1 ஒண்டெதி துபார் தீ²ன் கெ³ண்டொ ப்ரார்தன கெரரிய கெ⁴டி பேதுருகின், யோவான் த⁴வ்ராக் ஜியாஸ்.
வீள்டொ புஜெ கெரரிய கெ⁴டி அவெஸ். எலியா தெல்லெ பலி பீடம் லெகுத்த கு³ட்க்யாஸ் தகி, “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுகெ தேவூ, பகவானு, இஸ்ரயேல்கெ தேவ் துமீஸ் மெனிகின், தும்ரெ வத்தாதானுக் எல்லெ அஸ்கி மீ கெரரியொ மெனஸ்த ஹிந்தொ எல்லெ மென்க்யானுக் களடுவொ.
ஸொளபார், து⁴பார், வீள்டொ மீ தேவ்ஜோள் மெல்லி ரொடு; தெனு மொர் ஸெத்து³க் அய்கன்.
ஒண்டெ பெண்டு பில்லாக் ஸொளபார்கின், அங்குண்டெ பெண்டு பில்லாக் வீள்டொ ஹந்தார் பொடஸ்தவேளு பலி தே.
எல்லெ உத்தர் அமுலுக் அவெஸ்தெ களையெ பல்சொ மெளி, தானியேல் அபுல் உஞ்சா கே⁴ரு விடிக் ஹுடி, எருசலேமுகெ த⁴வ்ரா பொங்குட் ஸீ, கு³ட்க்யால் தகி, கொ²ப்பி³ஸோன் நிச்சு தீ²ன்வாள் அபுல் தேவுக் ஸீ ப்ரார்தன கெரெஸ்.
இஸனி மீ ப்ரார்தன கெர்லேத் ர:த, வீள் ஹொயி த⁴வ்ராம் பலி தேரிய கெ⁴டி, மீ மொர் முல்லா தர்ஸனாம் தெக்கெ காபிரியேல் மெனஸ்த தூது மீ ஹொதெ தாமுக் அவி மொகொ ஹாத் தெரி,
எமாம் ஒண்டெ பெண்டுக் ஸொளபார்கின், அங்குண்டெ பெண்டுக் வீள்டொ பலி தெ³னொ.
ஏசு அபுல் மொரனுகுர்சி சிஷ்யான்ஜோள் ஸங்கெ ஸோ தின்னு பல்சொ தெனு பேதுருக்கின், யாக்கோபுக்கின், தெகொ பை⁴ யோவானுக் பெல்லி, அலக்க³ ரா:ஸ்தக் ஒண்டெ உஞ்சொ தொங்கருக் ஜியாஸ்.
பேதுருக்கின் செபதேயுகெ பெடான் தீ³தெங்காக் அபுல் ஸெந்தொ பெல்லி ஜியாஸ். ஏசுகெ மொன்னு ஜுகு து³க்குகன்கின், வேதனகன் ஹொதெஸ்.
துபார் பா³ர் கெ³ண்டொரீ: தீ²ன் கெ³ண்டொ லெந்து தேஸ் பூரா ஹந்தார் பொடெஸ்.
த்யெதானுக் சகரியா தூபம் தெக்கடஸ்தக் பகவான்கெ ஸந்நிதி பிஸ்தர் ஜியெஸ். மென்க்யான் மூகொகன் பராட் ஹிப்பி ப்ரார்தன கெர்லேத் ஹொத்யாஸ்.
‘தீ³ஜெனு ப்ரார்தன கெரஸ்தக் த⁴வ்ராக் ஜியாஸ். ஒண்டெதெனொ பரிசேயன்; அங்குண்டதெனொ வரி வசூல் கெரஸ்தெனொ.
ஏசு பேதுருக்கின் யோவானுக் பொவி, “அமி பஸ்கா ஜெமன் காஸ்தக் துமி ஜீ தயார் கெருவொ’’ மெனி ஸங்க்யாஸ்.
த⁴வ்ராம் தேவுக் ஸ்துதி கெரி நிச்சு கீத் கவ்யாஸ்.
தெப்பொ ஏசுக் ப்ரேவ் ஹொயெ சிஷ்யொ பேதுருக் ஸீ, “தேட் ஹிப்பிரியாஸ்தெனு பகவான்’’ மெனி ஸங்கெஸ். தேட் ஹிப்பிரியாஸ்தெனு பகவான் மெனி சீமோன் பேதுரு அய்கஸ்தக்கின் அபுல் ஹொல்லா வஸ்தருக் தகிலி ஸெந்துரும் துங்கெஸ்.
ஒண்டெதி துபார் தீ²ன் கெண்டொ ர:த, தெனொ ஒண்டெ தர்ஸன தெக்கெஸ். தெல்லெ தர்ஸனாம், தேவுகெ தூது ஒண்டெதெனொ அபுல்ஜோள் அவி, “கொர்நேலியு’’ மெனி பொவெஸ்த சொக்கட் அய்கயெஸ்.
தெல்லெகொ கொர்நேலியு, “சார் தின்னு முல்லொ எல்லே கெ⁴டி, து⁴பார் தீ²ன் கெ⁴ண்டொ மீ மொர் கொ⁴ம்மொ ப்ரார்தன கெர்லேத் ர:த, ப்ரகாஸிஞ்சரிய வஸ்தர் பி²ல்லிய ஒண்டெ மெனிக் மொகொ வெதுர் அவி,
அஸ்கின் த⁴வ்ராக் அவி ஒண்டே மொன்னுகன் தேவுக் பாய்ம் பொட்யாஸ். ஒண்டொண்டெ கொ⁴ம்மானும் ஐக்யம்கன் அப்பம் கயாஸ்; அஸ்கின் ஸொந்தோஷ்கன் கபட் நீ:ஸ்தக் ஜிவ்யாஸ்.
பேதுருகின் யோவான் த⁴வ்ரா பிஸ்தர் ஜாஸ்தவேளு தெங்கொஜோள் தெனொ பீ⁴க் மகெஸ்.
தீ³தெனு தெகொ கம்சி ஸியாஸ். தெப்பொ பேதுரு, “அம்கொ ஸா’’ மெனி ஸங்கெஸ்.
பேதுருகின், யோவான் செவ்துனாஸ்தெனு மெனி யூத ஸபா மென்க்யானுக் களை ஹொதெஹால், தெங்கொ தைர்யமுக் ஸீ ஆச்சர்யம் பொட்யாஸ். தெனு தீ³தெனு ஏசு ஸெங்கொ ஹொத்யாஸ்தெனு மெனி மெளி களைளியாஸ்.
தெப்பொ ஒண்டெதெனொ அவி, “ஏலா, துமி கைது கெரி காராம் தொவெ மென்க்யான் த⁴வ்ராம் ஹிப்பிரி மென்க்யானுக் போதன கெரராஸ்’’ மெனி ஸங்கெஸ்.
தேவுகெ வத்தானுக் சமாரியர்னு ஒப்பிலியெஸ்தெ எருசலேமும் ஹொதெ அப்போஸ்தலர்னு அய்கினி பொடி, பேதுருக்கின் யோவானுக் தேட் தட்டியாஸ்.
தேவுகெ கிருபொ மொகொ மெளி தெனி பொடெஸ் மெனி தேவுகெ ஸபாக் கா²ம்புன்கன் ஹொதெ யாக்கோபு, பேதுரு, யோவான் களைளியெவேளு தெனு அம்கொ ஹேது கெரஸ்தக் அங்கிதம்கன் மொகொகின், பர்னபாக் ஹாத் தியாஸ். இஸனி அமி யூத குலமும் உஜுனாஸ்தெங்கொக்கின், தெனு யூதர்னுக் சொக்கட் ஸமசார் ஸங்குனொ மெனி நியமந்த் கெல்லியாஸ்.