7 “கொங்க வெக்கராஸ்தெ?’’ மெனி ஏசு பீர் தெங்கொஜோள் புஸ்யாஸ். தெனு, “நாசரேத் கா³ம் ஏசுக் வெக்கராஸ்’’ மெனி ஸங்க்யாஸ்.
தேட் தெனொ நாசரேத் கா³மும் ஜிவெஸ். “நசரேயன் மெனி பொவ்னி பொடன்" மெனி தீர்கதரிஸின் ஸங்கெ வத்தொ பூர்தி ஹொயெஸ். (நியா 13:5; மாற்கு 1:24; லூக் 2:39; யோவா 1:45)
அபுல்நுக் சலஞ்ஜாரிய கார்யமுனுக் ஏசு களைளி தெங்கொ வெதுர் ஜீ, “கொங்க வெக்கராஸ்தெ?’’ மெனி புஸ்யாஸ்.
‘மீஸ் தெனொ’ மெனி ஏசு தெங்கொஜோள் ஸங்கஸ்தக்கின் தெனு அஸ்கின் பஸ்கட் ஹுடொ க⁴லி பொட்யாஸ்.
“ ‘மீஸ்’ மெனி தும்ரெஜோள் ஸங்கிதியொனா. துமி மொகொ வெக்கிலி அவி ரி:யெதி மொர் சிஷ்யானுக் ஸொட்டுவொ’’ மெனி ஸங்க்யாஸ்.