3 மேசியா பாட் பொடி, மொரி ஜீவ் ஸெந்தொ ஹுடி அவன் மெனி வேதும் லிக்கி ஸே. “மீ தும்கொ ஸங்கரிய எல்லெ ஏசுஸ் மேசியா’’ மெனி இவர்கன் ஸங்கெஸ்.
தெப்பொ தெனு, “வாடும் தெனு அம்ரெஜோள் வத்தொ கெரி வேது வாக்யமுனுக் ஸங்கெவேளு அம்ரெ மொன்னு ஸொந்தோஷும் ஹுப்பெஸ்னா?’’ மெனி மெல்லியாஸ்.
ஏசு தெங்கொ ஸீ, “மோசே லிக்கெ நியாய ப்ரமாணும், தீர்கதரிஸின் லிக்கெ வேது புஸ்தவும், ஸங்கீத புஸ்தவும் மொகொகுர்சி லிக்கினி பொடெஸ்தெ அஸ்கி பூர்தி ஹொனொ மெனி மீ தும்ரெஜோள் ர:தோஸ் ஸங்கெஸ்னா’’ மெனி மென்யாஸ். (உபா 18:15; 18:19; ஏசா 7:14; 9:6; எசே 34:23; ஸங் 2:1-12; 16:10; 110:1-4)
அங்குன் ஏசு தெங்கொ ஸீ, “மேசியா ஹிம்ஸொ பொந்தி மொரி, தி²ன்வந்தி மொரனும்ரீ: ஜீவ் ஸெந்தொ ஹுடன்.
ஏசு மொரி ஜீவ் ஸெந்தொ ஹுட்னொ மெனி தேவுகெ வேது வாக்யமுக் தெனு அங்குன் இவர் கெல்லுனா ஹொத்யாஸ். (ஸங் 16:10; அப் 13:34-35)
தெல்லெ 40 (சளிஸ்) தின்னுநும் ஒண்டெதி, ஏசு அப்போஸ்தலர்னு ஸெந்தொ பி³ஸி க²வ்ணம் கய்லேத் ர:த, தெங்கொ ஸீ, “துமி எருசலேம்ரீ: ஜானாஸ்தக் மீ தும்ரெஜோள் ஸங்கி ஹொதெ பரலோகு பா³புகெ வாக்கு பூர்தி ஹோஸ்த லெங்கு எடூஸ் ர:கிலேத் ர:வொ.
தெனொ தேட் ஜியெ பல்சொ தேவுகெ கிருபொஹால் விஸ்வாஸினுக் ஜுகு ஹேதுகன் ஹொதெஸ். யூதர்னுஜோள் மெளி ஏசுஸ் மேசியா மெனி ஜுகு வேது வத்தான் ஸங்கி ரூபல கெரெஸ்.
மக்கெதோனியாம்ரீ: சீலாகின் தீமோத்தேயு அவெ பல்சொ, பவுல் அங்குன் வேன் தேவுகெ ஸமசாருக் வைராக்யுகன் போதன கெரெஸ். தெனொ ஏசுஸ் மேசியா மெனி யூதர்னுக் இவர்கன் ஸங்கெஸ்.
மேசியா ஹிம்ஸொ பொந்தி மொர்னொ மெனி தேவ் அபுல் தீர்கதரிஸின் வாட்கன் ஸங்கிரியாஸ். தேவ் ஜுகு தோ²ர்னு முல்லொ ஸங்கெ வத்தான் அத்தொ பூர்தி ஹொய்ரெஸ்.
சவுல்கீ அங்குன் தைர்யம்கன், ‘ஏசுஸ் மேசியா’ மெனஸ்த ரூபல கெரி வத்தொ கெரெஹால் தமஸ்கும் ஜிவெ யூதர்னு தெகொ ஜவாப் ஸங்கன் முஸெனி.
புத்தி நீ:ஸ்த கலாத்தியர்னு, ஏசு கிறிஸ்துக் ஸிலுவாம் ஹன்னி பொடெ காக்ஷிக் துமி தொளர் ஸியெஸோன் தும்கொ இவர்கன் ஸங்கினி பொடெஸ்னா? அத்தொ தும்கொ மந்துர் கெரி மர்சட்யாஸ்தெனு கோன்?