Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




யோவான் 1:29 - Saurashtra Bible (BSI)

29 துஸந்தி அபுல்ஜோள் ஏசு அவராஸ்தெ தெக்கெ யோவான் ஸ்நானகன், “ஏலா! புலோகு மென்க்யானுகெ பாபுனுக் ஜவடரிய தேவுகெ பெண்டு பில்லொ எனூஸ். (யாத் 12:3; ஏசா 53:4-6; 1 பேதுரு 1:19; தர்ஸன 5:6)

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




யோவான் 1:29
65 ပူးပေါင်းရင်းမြစ်များ  

தெல்லெ க்ரீடு ஆரோன்கெ கபாளு ம:த்தி³ ரா:ய். இஸ்ரயேல்னு அபுல்நுக் ஸுத்தி⁴ கெல்லஸ்தக் தேரிய தட்சணானும் காய்தீ சூக் ரி:யெத் மெளி தெல்லெ தட்சணானுக் மீ அங்கிஹார் கெரு. ஹொயெதி தெல்லெ க்ரீடு கொப்பிம் ஆரோன்கெ கபாள் ஹொல்லெ ர:னொ.


ரி:யெத் மெளி தெங்கொ ஹனி ஹிம்ஸொ கெர்னொ மெனஸ்தேஸ் பகவான்கெ சித்தம். அம்ரெ பாபுனுக் ஜவடரிய பரிஹார பலிகன் தெனு அபுல் ஜீவுக் ஒப்பிஞ்சி தியாஸ்; தேஹாலிம் தெனு அபுல் ஸந்ததினுக் ஸான்; தெனு தீர்க ஆயுஸுகன் ஜிவன்; தெங்கொ வாட்கன் பகவான்கெ சித்தம் பூர்தி ஹொயெஸ். (2 கொரி 5:21)


தெனு ஹிம்ஸொ பொந்தெஹால் அப்பரிய ப²லனுக் ஸீ ஸொந்தோஷ் பொடன்; மொர் ப்ரேவ் பொரெ ஸெவ்கன் மொர் மொன்னுக் ஒப்பயெதானுக் ஜிவ்யாஸ்; தெங்கொ வாட்கன் ஜுகுதெனு நீதிமான் ஹோன்; மென்க்யானுகெ பாபுன் பூரா க்ஷமொ கெர்னி பொடய்.


தெங்கொ ஜுகு கொடூரம்கன் ஹிம்ஸொ கெர்யாஸ்; தெனுகீ அஸ்கிதெக ஸகிஞ்சிலியாஸ்; தோண் ஹுடி ஒண்டெ வத்தொ மெளி கெர்யானி; செக்கினி பொடஞ்ஜாரிய பெண்டு பில்லொ ஸெத்து³ மட்னா ஜாரியஸோன்கின், கேஸ் செக்கஸ்தவேளு ரெச்சொ தகுனா ஹிப்பிரிய மெ:டி பெண்டுஸோன் தெனு ஒண்டெ வத்தொ மெளி கெர்னா ஹொத்யாஸ். (அப் 8:32,33; தர்ஸன 5:6)


பகவான்ஜோள் துமி பிரி அவி, “அமி கெரெ பாபுனுக் க்ஷமொ கெருவொ. தயவு கெரி அம்ரெ ப்ரார்தனாக் அங்கிஹார் கெருவொ. அமி தும்கொ ஸ்துதி கெரி ஸ்தோத்ரு பலி தேன்.


மோசே தெங்கொஜோள், “பாபுனுக் பரிஹார்கன் பலி தியெ பெண்டு பொ³ஸுலாக் துமி ககொ பரிஸுத்த ஸ்தலமும் கயானி? தெல்லெ பொ³ஸுலொ பெ⁴ளி வேன் பரிஸுத்தம் ஹொயெஸ்தெ மெனி தும்கொ களானாகீ? மென்க்யானுகெ பாபுனுக்கின் சூகுனுக் ப்ராயஸித்த பலிகன் தெனி பொடரிய பெண்டு பொ³ஸுலாக் பகவான் தும்கொ மெனி விஸேஷ்கன் தீராஸ்தெ நா:கீ? (லேவி 6:24-26)


“அவஞ்ஜாரிய தின்னுநும் தாவீதுகெ ஸந்ததின்கின், எருசலேம் மென்க்யான் அபுல்நு கெரெ பாபுனுக்கின், அண்டுனுக் ஜவடி ஸுத்தி⁴ கெல்லஸ்தக் ஒண்டெ பனிகஸு ரா:ய்.


பல்சொ பகவான் ஆரோன்ஜோள், “ப⁴ட்டர்னுகன் ஸேவொ கெரரிய தூகின், துரெ பெடான்கின், துரெ கோத்ருன் பரிஸுத்த டேராகெ புணிதுக் கொன்னி ப⁴ங்க³ம் அவ்னாஸ்ததானுக் ஸீல்னொ. தும்ரெ ப⁴ட்டரு காமுனுக் விரோத்கன் கொன்னின் சூக் ஸங்குனாஸ்ததானுக் ஜாக்ரதகன் சல்த கெல்லுனொ.


ஹொயெதி லேவியர்னு பரிஸுத்த டேரா பிஸ்தர் அவி ஸேவொ கெருவாய். எல்லெ ஆக்³ஞாக் கொன்னின் கொப்பிம் மர்சஹோனா. இஸ்ரயேல்னும் லேவியர்னுக் நிரந்தரம்கன் கொன்னி பாத்யம் அப்புனா.


திஸோஸ் மோசே கஸாம் ஒண்டெ ஸாபுக் தயார் கெரி ஒண்டெ கா²ம்பும் பந்தி ஹிப்படெஸ். ஸாப்ஹால் சவ்னி பொட்யாஸ்தெனு தெல்லெ கஸா ஸாபுக் கம்சி ஸியெஹால் மொர்யானி. (2 ரஜா 18:4; யோவா 3:14)


தெனொ ஒண்டெ பெடாக் ஜெனய். தெங்கொ ஏசு மெனி நாவ் கா⁴ல். காமெனெதி தெனு அபுல் மென்க்யானுகெ பாபுனுக் ஜவடி தெங்கொ ரக்ஷண் கெரன்" மெனி ஸங்கெஸ். (லூக் 1:31)


மெனிகு பெடொ காம் க²டஸ்தக் அவ்யானி; காம் கெரஸ்தக் அவ்யாஸ். ஜுகு மென்க்யானுக் ரக்ஷண் கெரஸ்ததானுக்கின், அபுல் ஜீவுக் க்ரயம்கன் தேஸ்தக் தெனு அவ்யாஸ்” மெனி ஸங்க்யாஸ்.


துஸந்தி யோவான் ஸ்நானகன்கின், தெகொ தீ³ சிஷ்யான் தேட் ஹிப்பி ர:த,


ஏசு தெல்லெ வாட்கன் சலி ஜாராஸ்தெ யோவான் ஸ்நானகன் ஸீதி, “ஏலா! புலோகு மென்க்யானுகெ பாபுனுக் ஜவடரிய தேவுகெ பெண்டு பில்லொ எனூஸ்’’ மெனி ஸங்கெஸ்.


துஸந்தி ஏசு கலிலேயாக் ஜனொ மெனி ஹவ்ட்யாஸ். தெப்பொ தெனு பிலிப்புக் ஸீ, “தூ மொர் சிஷ்யொகன் ஆவ்’’ மெனி ஸங்க்யாஸ்.


ஏசு பிலிப்புக்கின், நாத்தான்யேலுக் தெக்கெ தி²ன்வந்தி கலிலேயாம் கானா கா³மும் ஒண்டெ ஹொராட் சலெஸ். ஏசுகெ அம்பொ³ மெளி தேட் அவி ஹொத்யாஸ்.


தேவ் மென்க்யான்ஜோள் ஜுகு ப்ரேவ் தொவெஹால் தெனு அபுல் ஒண்டே பெடாக் எல்லெ புலோகுக் தட்டியாஸ். தெங்கொ நொம்மஸ்தெனு நாஸ் ஹோனாஸ்தக் நித்ய ஜிவ்னம் பொந்தன்.


தெல்லெ கா³மு மென்க்யான் சமாரியா பெய்ல்மெனிக்ஜோள், “துரெ வத்தாக் அய்கிதி அமி ஏசுக் விஸ்வாஸ் கெரராஸ்தெ நா: அமீஸ் ஏசுகெ போதனானுக் அய்க்யாஸ். நிஜ்ஜம்கன் எனூஸ், ‘புலோகு ரக்ஷகர்’ மெனி களைள்ரியாஸ்’’ மெனி ஸங்க்யாஸ்.


பரலோகும்ரீ: அவி நிஜ்ஜம் ஜிவ்னம் தேரிய க²வ்ணம் மீஸ். எல்லெ க²வ்ணமுக் கோன்தி கயெதி தெனு கொப்பிம் ஜிவன். மொர் கெண்டாக் மீ தும்கொ க²வ்ணம்கன் தேரியொ. மென்க்யான் ஜிவஸ்ததானுக் மீ தெல்லெ க²வ்ணமுக் தேரியொ’’ மெனி மென்யாஸ்.


மோசேகெ நியாய ப்ரமாண்தானுக் துமி ஜிவெத் மெளி தும்ரெ பாபுனும்ரீ: ஸொடுவி பொந்தன் முஸுனா. ஹொயெதி ஏசு கிறிஸ்துக் விஸ்வாஸ் கெரஸ்தெனு அபுல் பாபுனும்ரீ: ஸொடுவி பொந்தன்.


தெனொ செவ்திலேத் ஹொதெ வேது வத்தான் காயொமெனெதி: “செக்கஸ்தக் உட்சி பெல்லி ஜாரிய பெண்டுஸோன் தெங்கொ பெல்லி ஜியாஸ். கேஸ் செக்கரிய மெனிகு வெதுர் ஸெத்து³ மட்னா ஹிப்பிரிய பெண்டுஸோன் தெனு தோண் ஹுட்னாஸ்தக் ஹிப்பி ஹொத்யாஸ்.


காமெனெதி மீ தேவ்ஜோள் ஸிக்கிலியெஸ்தெகின் ப்ரதான்கன் மீ தும்ரெஜோள் ஒப்பிஞ்சி தியெஸ்தெ எல்லேஸ்: ஸத்ய வேதும் லிக்கிரியதானுக் கிறிஸ்து அம்ரெ பாபுனுகுர்சி மொர்யாஸ். (ஏசா 53:5-12)


கிறிஸ்து வாட்கன் அமி தேவுகெ நீதிக் பாத்யம் கெல்லுனொ மெனி பாப் கெர்னாஸ்த ஏசுக் தேவ் தண்டன தியாஸ். (லேவி 4:25-29)


எல்லெ நஜ்ஜெ புலோகும்ரீ: அம்கொ ஸொடுவி கெரஸ்தக், அம்ரெ பாபுனுக் ஜவடஸ்தக் அம்ரெ பா³ப் ஹொயெ தேவுகெ சித்தம்தானுக் ஏசு கிறிஸ்து அபுல் ஜீவுக் ஒப்பிஞ்சி தியாஸ்.


“ஜாடும் லொம்பினி பொடெஸ்தெனொ ஸாபன பொந்தெஸ்தெனொ’’ மெனி வேதும் லிக்கிரியதானுக் கிறிஸ்து அம்ரெகுர்சி ஸாபன பொந்தி நியாய ப்ரமாண்ஹால் அவரிய ஸாபனாம்ரீ: அம்கொ ரக்ஷண் கெர்யாஸ்.(உபா 21:23)


அஸ்கினாக் ரக்ஷண் கெர்னொ மெனி தெனு அபுல் ஜீவுக் க்ரயம்கன் ஒப்பிஞ்சி தியாஸ். தேவ் அம்ரெஜோள் ப்ரேவ்கன் ஸே மெனஸ்தக் ஸெர்க ஹொயெ காலும் தேவ் தியெ ஸாக்ஷி எல்லேஸ்.


தெனு அம்ரெ அக்ரமமுக் க்ஷமொ கெரி அம்கொ பாத்யம் கெல்லியாஸ். அமி பரிஸுத்துடுகன் ஜிவி, சொக்கட்யெ கெர்னொ மெனி தெனு அபுல் ஜீவுக் அம்ரெகுர்சி பலிகன் தியாஸ். (யாத் 19:5; உபா 4:20; ஸங் 130:8; 1 பேதுரு 2:9)


எனூஸ் தேவுகெ மஹிமெக் ப்ரதி பலிஞ்சரிய தி³வொ. தேவுகெ ஸுபாவுக் களடஸ்தெனு. அபுல் ஸக்தி பொரெ வத்தொஹால் அஸ்கிதெக உரு கெர்ரியாஸ். எனு மென்க்யானுகெ பாபுனுக் ஜவடரிய க்ரியானுக் கெரி முஸடெ பல்சொ உன்னதமும் மஹத்வம் ஹொயெ தேவுகெ ஜெய்னா ஹாத் பொங்குட் பிஸ்யாஸ். (ஸங் 110:1)


தேஹாலிம் தெனு தயவு ஸேஸ்தெனுகன், நொம்கெ ஹொயெ மஹா ப்ரதான ப⁴ட்டர்கன் ஜிவி, மென்க்யானுக் ரக்ஷண் கெரஸ்தக் அஸ்கி விதமும் அபுல் பை⁴ பெ⁴ய்னான்ஸோன் ஹொனொ பொடெஸ்.


திஸோஸ் கிறிஸ்து மெளி ஜுகுதெங்கா பாபுனுக் பரிஹார்கன் ஒண்டே பலிகன் அபுல் ஜீவுக் ஒப்பிஞ்சி தியாஸ். தெனு பீர் அவன். தெப்பொ பாபுக் பரிஹார் கெரஸ்தக் அவ்னான்; அபுலுக் மெனி ர:கிலேத் ஸேஸ்தெங்கொ ரக்ஷண் கெரஸ்தக் அவன். (ஏசா 53:12)


சூக் நீ:ஸ்த பரிஸுத்த பெண்டு பில்லொ ஏசு கிறிஸ்துகெ மோல் வேன் ஹொயெ ரெகத்ஹால் துமி ரக்ஷண் பொந்திரியாஸ்.


அமி அம்ரெ ஜென்ம ஸுபா⁴வ்தானுக் ஜிவ்னாஸ்தக் தேவுக் ஒப்பயெதானுக் ஜிவ்னொ மெனி ஏசு ஸிலுவாம் ஹன்னி பொட்யாஸ்; அமி கெரெ பாபுனுக் அபுல் ஸரீரும் ஒவ்லியாஸ். தெங்கொ வச்சமுன்ஹால் அமி பரொ ஹொயாஸ். (உபா 21:22,23) (ஏசா 53:5,12)


கிறிஸ்து மெளி திஸோஸ் ஜிவ்யாஸ். அம்ரெ நீதி பகவான், அநீதிமானுகுர்சி மொர்யாஸ். தேவ்ஜோள் அமி ஐக்யம் ஹோஸ்தக் அம்ரெ பாபுனுகுர்சி ஒண்டேவாள் அஸ்கி காலுகுர்சி மொர்யாஸ். ஸரீர ரீதிம் தெனு மொரெத் மெளி ஆன்மீக ரீதிம் தெனு ஜீவ் ஸெந்தொ ஹுட்யாஸ்.


அம்ரெ பாபுனுக் ஜவடரிய பரிஹார பலி ஏசு கிறிஸ்துஸ். அம்ரெ பாபுனுக் கெத்தி³ நா: புலோகு மென்க்யானுகெ அஸ்கி பாபுனுக் ஜவடரிய பரிஹார பலி எனூஸ்.


அம்ரெ பாபுனுக் ஜவடஸ்தக் கிறிஸ்து உஜ்யாஸ். தெங்கொஜோள் பாப் நீ: மெனி தும்கொ களாய்.


அமி தேவ்ஜோள் ப்ரேவ்கன் ரி:யெஹால் நா: தெனூஸ் அம்ரெஜோள் ப்ரேவ் தொவி அம்ரெ பாபுனுக் ஜவடரிய பரிஹார பலிகன் அபுல் பெடாக் தட்டியெஹால் தேவுகெ ப்ரேவ் களாரியொ.


ஏசு கிறிஸ்தூஸ் நிஜ்ஜம் ஸாக்ஷி. மொரனும்ரீ: பெ²ய்லட்கன் ஜீவ் ஸெந்தொ ஹுட்யாஸ்தெனு எனூஸ். புலோகு ரஜானுகெ அதிபதி எனூஸ். (ஏசா 55:4; ஸங் 89:27)


அம்ரெ பை⁴ பெ⁴ய்னான் பெண்டு பில்லாகெ ரெகத்ஹால்கின், ஸாக்ஷிகன் ஸங்கெ வேது வத்தான்ஹால் தெகொ ஜெகிஞ்ச்யாஸ். தெனு அபுல் ஜீவுக் ம:ட்டகன் ஹவ்ட்யானி. மொரஸ்தக் மெளி தெனு தயார்கன் ஹொத்யாஸ்.


புலோக் உருஹொயெவேள்ரீ: ஹன்னி பொடெ பெண்டு பில்லாகெ ஜீவு புஸ்தவும் நாவ் நீ:னாஸ்தெனு தெல்லெ மூகுக் பாய்ம் பொடன்.


மீ ஸியெவேளு, சீயோன் தொங்கர் ஹொல்லெ பெண்டு பில்லொ ஹிப்பி ஹொதெஸ். தெங்கொ ஸெந்தொ 1,44,000 (ஒண்டெ லெக்குகின் சளிஸுன் சார் ஸஸர்) மென்க்யான் ஹிப்பி ஹொத்யாஸ். தெங்கொ கபாளும் பெண்டு பில்லாகெ நாவ்கின், தெங்கொ பா³புகெ நாவ் லிக்கி ஹொதெஸ். (எசே 9:4; தர்ஸன 7:4)


தெனொ பரிஸுத்த தேவு தூதுன்கெ ஸமூஹமும்கின், பெண்டு பில்லா ஸமூஹமும் அக்னிம்கின் கந்தகமும் வேதன பொந்தய்.


எனு பெட்கின் ஸெங்கொ மிளி அபுல்நுக் காட் கெல்லுனாஸ்தெனு. ஹொராட் கெல்லுனாஸ்தெனு. எனு பெண்டு பில்லொ ஸெங்கொ ஜான். முல்லொ முல்லொ தேவ் எங்கொ பு⁴ஞிம்ரீ: தேவுக்கின், பெண்டு பில்லாக் பாத்யம்கன் ரா:ஸ்தக் மோல்தீ க²ட்யாஸ்.


தெனு தேவுகெ ஸெவ்கன் மோசேகெ கீதுக்கின், பெண்டு பில்லாகெ கீதுக் கவ்யாஸ். “ஸர்வ ஸக்தி பொ⁴ரெ தேவ் பகவானு, தும்ரெ க்ரியான் மஹத்வம்கின், ஆச்சர்யம் ஹொயெஸ்தெ! தும்ரெ வாட் நீதிகின் நிஜ்ஜம் ஹொயெஸ்தெ. துமீஸ் அஸ்கி தேஸுனுக் ரஜா, (ஆமோ 3:13; 4:13)


பெண்டு பில்லாக் விரோத்கன் தெனு யுத்தம் கெரன். பெண்டு பில்லொகீ தெங்கொ அஸ்கினாக் ஜெகிஞ்சன். காமெனெதி தெனூஸ் பகவானுக்கஸ்கி பகவான். ரஜானுகஸ்கி ரஜொ. தேவ் வெக்கி ஹெடி பொவ்ரியெ மென்க்யான்கின், தெங்கொ ஸெந்தொ ஸேஸ்தெ நிஜ்ஜம் ஸெவ்கனுன் மெளி தெங்கொ ஜெகிஞ்சன்’’ மெனி ஸங்கெஸ்.


அமி ஸொந்தோஷ் ஹொல்லெ ஸொந்தோஷ் பொடி தெங்கொ ஸ்துதி கெரியேன். காமெனெதி பெண்டு பில்லாகெ ஹொராட் அவ்டியொ. நொவ்ரி அபுலுக் ஸிங்கார் கெல்லி தயார்கன் ஸே.


தெல்லெ தேவு தூது மொர்ஜோள், “பெண்டு பில்லாகெ ஹொராடுக் பொ³வ்னி பொட்யாஸ்தெனு பாக்யவானுன் மெனி லிக்கி’’ மெனி மெனெஸ். அங்குன், தெனொ மொர்ஜோள், “எல்லெஅஸ்கி தேவுகெ நிஜ்ஜம் வத்தான்" மெனி ஸங்கெஸ்.


பட்ணமுகெ பீதுக் பா³ர் வித தெய்டான் அஸ்திபார்கன் ஹொதெஸ். தெக ஹொல்லெ பெண்டு பில்லாகெ பா³ர் அப்போஸ்தலர்னுகெ நாவுன் லிக்கி ஹொதெஸ்.


அண்டு ஹொயெ வஸ்துன்கின், தேவுக் வெகுட் லகரிய கொன்னி தேட் ரா:னா; சொட்டொ வத்தொ கெரஸ்தெனு தேட் அவ்னான். நிஜ்ஜம் ஜிவ்னம் தேரிய பெண்டு பில்லாகெ ஜீவு புஸ்தவும் நாவ் லிக்கினி பொட்யாஸ்தெனு கெத்தி³ தேட் ஜான். (தர்ஸன 3:5; 13:8; 17:8)


பல்சொ, ஸெத்லகன் ஸாத் ரோகுன் பொ⁴ரெ ஸாத் பிங்கணினுக் கள்ளியெ ஸாத் தேவு தூதுனும் ஒண்டெதெனொ மொகொ ஸீ, “மொர் ஸெங்கொ ஆவ், பெண்டு பில்லாக் ஹொராட் கெல்லஞ்ஜாரிய நொவ்ரிக் தெக்கடுஸ்’’ மெனி ஸங்கெஸ்.


தெல்லெ ஸிங்காஸனமுக்கின், சார் ஜீவுனுக்கின், ஒள்ட்யானு ம:ஜார் பலி ஹொயெ ஒண்டெ பெண்டு பில்லொ ஹிப்பிரெஸ்தெ மீ தெக்கெஸ். தெல்லெகொ ஸாத் ஸிங்க்³டான்கின், ஸாத் தொளான் ஹொதெஸ். தெல்லெ தொளான் புலோக் பூரா தட்டினி பொடெ தேவுகெ ஸாத் ஆவின்.


தெப்பொ சார் ஜீவுன்கின், 24 (சரவீஸு) ஒள்ட்யான் தெல்லெ பெண்டு பில்லா பாய்ஞ்ர் பொடி நமஸ் கெர்யாஸ். தெங்கொ ஹாதும் வீணெகின், வஸ்னா வஸ்துன் பொ⁴ரெ ஸிங்கார் ஸொந்நா பிங்கணின் ஹொதெஸ். வஸ்னா வஸ்துன் பொ⁴ரெ பிங்கணி தேவுகெ மென்க்யானுகெ ப்ரார்தனாக் கு³ர்துகன் ஸே


பல்சொ, பெண்டு பில்லொ ஸாத் முத்ரானும் ஒண்டெ முத்ராக் பொ²டெஸ்தெ மீ தெக்கெஸ். தெப்பொ சார் ஜீவுனும் ஒண்டெ, “தூ ஏட் ஆவ்’’ மெனி பிடுகு ஸெத்து³ஸோன் கெட்டி ரெச்ச தகி பொவெஸ்தெ மீ அய்கெஸ்.


தெனு தொங்கர்னுக்கின், தெய்டானுக் ஸீ, “அம்ரெ ஹொல்லெ பொடி, அம்கொ ஜ²கி, ஸிங்காஸனமும் பிஸிரிய மெனிக் அம்கொ ஸானாஸ்ததானுக்கின், பெண்டு பில்லொ அம்கொ தண்டன தேனாஸ்ததானுக் அம்கொ கபடுவொ. (ஓசி 10:8)


தெல்லெகொ மீ, “அய்யாநு, தெல்லெ தும்கோஸ் களாய்’’ மெனி ஸங்கெஸ். தெப்பொ தெனு, “எனு உபத்ரவமுக் அநுபவிஞ்சிதி அவ்ரியாஸ்தெனு. எனு எங்கொ வஸ்தர்னுக் பெண்டு பில்லா ரெகதும் புவ்டி ஹுஜாள் கெல்லிரியாஸ். (எபி 9:14; 1 யோவா 1:7)


ஸிங்காஸனமு ம:ஜார் பிஸிரிய பெண்டு பில்லொ எங்கொ சல்த கெரன். நிஜ்ஜம் ஜிவ்னம் தேரிய பனிகஸுஜோள் தேவ் எங்கொ பெல்லி ஜான். (ஏசா 49:10; எரே 2:13; எசே 34:23; ஸங் 23:1-2) தேவ் தெங்கொ தொளாம் பனிக் பொஸன்’’ மெனி ஸங்க்யாஸ். (ஏசா 25:8)


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ