25 பகவான் அபுல் யுத்த அயுதுல்னுக் பராட் கள்ளி அவ்டியாஸ்; தெனு ராக்³ பொடெஹால் அஸ்கி யுத்த உபகரணுக் துக்கிலி அவ்யாஸ். ஸர்வ ஸக்தி தேவ் பகவான் பாபிலோனுக் விரோத்கன் கெர்ரிய தீர்மான் எல்லேஸ்.
பலம் பொரெ ரஜானு! மஹிமெ, மஹத்வம் ஸெங்கொ ராஜ்ஜலரிய ரஜானு! தும்ரெ கேடும் பட்டயம் பந்திலி அவொ!
துமி தட்டரிய பா³ண் தும்ரெ விரோதின்கெ ஹிருதயமுக் குஸ்கிலி ஜாய்; துஸ்ர தேஸு மென்க்யான் அவி தும்ரெ பாய்ஞ் கா²ல் பொடன்.
தொளர் தெக்காரிய அஸ்கினாக், ஹாதும் ஸம்டரிய ஒண்டொண்டெதெகாக் செக்கி மொரடன்.
அஸ்கி பொங்குட்ரீ: யுத்தமுக் நிகிளி அவொ; பாபிலோன் ஸரணாகதி ஹொயெஸ்; தெகொ பட்ணமு ரவுள் புட்டி பொடெஸ்; பாபிலோனுக் பகவான் பொரொ க²டராஸ்; துமி மெளி தெல்லெ தேஸுக் பொரொ க²டுவொ; தும்கொ கோனக் ஹிம்ஸொ கெராஸ்கி திஸோஸ் துமி மெளி தெங்கொ ஹிம்ஸொ கெருவொ.
பகவான் பாபிலோனுக் ஸீ, “தூஸ் மொர் ஹத²டொ; தூஸ் மொர் யுத்த அயுதுல்னு. புலோகுர் ஸேஸ்தெ தேஸுனுக்கின் ராஜ்யமுனுக் நாஸ் கெரஸ்தக் மீ தொகொ உபயோக் கெரரியொ.
பாபிலோனு, தூ புலோகுக் நாஸ் கெரரிய தொங்கர்கன் ஹொதெஸ்; அத்தொ மீஸ் தொகொ விரோத்கன் ஸே மெனி பகவான் மெனராஸ். தொங்கர் உஞ்சொரீ: மீ தொகொ தொப்புது; மீ தொகொ நாஸ் கெரெ பல்சொ மத்திஸோன் தூ பொட்ரா:ய்.
பகவான் பாபிலோனுக் நாஸ் கெரராஸ்; தேட் கொன்னி நீ:ஸ்தக் ரிக்த கெரட்யாஸ்; விரோதின்கெ ராணுவம் ஸெந்துரு லாடுன்ஸோன் கர்ஜன கெர்லேத் அவரியொ; தெனு கெட்டி ஸெத்து³கன் ரெச்சொ தகிலேத் அவராஸ்.
யுத்தமுக் கு³ர்துகன் ஸங்க³நாது புகரிய ஸெத்து³க் அய்கிதி, மென்க்யான் தக்குனா ரே:டன்கீ? பகவான் தீர்மான் கெர்னா முல்லோஸ் தேஸுக் நாஸ் அவய்கீ?
தேஹாலிம், தெகொ அவஞ்ஜாரிய ரோகுன், மொரன், து³க்கு, து³காள் அஸ்கி ஒண்டே தின்னும் அவய். அக்னி தெகொ ஜெளய். காமெனெதி தெகொ நியாவ் ஸார்வொ கெரரிய தேவ் பகவான் ஸர்வ ஸக்தி ஸேஸ்தெனு.’’