26 ஏலா, ஏட் எனு பா⁴டகன் வத்தொ கெர்லேத் ஸேனா. கொன்னின் எங்கொ கை ஸங்கரானினா. நிஜ்ஜம்கன் ஏசுஸ் மேசியா மெனி யூத அதிகாரின் ஹவ்டராஸ்தெகீ?
துஷ்டுடுனுக் கொன்னின் தெர்முனா ஜியெத் மெளி தமிலேத் ரா:ன். நீதிமானுன் ஸிம்ஹுஸோன் தைர்யம்கன் ரா:ன். (லேவி 26:17,37; ஸங் 53:5)
எனு புலோகுர் நீதிக் நிள்சி ர:வடஸ்த லெங்கு கோ³ஸ் ரா:னான். மொன்னு தி⁴ல்ல ஸொட்டுனான். அஸ்கி தேஸு மென்க்யான் தெங்கொ வத்தானுக் அய்கஸ்தக் ர:கிலேத் ரா:ன். (மத் 12:18-21)
தெனு அபுல் சிஷ்யானும் தெவ்டதெங்காக்கின், ஏரோது ரஜாக் ஆதரவுகன் ஸேஸ்தெ தெவ்ட ஏரோதியர்னுக் ஏசுஜோள் தட்டி, “போதகரு, துமி நியாவ்கன் சல்த கெல்லஸ்தெனு; தேவுகெ நீதிக் ஸெர்ககன் போதன கெரஸ்தெனு; மென்க்யான் காய் ஹவ்டன்கீ மெனி துமி விசார் பொட்னான். அஸ்கினாக் ஸமம்கன் ஹவ்டஸ்தெனு மெனஸ்த அம்கொ களாய்.
பிலாத்து, ப்ரதான ப⁴ட்டர்னுகின், அதிகாரினுக்கின், மென்க்யானுக் ஒண்டேஸ்கன் மிளடி தெங்கொ ஸீ,
ஹொயெதி பரிசேயர்னுகின், நியாய ஸாஸ்திரின் ஞானஸ்நான் கள்ளியானி. தேவுகெ ஆலோசனாக் தெனு ஒப்பிலியானி.
திஸொரீ:கின் மெளி யூத அதிகாரினும் ஜுகுதெனு ஏசுக் நொம்யாஸ். ஹொயெதி பரிசேயர்னுக் தக்கி பராட் ஸங்குனா ஹொத்யாஸ். திஸனி தெனு ஸங்கெதி ப்ரார்தன த⁴வ்ராம் தெங்கொ செர்சுனான்.
தெல்லெகொ ஏசு, “மீ அஸ்கினாக் களாஸ்ததானுக் வத்தொ கெர்ரியொ. யூதர்னுகெ ப்ரார்தன த⁴வ்ரானும்கின், எருசலேம் த⁴வ்ராம் மீ கொப்பிம் போதன கெர்லேத் அவ்ரியொ. மீ கொங்கினா களானாஸ்தக் கொன்னி வத்தொ கெர்ரெனி.
நிக்கொதேமு மெனி ஒண்டெ பரிசேயன் ஹொதெஸ். தெனொ யூதர்னும் ஒண்டெ முக்ய அதிகாரி.
“மொர் ஜிவ்னமுக் தெ⁴ரெ அஸ்கி விவர்னுக் ஸங்கெ மெனிகுக் துமி அவி ஸவொ. தெனு மேசியாகன் ர:வாய்’’ மெனி மெனிஸ்.
தெப்பொ எருசலேம் மென்க்யானும் தெவ்டதெனு, “எங்கோஸ்னா மொரட்னொ மெனி வெக்கராஸ்தெ?
தேட் அவெ மென்க்யான் அஸ்கின் ஏசுக் நொம்யாஸ். “மேசியா அவஸ்தவேளு எங்கொ ஸொம்மர் அற்புதுன் வேன் கெரன்கீ?’’ மெனி வத்தொ கெல்லியாஸ்.
அதிகாரினும்தீ, பரிசேயர்னும்தீ ஏசுக் நொம்மஸ்தெனு கோன்தி ஸேகீ?
யூத அதிகாரினுக் தக்கெஹால் தெகொ ஜெனாஸ்தெனு இஸனி ஸங்க்யாஸ். காமெனெதி கோன்தி ஏசுக் ரக்ஷகர் மெனி நொம்மெதி, தெகொ ப்ரார்தன த⁴வ்ராம்ரீ: தொ³ப்பி தொவ்துனொ மெனி யூதர்னு தீர்மான் கெரி ஹொத்யாஸ்.
பேதுருகின், யோவான் செவ்துனாஸ்தெனு மெனி யூத ஸபா மென்க்யானுக் களை ஹொதெஹால், தெங்கொ தைர்யமுக் ஸீ ஆச்சர்யம் பொட்யாஸ். தெனு தீ³தெனு ஏசு ஸெங்கொ ஹொத்யாஸ்தெனு மெனி மெளி களைளியாஸ்.
மீ காராம் ஸேஸ்தெஹால் ஸபா மென்க்யானும் ஜுகுதெனு ஏசுஜோள் அங்குன் வேன் விஸ்வாஸ் தொவி, தா⁴க் நீ:ஸ்தக் தைர்யம்கன் தேவுகெ ஸமசார் ஸங்கஸ்தக் தயார்கன் ஸே.