27 பகவான் ஸங்கராஸ்: “எல்லெ தேஸ் பூரா நாஸ் ஹோய்; ஹொயெதி அஸ்கி தாமுனுக் மீ திஸனி கெர்னா.
“இஸ்ரயேல்னு விஷ்ராம் தின்னு விதின்தானுக் சல்த கெல்லுனாஸ்தஹால் 70 (ஸீரு) ஒர்ஸு தேஸ் ரிக்தகன் பொட்ரா:ய்” மெனி எரேமியா தீர்கதரிஸி ஸங்கெ வத்தான் பூர்தி ஹொயெஸ். (லேவி 26:34-35; எரே 25:11)
ஹொயெத் மெளி துமி தெங்கொஜோள் ஜுகு ப்ரேவ்கன் ஸேஸ்தெஹால் துமி தெங்கொ நாஸ் கெர்யானி. துமி தெங்கொ ஹாத் ஸொட்யானி. காமெனெதி மஹா ப்ரேவ்கின் வேன் தயவு ஸேஸ்தெ தேவ் துமீஸ்.
ஒலிவ ஜாடுன்கெ பொள்ளானுக் தொடெ பல்சொ உஞ்சா கொம்மானும் தேட் தேட் தெவ்ட பொள்ளான் ஸேஸ்தெஸோன் இஸ்ரயேல்னும் மெளி தெவ்டதெனு கெத்தி³ ஜீவ் ஸெந்தொ ரா:ன் மெனி இஸ்ரயேல்கெ தேவ் பகவான் ஸங்கராஸ்.
ஏலா, பகவான் புலோகுக் ரிக்த கெரன். மென்க்யான் கொன்னின் ஜிவன் முஸுனா; பு⁴ஞி வளுராண் ஹோய்; மென்க்யான் அஸ்கி தாம் சொல்லய் ஜான்.
தேஹாலிம் அத்தெங்குட் தெங்கொ தேஸ் ஜுகு மோஸ்கன் ரா:ய்; கொப்பிம் அவ்மான் பொந்தய்; தெல்லெ வாட்கன் ஜாஸ்தெனு அஸ்கின் தெல்லெ தேஸுக் ஸீ ஆச்சர்யம் பொடன்; கோனக் ஹொதெ தேஸ் அத்தொ கோனக் ஸே மெனி அபுல் தொஸ்காக் ஹவ்லி கேலி கெரன்.
எல்லெ தேஸ் பூரா வளுராண் ஹோய்; சுட்டுர் ஸேஸ்தெ அஸ்கி தேஸுன் ஸீரு ஒர்ஸு பாபிலோன் தேஸுக் ப⁴ந்தைதுன்கன் ரா:ய். (தானி 9:2)
தொகொ கபடஸ்தக் மீ துரெ ஸெந்தொ ஸே மெனி பகவான் மெனராஸ். கோன் கோன் தும்கொ ப⁴ந்தைதுன்கன் உட்சிலி ஜியாஸ்கீ தெங்கொ அஸ்கினாக் மீ நாஸ் கெரு; ஹொயெதி மீ தொகொ நாஸ் கெர்னா; தண்டன கெத்தி³ தொவு; நீதிகன் மீ தொகொ நியாவ் ஸார்வொ கெரு. (எரே 46:27,28)
ஹொல்லெ ஹொல்லெ லாடுன்ஸோன் நாஸ் அவ்லேத் ஸே; பூரா தேஸ் நாஸ் ஹொஜ்ஜிரியொ; ரி:யெவந்நு அம்ரெ த⁴வ்ராக் விரோதின் பொடி நாஸ் கெர்திகியாஸ்; அம்ரெ கே⁴ர்னு ருவ்வெ கெ⁴டிம் ரிக்த பொள்டியொ.
ம:ட்ட ராணுவம் ஸிம்ஹுன் ஸோன் கர்ஜன கெர்லேத் அவரெஸ்; அஸ்கி மென்க்யானுக் நாஸ் கெரஸ்தக் அவராஸ்; தெனு தும்ரெ தேஸுக் நாஸ் கெரன்; தும்ரெ பட்ணமுனுக் பொடி தகன்; தேட் கொன்னின் ஜிவன் முஸுனாஸ்ததானுக் கெரன்.
ஸெத்லகன் மொர் ராக்³கின் உக்கு³ர் தெங்கொ ஹொல்லெ அக்னிகன் லுச்சயெஸ்; த்யெலெந்தால் எருசலேம்கின், யூதா தேஸுகெ பட்ணமுன் ஜெளி நாஸ் ஹொயெஸ். அத்தொ மென்க்யான் நீ:ஸ்தக் ரிக்தகன் ஸே.
மொர் ஸெவ்கன் யாக்கோபு! தக்குங்கொ; மீ துரெ ஸெங்கொ ஸே மெனி பகவான் ஸங்கராஸ். மீ கோன் தேஸுக் தும்கொ தெர்மி ஸொடெஸ்கி தெல்லெ தேஸு மென்க்யானுக் மீ நாஸ் கெரு; தும்கொ ஸெர்க கெரி சொக்கட் வாடும் பெல்லி அவஸ்தக் மீ தும்கொ தண்டன தியெஸ்; மீ தும்கொ அஸ்கினாக் நாஸ் கெர்னா: மெனி பகவான் ஸங்கராஸ்.
மீ தெங்கொ திராட்செ பொள்ளா லாநுக் நாஸ் கெருவொ மெனி தெங்கொ விரோதின்ஜோள் ஸங்கு; ஹொயெதி மூள் ஸெந்தொ உக்கி தகுனாஸ்தக் நிஸ்த கொம்மானுக் கெத்தி³ செக்கி தகொ; காமெனெதி தெல்லெ கொம்மான் பகவானுக் பாத்யம் நா:
ஹொயெதி தெல்லெ தின்னுநும் மெளி மீ தும்கொ அஸ்கினாக் நாஸ் கெர்னா” மெனி பகவான் மெனராஸ்.
தெப்பொ யூதா பட்ணமும்கின் எருசலேமும் ஸொந்தோஷு ஸெத்து³ அய்கானா; நொவ்ரா நொவ்ரின் ஹொராட் கெல்லி கவரிய கீது ஸெத்து³ மெளி அய்கானா; காமெனெதி தேஸ் பூரா ரிக்தகன் பொட்ரா:ய்.
தெப்பொ பகவான் மொகொ ஸீ, “மீ எருசலேமுக் நாஸ் கெரு. தேட் மத்திகின் குண்டான் பொரி ரா:ய்; கொ²லான் தேட் காப் ரா:ய்; யூதா தேஸு பட்ணமுன் ரிக்தகன் பொட்ரா:ய்.
மொர் மஹா ப்ரபு அபுல் பலி பீடமுக் நொக்கொ மெனி தொப்பிதியாஸ். தெனு அபுல் பரிஸுத்த த⁴வ்ராக் த்³வேஷ் கெர்யாஸ். தெக ரவுளுக் பொடி தக்யாஸ். தெமாம் விரோதின் அவஸ்ததானுக் கெர்யாஸ். தெனு அஸ்கின் பகவான்கெ த⁴வ்ரா பிஸ்தர் துரி, ஸெந்நு மடரிய தின்னுநும் ரெச்சொ தகரியஸோன் ரெச்சொ தக்யாஸ்.
மீ தீர்கதரிஸனம் ஸங்கெவேளு பெனாயாகெ பெடொ பெலத்தியா மொரெஸ். பல்சொ மீ தேவுகெ பாய்ஞ்ர் பொடி, ஸெத்து³கன், “ஐயோ, மஹா ப்ரபு பகவானு, இஸ்ரயேலும் ஸேஸ்தெ அஸ்கி மென்க்யானுக் நாஸ் கெரஞ்ஜாராஸ்தெகீ!” மெனி ரெச்சொ தகி ரொடெஸ்.
தெப்பொ மெளி மீ தெங்கொ தயவு தெக்கடெஸ்; மீ தெங்கொ அஸ்கினாக் வளுராணும் நாஸ் கெரெனி.
பூரா தேஸ் நாஸ் ஹொயி ரிக்தகன் பொட்ரா:ய்; அபுல் பலமுக் நொம்மி ஜிவெ இஸ்ரயேல்னுகெ ஹகம் உட்கய். தொங்கர்னு பூரா ராண்கன் ஹோய்; மென்க்யான் தேட் ஜிவன் முஸுனா.
மீ தெங்கொ விரோத்கன் ஹுடி அவி தெங்கொ தேஸுனுக் நாஸ் கெரு. இஸ்ரயேல்னு ஜிவரிய தக்ஷிண் திக்கு வளுராணும் ரீ: உத்தர் திக்கும் திப்லா லெங்கு ஸேஸ்தெ பட்ணமுனுக் மீ நாஸ் கெரு. அஸ்கி கா³முன் மென்க்யான் நீ:ஸ்தக் ரிக்தகன் பொட்ரா:ய். தெப்பொ மீஸ் பகவான் மெனஸ்தெ தெனு களைளன்.
தும்ரெ பட்ணமுன் ஸுக்கி வளுராண் ஹோய். துமி மொகொ பாய்ம் பொடரிய பரிஸுத்த தாமுன் நாஸ் ஹோய். துமி தேரிய பலின் மொர் மொன்னுக் ப்ரேவ் லகுனா.
தெனு விரோதின்கெ தேஸும் ரி:யெத் மெளி அஸ்கி மென்க்யான் நாஸ் ஹோஸ்தக் மீ ஸொட்னா. மீ தெங்கொ ஒள்ட்யான்ஜோள் கெல்லியெ நியமந்த்தானுக் மீ தெங்கொ கபடு. தெங்கொ தேவ் பகவான் மீஸ்.
பகவான்கெ உக்கு³ர் தின்னும் தும்ரெ ஸொந்நொகின், ருப்பொ தும்கொ ஒத்குனா. தெல்லெ தும்ரெ ஜீவுக் கபட்னா. புலோக் ஜெளி நாஸ் ஹோய். புலோகுர் ஜிவரிய அஸ்கினாக் பகவான் நாஸ் கெரன். ரி:யெவந்நு தெல்லெ தின்னு அவய்.