11 யூதா தேஸும் தொங்கரு தாமுனும் ஸேஸ்தெ எபிரோன் மெனரிய கீரியாத்அர்பா பட்ணம்கின், தெக சுட்டுர் ஸேஸ்தெ கச்சலு தாமுன் தெங்கொ அப்பெஸ். அர்பா மெனஸ்தெனொ ஆனாக்கியர்னுகெ பா³ப்.
த்யெதானுக் யூதா தேஸும் எப்ரோன் பட்ணம்கின், தெக சுட்டுர் ஸேஸ்தெ கச்சலு தாமுன் தெகொ தெனி பொடெஸ்.
பல்சொ மரியாள், தொங்கரு தேஸ் யூதேயாம் ஜிவெ அபுல் ஒஸ்து சகரியாகெ கே⁴ருக் பி³ஸ்ஸகன் ஜீஸ்.
சார் ஒர்ஸு பல்சொ அப்சலோம், ரஜொ ஜோள் ஜீ, “மீ பகவான்ஜோள் ஒண்டெ கொரிக்கல் கெல்லரியொ. தெல்லெ பூர்தி கெரஸ்தக் மீ எப்ரோன் கா³முக் ஜாஸ்தக் மொகொ அநுமதி தெ³னொ.
தெனு எபிரோனும் ஜிவெ கானானியர்னுக் விரோத்கன் யுத்தம் கெர்யாஸ். (எல்லெ எபிரோன் முல்லா காலும் கீரியாத்அர்பா மெனி பொவ்னி பொடெஸ்.) தெனு தேட் ஜிவெ சேசாய், அகீமான், தல்மாய் குல மென்க்யானுக் மெளி ஜெகிஞ்ச்யாஸ். (நியா 1:20; ஸங்க் 13:22; யோசு 15:14)
உம்தா, எபிரோன், கீரியாத்அர்பா, சீயோர்; எல்லெ பட்ணமுன்கின், தேட் ஸேஸ்தெ கிராமமுன் லெ:க்க 9 (நொவ்யெ.)
எபிரோன் மெனரிய எல்லெ பட்ணமு நாவ் ஒண்டெ காலும் கீரியாத்அர்பா மெனி ஹொதெஸ். அர்பா மெனரிய ஏனாக்கிய மெனிக் கெனம் பொந்தெஸ்தெனொகன் ஹொதெஸ். தெனொ யுத்தம் கெரி எல்லெ தேஸுக் பாத்யம் கெல்லி ஹொதெஸ். தெக பல்சொ தெல்லெ தேஸு மென்க்யான் யுத்தம் நீ:ஸ்தக் ஸமதான்கன் ஹொத்யாஸ். (யோசு 11:23)
யாக்கோபு அபுல் பா³ப் ஈசாக்கு ஜிவரிய மம்ரே மெனரிய கா³முக் அவெஸ். தெல்லெ கா³ம் லெகுத்தோஸ் ஆபிரகாம்கின், ஈசாக்கு கீரியாத்அர்பா மெனரிய எபிரோன் கா³மும் ஜிவ்யாஸ். (ஆதி 13:18)
கானான் தேஸும் எபிரோன் மெனரிய கீரியாத் அர்பா பட்ணமும் தெனொ மொரிஸ். ஆபிரகாம் சாராளுக் ஹவ்டி ஜுகு விசார்கன் ரொடெஸ்.
லேவி கோத்ரும் உஜெ கோகாத்தியர்னுகெ குடும்பமுக் செரெ ஆரோன்கெ ஸந்ததினுக் முல்லா சீட் பொடெஸ். தெங்கொ தியெ பட்ணமுன்கெ நாவுன்:
பட்ணமுனுக் தடி ஹொதெ கச்சலு தாம்கின், தெக சுட்டுர் ஹொதெ கிராமமுன் எபுன்னேகெ பெடொ காலேபுக் பாத்யம்கன் அப்பெஸ்.
எப்ரோன், தீநா:ஸ்தக் அபுலுக்கின் அபுல் மென்க்யானுக் ஹேது கெரெ அஸ்கினாக் ப்ரேவ்தெ³னி தீ³ தட்டியெஸ்.