸ்ரயேல்னுக் தக்கி எரிகோ மென்க்யான் அபுல் பட்ணமு தா³ரு கவாடுக் ஜ²கி தொவ்தியாஸ். கொன்னின் பட்ணமுரீ: பராட் ஜியானி. பிஸ்தர் அவ்யானி.
தேஹாலிம் அத்தொ ப⁴ட்டர்னு பகவான்கெ நியமந்த் பெடிக் அபுல் காந்துர் தொவ்லி தும்ரெ ஸெங்கொ அவ்னொ. தூகின் துரெ ஸெங்கொ ஸேஸ்தெ அஸ்கி யுத்த வீருடுன் ஒண்டெ தின்னுக் ஒண்டெவாள் பட்ணமுக் சுட்டு பிரி அவொ. இஸனி ஸோ தின்னு லெங்கு கெருவொ.
பகவான் யோசுவாஜோள், “தா⁴க் நொக்கொ; திகில் நொக்கொ; தூ அஸ்கி யுத்த வீருடுனுக் பெல்லி ஆயி பட்ணமுக் நிகிளி ஜா. ஏலா! தெல்லெ பட்ணமு ரஜாக்கின், தேட் ஜிவரிய அஸ்கி மென்க்யானுக் துரெ ஹாதும் ஒப்பிஞ்சி தேரியொ.
ஹொயெதி இஸ்ரயேல்கெ தேவ் பகவான் சீகோன் ரஜாக்கின், தெகொ மென்க்யானுக் ஜெகிஞ்சஸ்தக் ஹேது கெர்யாஸ். இஸ்ரயேல்னு எமோரிய தேஸுக் ஜெகிஞ்சி தெங்கொ பாத்யம் கெல்லியாஸ்.
அத்தொ தூ தெல்லெ தாமுனுக் பாத்யம் கெல்லுனொ மெனி ஹவ்டஸ்த ஸெர்ககீ? துரெ தெய்வு காமோஸ் தொகொ தேரிய தாமுனுக் தூ பாத்யம் கெல்லுனா ரா:ய்கீ? திஸோஸ் அம்ரெ தேவ் பகவான் அம்கொ பாத்யம்கன் தியெ தாமுனுக் அமி கள்ளுனா ரா:ன்கீ?