8 மோசேக் மீ தியெ ப்ரமாண புஸ்தவுக் தூ செவ்தி ஸா. ராத் தீ³ஸ் தெல்லெ வத்தானுக் த்⁴யான் கேர். தெல்லெ ஆக்³ஞான்தானுக் ஜிவெதி, தூ ஜாரிய தாமுனும் ஜுகு ஸுபிக்ஷம்கன் ரா:ய். (ஸங் 1:2)
வீள்டொ ஈசாக்கு சேன் பொங்குட் த்⁴யான் கெரஸ்தக் ஜிலேத் ர:த, துதூரும் முயின் அவ்லேத் ஸேஸ்தெ தெக்கெஸ்.
தேவுகெ வாட்தானுக் ஜிவஸ்தக் அபுலுக் ஸிக்கடி தியெ சகரியா ஜீவ் ஸெந்தொ ரி:யெ லெங்கு உசியா தேவுக் தக்கி ஜிவெஸ். தேவுகெ வத்தாதானுக் தெனொ ஜிவெ தின்னுநும் தேவ் தெகொ அஸ்கி விதமும் ஆஸீர்வாத் கெர்யாஸ்.
மீ தும்கொ விரோத்கன் பாப் கெர்னாஸ்ததானுக், தும்ரெ வத்தானுக் மொர் மொன்னும் தொவ்ல்ரியொ.
தும்ரெ ஆக்³ஞானுக் மீ த்⁴யான் கெரு; த்யெதானுக் மீ ர:வு. (ஸங் 104:34)
பகவானு! தும்ரெ ப்ரமாணும் மீ வேன் ப்ரேவ்கன் ஸே! தின்னு பூரா தெல்லேஸ் மொர் த்⁴யான். (ஸங் 1:2)
மொகொ போதன கெரெ மென்க்யான் ஸொம்மர் மீ வேன் ஞானிகன் ஸே; காமெனெதி மீ தும்ரெ நியதினுக் த்⁴யான் கெரெஹாலூஸ். (2 தீமோ 3:15)
மொகொ கபடரிய தொங்கர்கன் ஸேஸ்தெ பகவானு! மொர் தோணு வத்தான்கின், மொர் மொன்னு ஹவ்டன் தும்கொ ஒப்பயெதானுக் ரா:ந்தக்.
தும்ரெ நீதிக் மீ மொர் மொன்னும் ஜ²கி தொவ்லியெனி; துமி மொகொ ஹேது கெரெ விதமுக்கின், துமி நிஜ்ஜம் தேவ் மெனஸ்த அஸ்கினாக் மீ ஸங்கிரியொ; தும்ரெ மஹா ப்ரேவுக்கின், ஸத்ய வத்தானுக் தேவுகெ ஸபாம் மீ ஸங்குனா ரி:யெனி.
மொர் பெடா! மொர் போதனானுக் தூ விஷ்ரள்ளுங்கொ; மொர் ஆக்³ஞான் துரெ மொன்னும் ரா:ந்தக்.
பகவான் இஸ்ரயேல்னு ஸெந்தொ கெல்லரிய நியமந்த் எல்லேஸ்: “மீ மொர் ஆவிக் தும்கொ தீ³, பலம் கெரு; மொர் போதனானுக் தும்கொ ஸிக்கடி தொ³வு; மீ தும்கொ தேரிய எல்லெ பாக்யம் தும்ரெ ஹொல்லெகின், தும்ரெ பில்லல்னு ஹொல்லெகின், தும்ரெ ஸந்ததின் ஹொல்லெ கொப்பிம் நிள்சி ரா:ய்” மெனி பகவான் ஸங்கராஸ்.
சொக்கட்தெனொ சொக்கட் பொக்கிஷம் ஹொயெ அபுல் மொன்னும்ரீ: சொக்கட்யெ ஹெடி தேய். துஷ்டுடு நஜ்ஜெ பொக்கிஷம் ஹொயெ அபுல் மொன்னும்ரீ: நஜ்ஜயெ ஹெடி தேய்.
மீ தும்கொ ஆக்³ஞொ தகெஸ்தெ அஸ்கி, தெனு மெளி ஸிக்கிலி த்யெதானுக் ரா:ஸ்தக் தெங்கொ போதன கெருவொ. ஏலா, புலோகுகெ ஸெத்ல தின்னு லெங்கு மீ கொப்பிம் தும்ரெ ஸெங்கொ ஸே" மெனி ஸங்க்யாஸ்.
“மொகொ ஸீ, ‘பகவானு, பகவானு’ மெனி பொவஸ்தெனு பரலோக ராஜ்யமுகெ ஆஸீர்வாதுக் கள்ளுனான். பரலோகும் ஸேஸ்தெ மொர் பா³புக் ஒப்பயெதானுக் ஜிவஸ்தெனூஸ் தெல்லெ ஆஸீர்வாதுக் கள்ளன்.
“ மீ ஸங்கரிய எல்லெ வத்தானுக் அய்கி ஜிவஸ்தெனு தெய்டாம் கே⁴ர் பந்தெ புத்திஸாலி மெனிகுக் நிகர்கன் ஸே.
தெல்லெகொ ஏசு, “தேவுகெ வத்தாதானுக் ஜிவஸ்தெனூஸ் பாக்யவானுன்’’ மெனி ஸங்க்யாஸ்.
எல்லெ துமி களைளி த்யெதானுக் ஜிவெதி பாக்யவானுன்கன் ரா:ன்.
“மொர் ஆக்³ஞானுக் அய்கி த்யெதானுக் ஜிவஸ்தெனு மொர்ஜோள் ப்ரேவ்கன் ரா:ன். மொர்ஜோள் ப்ரேவ்கன் ஸேஸ்தெங்கொஜோள் பா³ப் மெளி ப்ரேவ்கன் ரா:ன். மீ மெளி தெங்கொஜோள் ப்ரேவ்கன் ரீ: மீ கோன் மெனி தெங்கொ களடு’’ மெனி ஸங்க்யாஸ்.
துமி நஜ்ஜெ வத்தொ கொன்னி கெர ஹோனா. அய்கஸ்தெங்கொ ப²லன் அப்பஸ்ததானுக்கின், அஸ்கின் பக்தி விருத்தி பொந்தஸ்ததானுக் சொக்கட் வத்தானுக் கெருவொ.
தெங்கொ தேஸுனுக் ஜெகிஞ்சி, ரூபன், காத் கோத்ருனுக்கின், மனாசே கோத்ரும் ஹத்து³வாஸ் மென்க்யானுக் பாத்யம்கன் தியாஸ்.
தேஹாலிம் துமி எல்லெ நியமந்த்தானுக் ஜிவஸ்தக் நிகொகன் ர:வொ. தெப்போஸ் துமி கெரரிய காமுனும் தும்கொ ஜெயம் அப்பய்.
தெல்லெ ஆக்³ஞான் துரெ லெகுத்தோஸ் ஸே. தெல்லெ ஆக்³ஞான் காயொ மெனி தொகொ சொக்கட் களாய். தூ தோண் ஹுடி ஸங்கன் முஸய். ஹிருதயமும் தொவ்லன் முஸய். தேஹாலிம் தூ தெல்லெ ஆக்³ஞான்தானுக் அய்கி ஜிவ்னொ.
தெப்பொ தும்ரெ தேவ் பகவான் ஸங்கரிய தாமும் துமி தெங்கொ பாய்ம் பொடஸ்தக் மிளி அவி, எல்லெ நியாய ப்ரமாண புஸ்தவும் லிக்கிரியெ ஆக்³ஞானுக் அஸ்கினாக் அய்காஸ்ததானுக் கெட்டி ஸெத்து³கன் செவ்தி தெக்கட்னொ.
பகவான் தியெ நியாய ப்ரமாண வத்தானுக் மோசே லிக்கி ஒண்டெ புஸ்தவ்கன் தயார் கெரெஸ்.
மோசே அஸ்கி இஸ்ரயேல்னுக் பொ³வி தெங்கொஜோள் ஸங்கெ வத்தான்: “இஸ்ரயேல்னு, ஹிந்தொ மீ தும்கொ தேரிய ஆக்³ஞானுக்கின், நியதினுக் கான் தீ³ அய்குவொ. தெல்லெ ஆக்³ஞானுக் ஸிக்கிலி த்யெதானுக் ஜிவஸ்தக் நிகொகன் ர:வொ.
தெனுகின் தெங்கொ ஸந்ததின் கொப்பிம் சொக்கட் ர:னொ மெனெதி தெனு மொகொ கெனம் தீ³, மொர் ஆக்³ஞான்தானுக் சல்த கெல்லுனொ; எல்லெ மொன்னு தெங்கொ ரி:யெதி கித்ககி சொக்கட்கன் ரா:ய்.
தேஹாலிம் தும்ரெ தேவ் பகவான் தும்கொ தீரிய ஆக்³ஞான்தானுக் ஜிவஸ்தெமாம் நிகொகன் ர:வொ. தெனு ஸங்கெதானுக் ஸெர்ககன் சல்த கெல்லுவொ.
கிறிஸ்துகெ வத்தான் தும்ராம் பரிபூர்ணுகன் ரா:ந்தக். தேவுகெ வத்தானுக் சொக்கட் இவர் கெல்லி போதன கெருவொ; புத்தி ஸங்குவொ. மொன்னுஜந்த ஸங்கீதுனுக்கின், ஸ்துதி கீதுனுக்கின், தெய்வீக கீதுனுக் கவி தேவுக் ஸ்துதி கெருவொ.
பலம் பொந்தி தைர்யம்கன் ரா: மொர் ஸெவ்கன் மோசேக் மீ தியெ ப்ரமாண்தானுக் சல்த கெல்லெ. மொர் ஆக்³ஞான்தானுக் ஜிவஸ்தக் கொப்பிம் நிகொகன் ரி:யெதி, தூ ஜாரிய தாமுனும் தொகொ ஜெயம் அப்பய். (யோசு 11:15)
தெக பல்சொ நியாய ப்ரமாண புஸ்தவும் லிக்கி ஹொதெதானுக் யோசுவா ஆஸீர்வாத் தேரிய வத்தானுக்கின், ஸாபன தேரிய வத்தானுக் ஸெத்து³கன் அஸ்கினா வெதுர் செவ்தெஸ்.
“அபுல்நுக் ஸுத்தி⁴ கெல்லஸ்தெனு பாக்யவானுன். தெனு நிஜ்ஜம் ஜிவ்னம் தேரிய ஜாடு பொள்ளாக் கான். வாட்தானுக் பட்ணமு பிஸ்தர் ஜான் முஸய்.