11 தெல்லெ தேஸ் அத்தொ ரிக்தகன் ஸே; பனி நீ:ஸ்தக் ஸுக்கி ஸே; ஹொயெதி கொங்கினாக் கை விசார் நீ:
ஜெமனு கே⁴ருக் ஜாஸ்த ஸொம்மர் மொரனு கே⁴ருக் ஜாஸ்த பரொ. காமெனெதி, “அமி மெளி ஒண்டெதி மொரன்” மெனி அஸ்கின் களைளன்.
தேஹாலிம் தெனு அபுல் மென்க்யான்ஜோள் வேன் ராக்³ பொட்யாஸ்; பயங்கர யுத்தம் சலெஸ். தேவுகெ ராக்³ தெங்கொ லொவ்லி ஹெடெஸ்; தெப்பொ மெளி தெங்கொ ஸ்வரண லகெனி. தேவுகெ வத்தானுக் தெனு கானும் தகிலியானி.
நீதிமானுன் மொரராஸ்; கொங்கினாக் எல்லெ ம:ட்டகன் லகரெனி; தின்னு அவ்னா முல்லோஸ் பக்துடுன் மொஜ்ஜராஸ்; ககொ இஸனி ஹோரியொ மெனி கொன்னின் ஹவ்டி ஸாரானி; ஹீன் தின்னுன் அவ்னா முல்லோஸ் தேவ் தெங்கொ கள்ளுடராஸ் மெனஸ்த கொங்கினாக் களாரெனி.
ஏலா, அய்குவொ; ஒண்டெ ம:ட்ட ஸெத்து³அய்காரெஸ்; தெல்லெ ஸெத்து³ லெகுத்தகன் அய்காரெஸ்; உத்தர் திக்கும்ரீ: ம:ட்ட ரகளெ அவரெஸ்; யூதா தேஸுகெ பட்ணம் நாஸ் ஹொயி கொ²லான் காப் ரா:ரிய தாம்கன் ஹோய்.
தும்கொ பாய்ம் பொட்னாஸ்த துஸ்ர தேஸு மென்க்யானுக்கின், தும்ரெ நாவுக் கெனம் கெர்னாஸ்த மென்க்யானுக் துமி நாஸ் கெருவொ; காமெனெதி தெனு தும்கொ பாத்யம் ஹொயெ யாக்கோபுகெ ஸந்ததினுக் நாஸ் கெர்யாஸ்; தெனு தெங்கொ அஸ்கினாக் நாஸ் கெர்திகியாஸ். தெனு ஜிவெ தேஸுக் ரிக்த கெர்திகியாஸ்.
“யூதா தேஸ் ஜுகு து³க்குகன் ஸே; தேட் பட்ணமுன் பனி நீ:ஸ்தக் ஸுக்கி பொட்ரியொ; மென்க்யானுகெ மொன்னு தி⁴ல்ல ஸுட்டியிரியொ; எருசலேம் மென்க்யான் ரெச்சொ தகிலேத் ஸே.
எல்லெ பட்ணம் ஜுகு கொடூரம்கன் தெக்காய்; அஸ்கின் தெகொ அவ்மான் கெரன்; தெல்லெ பட்ணமுக் ஸாஸ்தெனு அஸ்கின் தக்கி பெதிரி பொடன்; கோனக் ஹொதெ பட்ணம் அத்தொ கோனக் ஸே மெனி ஆச்சர்யம் பொடன்.
காமெனெதி தேஸ் பூரா விபச்சார் வேன் ஸே; பகவான்கெ ஸாபன தேஸ் ஹொல்லெ ஸே; வளுராண்கெ கச்சலு தாம் ஸுக்கி ஜேட்ரியொ; அஸ்கின் துஷ்டுடுன்கன் ஸே; தெங்கொ பலம் பூரா ஹீன் கார்யமுன் கெரஸ்தக் உபயோக் கெரராஸ்.
எல்லெ தேஸ் பூரா வளுராண் ஹோய்; சுட்டுர் ஸேஸ்தெ அஸ்கி தேஸுன் ஸீரு ஒர்ஸு பாபிலோன் தேஸுக் ப⁴ந்தைதுன்கன் ரா:ய். (தானி 9:2)
ஹொல்லெ ஹொல்லெ லாடுன்ஸோன் நாஸ் அவ்லேத் ஸே; பூரா தேஸ் நாஸ் ஹொஜ்ஜிரியொ; ரி:யெவந்நு அம்ரெ த⁴வ்ராக் விரோதின் பொடி நாஸ் கெர்திகியாஸ்; அம்ரெ கே⁴ர்னு ருவ்வெ கெ⁴டிம் ரிக்த பொள்டியொ.
பகவான் ஸங்கராஸ்: “எல்லெ தேஸ் பூரா நாஸ் ஹோய்; ஹொயெதி அஸ்கி தாமுனுக் மீ திஸனி கெர்னா.
எகலெந்தால் பு⁴ஞி அங்குலாப் பொடய்; அகாஸுன் ஹந்தார் பொடய்; மீ ஸங்கெஸ்தெ கெரீஸ் திரு; மீ மொர் மொன்னுக் மர்சுல்னா; மீ கெரெஸ்தெ ஹவ்டி மொர் மொன்னு விசார் பொட்னா; மீ ஸங்கெதானுக் கெரு.
தேஹாலிம் எருசலேம் மென்க்யானு, ஜாக்ரதகன் ர:வொ; துமி ஹிம்ஸொ பொந்தஸ்தவேளு மீ தும்கொ ஹாத் ஸொட்டு; துரெ பட்ணமும் மென்க்யான் கொன்னின் ரா:னான்; வளுராண்கன் ரா:ய்.
“அம்ரெ தொங்கரு தேஸுக் ஹவ்டி ரொடியேன்; அம்ரெ கச்சலு தாமுனுக் ஹவ்டி ஹேமுர் ஹன்லியேன்; காமெனெதி அத்தொ தெல்லெ தாமுன் அக்னிம் ஜெளி நாஸ் ஹொஜ்ஜிரியொ; தெல்லெ வாட்கன் கொன்னின் அவரானி; காய் பெண்டுன் தேட் ஜிவரெனி; மூகுனுகெ ஜவ்னி அவ்னிமெளி தேட் நீ: அகாஸு பக்ஷின் மெளி தெங்குட் ஹுடி ஜாரெனி.
தெப்பொ பகவான் மொகொ ஸீ, “மீ எருசலேமுக் நாஸ் கெரு. தேட் மத்திகின் குண்டான் பொரி ரா:ய்; கொ²லான் தேட் காப் ரா:ய்; யூதா தேஸு பட்ணமுன் ரிக்தகன் பொட்ரா:ய்.
இஸான் மென்க்யானுக் மீ தண்டன தேனா ர:வுகீ? இஸான் தேஸுக் மீ பொரொ க²ட்னா ஸொட்டுகீ?” மெனி பகவான் மெனராஸ்.
சேனுன் ரிக்தகன் பொட்ரியொ. பு⁴ஞி கொ³ட்டுகன் ஸே. பிக்கெ தான்யம் நாஸ் ஹொஜ்ஜிரியொ. திராட்செ ஜட்கின் ஸுக்கி ஜேட்ரியொ. ஒலிவ ஜாடுன் மொஜ்ஜிரியொ.
தும்ரெ விரோதின் மெளி தும்ரெ தேஸுக் அவரிய நாஸுக் ஸீ பெதிரி பொடன்.
எல்லெ தேஸு மென்க்யான்ஜோள் தூ இஸனி ஸங்கி: “ 70 (ஸீரு) ஒர்ஸுகன் துமி பஞ்ச்வ ம:டாம்கின், ஸத்வ ம:டாம் உபவாஸ் ரி:யாஸ்னா? மொகொ கெனம் கெரஸ்ததானுக் துமி உபவாஸ் ரி:யாஸ்கீ? (ஏசா 58:4,5)
துமி திஸனி கெர்னா ஜியெதி தும்கொ ஸாபன அவய்; தும்ரெ ஆஸீர்வாதுக் மீ ஸாபனகன் மர்சடு. துமி மொர் ஆக்³ஞானுக் அலக்ஷ்யம்கன் ஹவ்டரியஹால் தும்ரெ ஆஸீர்வாதுக் ஸாபனகன் மர்சடு” மெனி ஸர்வ ஸக்தி பகவான் ஸங்கராஸ்.
ஹிந்தா தின்னு லெங்கு தெல்லெ ஸிருஷ்டின் அஸ்கி, ஜத்கெம் பாத பொந்தி அல்லடரியொ மெனி அம்கொ களாய்.