12 ஸர்வ ஸக்தி பகவானு, துமி நீதிமானுக் பரிக்ஷ கெரி ஸான்; அஸ்கினா மொன்னு ஹவ்டன் தும்கொ களாய்; மொர் விரோதின் நாஸ் ஹோஸ்த மீ ஸாஸ்ததானுக் கெருவொ; மொகொ காய் ப்ரசன மெனி மீ தும்ரெஜோள் ஸங்கிதிரியொ.
தெனொ மொரஸ்தவேளு ரஜாக் ஸீ, “தூ கெரஸ்த பகவான் ஸிலேத் ஸே; தெனு தொகொ தண்டன தேன்” மெனி மெனெஸ்.
பகவான் நீதிமானுக் பரிக்ஷ கெரி ஸாராஸ்; துஷ்டுடுனுக்கின், மூர்குடுனுக் தெனு த்³வேஷ் கெரராஸ். (ஆதி 22:1; யோபு 23:10; யாக் 1:12)
தேவு! மொகொ ஸோதன கெரி, மொர் மொன்னுக் களைளுவொ; மொகொ பரிக்ஷ கெரி, மொர் ஹவ்டனுக் களைளுவொ.
மொர் மொன்னு தும்கொ களாய்; தும்ரெ த⁴வ்ராக் அவ்ரிய மொகொ எல்லெ ராதிவேளும் மெளி ஸோதன கெரி ஸவொ; ஒண்டெ சூக் மெளி துமி மொர்ஜோள் தெக்குனான்; மொர் தோணு வத்தாம் மெளி மீ பாப் கெர்னா ர:வு மெனி தீர்மான் கெல்லிரியொ.
அஸ்கி ஆபத்தும்ரீ: துமீஸ் மொகொ கபட்யாஸ்; துமி மொர் தொளா வெதுருஸ் மொர் விரோதினுக் தக்கி தமட்யாஸ்.
துஷ்டுடுனுக் தண்டன அப்பஸ்தவேளு நீதிமானுன் ஸொந்தோஷ் பொடன்; தெனு தெங்கொ விரோதின்கெ ரெகதும் பாய்ஞ்ன் து⁴வன்.
தேவ் மொர்ஜோள் ப்ரேவ்கன் ஸேஸ்தெஹால் தெனு மொகொ ஸாஸ்தக் அவன்; விரோதினுக் மீ ஒடடஸ்தக் தேவ் மொகொ ஹேது கெரன்.
மென்க்யானு, துமி கொப்பிம் தேவுக் நொம்முவொ; தெங்கொ ஸந்நிதிம் ஜீ தும்ரெ மொன்னு பா⁴ர்னுக் லுச்சுதுவொ; தேவூஸ் அம்ரெ ஸரணாகதி. (1 சாமு 1:15; ரொட்னி 2:19)
துஷ்டுடுகெ ஹீன் க்ரியானுக் நாஸ் கெருவொ; நீதிமான்னுக் ஹேது கெருவொ; நீதி தேவு, அம்ரெ ஹவ்டன்கின் மொன்னு தும்கோஸ் களாய். (தர்ஸன 2:23)
மொர் மஹா ப்ரபு! தும்ரெ ஸெவ்கன்கெ மொன்னுக் ஸொந்தோஷ் கெருவொ; மீ தும்கொ ஸீ மொன்னுஜந்த ப்ரார்தன கெரரியொ.
எசேக்கியா ரஜொ அபுல் தூதுன் கள்ளி அவெ லேகுக் செவ்தெஸ். தெனொ பகவான்கெ த⁴வ்ராக் ஜீ பகவான்கெ ஸந்நிதிம் தெல்லெ லேகுக் ஹுடி தொவெஸ்.
மொரஞ்ஜாரிய சிடிஸோன்கின், ப⁴கொஸோன் மீ ரெச்சொ தகெஸ். கவ்து³ஸோன் மீ து³க்குகன் ஹொதெஸ்; மொகொ பீர் ஜீவ் அப்பய்கீ மெனி மொர் தொளான் பகவானுக் ஸீ ஸீன் பொள்டியொ; மொர் பகவானு, மீ வேன் ஹிம்ஸொ பொந்தரியொ; மொகொ கபடுவொ.
தேஹாலிம் ஸர்வ ஸக்தி பகவானு, துமி நீதிகன் நியாவ் ஸார்வொ கெரஸ்தெனு; மென்க்யானுகெ யோசனானுக்கின், ஹவ்டனுக் களைள்ரியெ தேவ் துமீஸ்; துமி தெல்லெ விரோதினுக் தண்டன தேஸ்த மீ ஸனொ; மீ மொர் ப்ரசனாக் தும்ரெஜோள் ஸங்கிதியொ.
மீ களைளியெ மென்க்யானூஸ் மொகொ விரோத்கன் ஸே; ராணு ஸிம்ஹுஸோன் மொகொ விரோத்கன் ரகளெ கெரராஸ்; தேஹாலிம் மீ தெங்கொ த்³வேஷ் கெரி தொப்பிதியொ.
பகவான்கன் ஸேஸ்தெ மொகோஸ் மென்க்யானுகெ மொன்னும் காய் ஸே மெனி களாய்; தெங்கொ ஹவ்டனுக் ஸோதன கெரி மீ களைளு; தென்தெனு கெரரிய க்ரியானுக் தகெ ப²லனுக் மீ தொ³வு. (ஸங் 88:12; தர்ஸன 2:23)
மொகொ ஹிம்ஸொ கெரஸ்தெனு அவ்மான் பொந்தந்தக்; தா⁴க் ஸெந்தொ ஜிவந்தக்; மீ அவ்மான் பொந்தஹோனா; தா⁴க் நீ:ஸ்தக் ஜிவ்னொ; தேவு, ஹீன்கின், நாஸ் தெங்கொ அவந்தக்; தெங்கொ அஸ்கினாக் துமி துவம்ஸம் கெருவொ.
தெங்கொ கா³ளியவேளு தெனு ப⁴ர்தி கா³ளியானி. ஹிம்ஸொ கெரெவேளு தக்கட்யானி. நியாவ் ஸார்வொ கெரரிய தேவ்ஜோள் அபுலுக் ஒப்பிஞ்சி தியாஸ்.
தேஹாலிம் தேவுகெ சித்தம்தானுக் ஹிம்ஸொ பொந்தஸ்தெனு சொக்கட்யெ கெரஸ்தெமாம் நிள்சி ரீ: அஸ்கினாக் ஸிருஷ்டி கெரெ நொம்கெ ஹொயெ தேவ்ஜோள் அபுலுக் ஒப்பிஞ்சி தேந்தக்!
பரலோகு, தேவுகெ மென்க்யானு, அப்போஸ்தலர்னு, தீர்கதரிஸினு, அஸ்கின் தெகொ ஸீ ஸொந்தோஷ் பொடுவொ. தும்ரெ ஸார்புகன் தேவ் தெகொ நியாவ் ஸார்வொ கெர்யாஸ்.
தெங்கொ பில்லல்னுக் மொரடு. மெனிகுகெ மொன்னுக்கின், யோசனானுக் ஸம்ஸோதன கெரஸ்தெனு மீஸ் மெனஸ்த அஸ்கி ஸபா மென்க்யான் களைளன். துமி கெரெ க்ரியானுக் தகெ ப²லன் தும்கொ அப்பய்.
தெனு, “பரிஸுத்தம்கின், நீதி பொ⁴ரெ பகவானு, அங்குன் கித்க தின்னு லெங்கு துமி நியாவ் ஸார்வொ கெர்னா ரா:ன்? அம்கொ ஹத்யொ கெரெ மென்க்யானுக் கித்க தின்னு லெந்து துமி தண்டன தேனா ரா:ன்?’’ மெனி கெ⁴ட்டி ஸெத்து³கன் புஸ்யாஸ்தெ மீ அய்கெஸ்.
தெல்லெகொ அன்னாள், “அய்யானு, மீ போத பனி பீரியொ நா: மீ ஜுகு து³க்குகன் ஸே; மொர் மொன்னு விசாருக் மீ பகவான்ஜோள் மெல்லி ரொட்லேத் ஸேஸ்தெ.