34 எனு தேவுகெ வத்தாதானுக் சலெஸ்தெ மீ ஸியெஹால் எனூஸ் தேவுகெ பெடொ மெனி ஸாக்ஷி ஸங்கரியொ’’ மெனி மெனெஸ்.
பகவான் ஸங்க்யாஸ்தெ மீ தும்கொ களடரியொ. தெனு மொர்ஜோள், ‘தூ மொர் பெடொ; ஹிந்தொ மீ தொகொ பா³ப் ஹொயெஸ். (எபி 1:5; 3:5,6; 2 பேதுரு 1:17,18)
“மொர் பா³ப் மொகொ ஸகல அதிகார் தீரியாஸ். பா³ப் ஜத துஸ்ர கொன்னின் பெடாக் களைள்ரியானி. திஸோஸ் பெடொ அபுல் பா³புக் களைள்ரியாஸ். பா³புக் கோன் களைளுனொ மெனி பெடொ ப்ரேவ் பொடராஸ்கி, தெங்கொ ஜத துஸ்ர கொன்னின் பா³புக் களைளுனான்.
சீமோன் பேதுரு, “துமீஸ் மேசியா, ஜீவ் ஸேஸ்தெ தேவுகெ பெடொ" மெனி ஸங்கெஸ். (யோவா 6:68,69)
பேதுரு இஸனி வத்தொ கெர்லேத் ர:த, ப்ரகாஸிஞ்சரிய ஒண்டெ மேக் தெங்கொ அஸ்கினாக் ஜ²கெஸ். தெல்லெ மேகும்ரீ: “மொர் ப்ரேவ் பெடொ எனூஸ். எங்கொ ஹவ்டி மீ ஸொந்தோஷ் பொடரெஸ். எனு ஸங்கெதானுக் அய்குவொ" மெனி ஒண்டெ ஸெத்து³ அய்கயெஸ். (ஸங் 2:7; ஏசா 42:1; மத் 3:17)
ஏசு கொன்னிதெக ஜவாப் ஸங்க்யானி. தெப்பொ மஹா ப்ரதான ப⁴ட்டர் ஏசுக் ஸீ, “ஜீவ் ஸேஸ்தெ தேவுகெ நாவும் ஸெத்து கெரி ஸங்கி; நிஜ்ஜம்கன் தூ தேவுகெ பெடொ மேசியாகீ?" மெனி புஸ்யாஸ்.
“த⁴வ்ராக் பொ²டி தீ²ன் தின்னு பிஸ்தரும் பந்துஸ் மெனி ஸங்கெஸ்னா! அத்தொ தூஸ் தொகொ கபட்ளெ. தூ தேவுகெ பெடொ மெனெதி ஸிலுவாம்ரீ: அத்தோஸ் ஹுத்திரி ஆவ்" மெனி கேலி கெர்யாஸ்.
எனொ தேவுக் நொம்மெஸ்னா. தேவ் எகொஜோள் ப்ரேவ் ரி:யெதி தெனு எகொ கபடந்தக். ‘மீ தேவுகெ பெடொ’ மெனி எனொ ஸங்கெஸ்னா" மெனி மென்யாஸ். (ஸங் 22:9)
ரோம தேஸு ராணுவ அதிகாரின்கின், தெகொ ஸெந்தொ ரீ: ஏசுக் ஸீலியெ ஜ²கட் வீருடுன் பு⁴ஞி ஒண்கெஸ்தெ, அங்குன் சலெ துஸ்ர ஸம்பவமுனுக் ஸீதி, ஜுகு தக்கி, “நிஜ்ஜம்கன் எனு தேவுகெ பெடோஸ்" மெனி ஸங்க்யாஸ்.
தெப்பொ அகாஸும்ரீ: “எனூஸ் மொர் ப்ரேவ் பெடொ. எங்கொ ஹவ்டி மீ ஜுகு ஸொந்தோஷ் பொடரெஸ்" மெனி ஒண்டெ ஸெத்து³ அய்கயெஸ். (ஆதி 22:2; ஸங்க் 2:7)
பிஸாஸு தெங்கொஜோள் அவி, “துமி தேவுகெ பெடொ மெனெதி எல்லெ தெய்டான் அப்பம் ஹொனொ மெனி ஸங்குவொ" மெனி மெனெஸ்.
“துமி தேவுகெ பெடொ மெனெதி ஏட்ரீ: கா²ல் துங்குவொ; காமெனெதி, ‘தும்கொ கபடஸ்தக் தேவ் அபுல் தூதுனுக் தட்டன். தும்ரெ பாய்ஞ்ன் தெ³குடாம் கா⁴ம் லகுனாஸ்ததானுக் தெனு ஹாதும் தும்கொ துக்கிலி ஜான்' மெனி வேதும் லிக்கி ஸே" மெனி ஸங்கெஸ். (ஸங் 91:11-12)
தெனு ஏசுக் ஸீதி, கெட்டி ஸெத்து³கன், “தேவுகெ பெடா, அம்ரெ விஷயமும் துமி ககொ தொஸ்கொ தேராஸ்தெ? ந்யமுன் கெரெ தின்னு அவ்னா முல்லோஸ் துமி ககொ ஏட் அவி அம்கொ பாத கெரராஸ்தெ?" மெனி ரெச்ச தக்யாஸ். (லூக் 4:41; 2 பேதுரு 2:4)
தேவுகெ பெடொ ஏசு கிறிஸ்துகெ சொக்கட் ஸமசார்.
தெப்பொ, “தூ மொர் ப்ரேவ் பெடொ, தொகொ ஹவ்டி மீ ஜுகு ஸொந்தோஷ் பொடரெஸ்’’ மெனி அகாஸும்ரீ: ஒண்டெ ஸெத்து³ அய்கயெஸ். (ஆதி 22:2; ஸங் 2:7; ஏசா 42:1,2; 2 பேதுரு 1:17)
தெல்லெகொ தேவு தூது, “பரிஸுத்த ஆவிகெ ஸக்தி துரெ ஹோர் அவய். உன்னத ஸக்திகெ நீடொ துரெ ஹொல்லெ பொடய். தேஹாலிம் தொகொ உஜரிய நு:ரு பரிஸுத்துடுகன் ரா:ய். தெல்லெ நு:ருக் ‘தேவுகெ பெடொ’ மெனி மெனன்.
பரிஸுத்த ஆவி கவ்து³ ரூபும் ஏசு ஹொல்லெ ஹுத்ரியாஸ். தெப்பொ அகாஸும்ரீ:, “தூ மொர் ப்ரேவ் பெடொ. தொகொ ஹவ்டி மீ ஜுகு ஸொந்தோஷ் பொடரியொ’’ மெனி ஒண்டெ ஸெத்து³ அய்கயெஸ். (ஆதி 22:2; ஸங் 2:7; ஏசா 42:1)
தேவுக் கொன்னின் கொப்பிம் தெக்கிரியானி; பரலோகு பா³ப்ஜோள் ஜுகு ஐக்யம்கன் ஸேஸ்தெ தேவுகெ ஸுபா⁴வ் பொரெ ஒண்டே பெடோஸ் தெங்கொ பராட் களட்யாஸ். (யோவா 6:46; 1 தீமோ 6:16)
நாத்தான்யேல் ஏசுஜோள், “போதகரு, துமி தேவுகெ பெடொ, துமீஸ் இஸ்ரயேல்கெ ரஜொ’’ மெனி ஸங்கெஸ்.
மீகின் மொர் பா³ப் ஒண்டேஸ்’’ மெனி ஸங்க்யாஸ்.
திஸொ ஹொயெதி பரலோகு பா³ப் மொகொ களைளி, தெங்கொஹால் புலோகுக் தட்டினி பொடெ மீ மொகொ ‘தேவுகெ பெடொ’ மெனி மெனஹோனாகீ? திஸனி மீ மெனரியஹால் மீ தேவுக் தூஷன கெரரியொ மெனி அர்துகீ?
தெல்லெகொ மார்த்தாள், “ஹாய் பகவானு, துமீஸ் மேசியா, துமீஸ் தேவுகெ பெடொ. துமீஸ் எல்லெ புலோகுகெ ரக்ஷகர் மெனி நொம்மரியொ’’ மெனி ஸங்கிஸ்.
தெல்லெகொ யூதர்னு, “அம்கொ மெனி ஒண்டெ ப்ரமாண் ஸே. தெல்லெ ப்ரமாண்தானுக் எனொ மொரி ஹொனொ. காமெனெதி எனொ எகோஸ் தேவுகெ பெடொ மெனி ஸங்குலரெஸ்’’ மெனி மென்யாஸ்.
தோமா ஏசுக் ஸீ, “துமீஸ் மொர் பகவான்! துமீஸ் மொர் தேவ்!!’’ மெனி ஸங்கெஸ்.
ஹொயெதி தேவுகெ பெடொகன் ஸேஸ்தெ ஏசுஸ் மேசியா மெனி துமி விஸ்வாஸ் கெரஸ்ததானுக்கின், துமி விஸ்வாஸ் கெரஸ்தவேளு தும்கொ நித்ய ஜிவ்னம் அப்பய் மெனி களடஸ்தகூஸ் எல்லெ புஸ்தவ் லிக்கினி பொட்ரியொ.
துமீஸ் தேவ்ஜோள்ரீ: அவ்ரியாஸ்தெனு. துமீஸ் பரிஸுத்துடு மெனி அமி களைள்ரியாஸ். அமி தும்கோஸ் நொம்மராஸ்’’ மெனி ஸங்கெஸ். (மத் 16:16; மாற்கு 8:29; லூக் 9:20)
தெய்வீக ரீதிம் தெனு தேவுகெ பெடொ. பகவான் ஏசு கிறிஸ்து மொரனும்ரீ: ஜீவ் ஸெந்தொ ஹுடெஹால் தெனு நிஜ்ஜம்கன் தேவுகெ பெடொ மெனி ரூபல ஹொயெஸ்.
மொர் வாட்கன்கின், சில்வான், தீமோத்தேயு வாட்கன் தும்கொ பரிச்சயம் ஹொயெ தேவுகெ பெடொ ஏசு கிறிஸ்து ‘ஹாய்’ மெனி ஸங்கிதி பீர் ‘நீ:’ மெனி ஸங்குனான். ‘ஹாய்’ மெனஸ்த ஒண்டேஸ் தெங்கொஜோள்ரீ: அவரியொ. (அப் 18:5)
எகொ மாய், பா³புகெ விவர் நீ: தோ²ர்னு விவர் நீ: எனொ கோட் உஜெஸ் கோட் மொரெஸ் மெனரிய விவர் நீ: தேவுகெ பெடொஸோன் எனொ மெளி கொப்பிம் ப⁴ட்டர்கன் ஸே.
பெடாகெ விரோதின் பா³புக் மெளி விரோதின்கன் ஸே. பெடாக் ஒப்புலஸ்தெனு பா³புக் மெளி ஒப்புலன்.
பாப் கெரஸ்தெனு பிஸாஸுக் பாத்யம். காமெனெதி பிஸாஸு ஆதிம்ரீ: பாப் கெர்லேத் ஸே. தேஹாலிம் பிஸாஸுகெ க்ரியானுக் நாஸ் கெரஸ்தக் தேவுகெ பெடொ புலோகுர் உஜ்யாஸ். (யோவா 8:44)
அபுல் ஒண்டே பெடொ ஏசு கிறிஸ்து வாட்கன் அமி நிஜ்ஜம் ஜிவ்னம் பொந்தஸ்ததானுக் தேவ் தெங்கொ எல்லெ புலோகுர் தட்டியாஸ். எகலெந்தால் தேவுகெ ப்ரேவ் அம்கொ களையெஸ்.
தேவுகெ பெடொ புலோகுர் அவெஹால் நிஜ்ஜம் தேவுக் களைளரிய புத்தி அம்கொ அப்பெஸ். அமி நிஜ்ஜம் தேவ்ஜோள்கின், தெங்கொ பெடொ ஏசு கிறிஸ்துஜோள் ஐக்யம்கன் ஸே. ஏசு கிறிஸ்துஸ் நிஜ்ஜம் தேவ். தெனூஸ் நித்ய ஜிவ்னம்.
கிறிஸ்துகெ போதனாம் நிள்சி ரா:னாஸ்தக் துஸ்ர போதனானுக் ஸிக்கடி தேஸ்தெனொ தேவுக் பாத்யம்கன் ரா:னா. கிறிஸ்துகெ போதனாம் நிள்சி ரா:ஸ்தெனோஸ் பா³புக்கின் பெடாக் பாத்யம்கன் ரா:ய்.
“தியத்தீரா பட்ணமுகெ தேவு ஸபா தூதுக் தூ இஸனி லிக்கி: 'அக்னி ஜுவாலெகன் தொளொகின், கஸொஸோன் ப்ரகாஸிஞ்சரிய பாய்ஞ்ன் ஸேஸ்தெ தேவுகெ பெடொ ஸங்கராஸ்: