10 தேமாக் எல்லெ புலோகு கார்யமும் வேன் ஆஸெ அவெஹால் மொகொ ஸொட்டி தெசலோனிக்கா பட்ணமுக் ஜேட்யொ. கிரெஸ்கே கலாத்தியா தேஸுக்கின், தீத்து தல்மாத்தியா தேஸுக் ஜேட்யாஸ். (கொலோ 4:10,14)
மெனிகு பெடாக் விரோத்கன் கோன்தி காய்தி வத்தொ கெரெத் மெளி க்ஷமொ கெர்னி பொடய். ஹொயெதி பரிஸுத்த ஆவிக் விரோத்கன் கோன்தி காய்தி வத்தொ கெரெதி, தெகொ பாபுன் அத்தொ ஈ லோகும்கின், பரலோகும் மெளி க்ஷமொ கெர்னி பொட்னா. (லூக் 12:10)
தீர்கதரிஸின்கெ வத்தான் பூர்தி ஹோஸ்தக் எல்லெ அஸ்கி சலரியொ" மெனி ஸங்க்யாஸ். தெப்பொ சிஷ்யான் அஸ்கின் ஏசுக் ஸொட்டி தமி ஜேட்யாஸ்.
திஸோஸ் துமி தும்கொ பாத்யம்கன் ஸேஸ்தெ அஸ்கி, ஸொட்டி அவ்னா ஜியெதி மொர் சிஷ்யான்கன் ரா:ன் முஸுனா.
“ கொன்னின் தீ³ எஜமானுக் ஸேவொ கெரன் முஸுனா. காமெனெதி ஒண்டெதெகாக் த்³வேஷ் கெரி அங்குண்டெதெகொஜோள் ப்ரேவ்கன் ரா:ய். ஒண்டெதெகொஜோள் ப்ரேவ்கன் ரீ: அங்குண்டெதெகாக் நிராகரிஞ்சய். ஹன்னவ் செர்சுனொ மெனி நிகொ ஸேஸ்தெனொ தேவுகெ காமுக் மொன்னுஜந்த கெரன் முஸுனா’’ மெனி ஸங்க்யாஸ்.
லோத்துகெ பெய்லுக் சலெஸ்தெ ஹவ்டி ஸவொ.
பல்சொ பவுல்கின், தெகொ ஸெங்கொ ஜியாஸ்தெனு பாப்போ கா³முரீ: தாரு ஹிங்கி பம்பிலியாம் ஸேஸ்தெ பெர்கே கா³முக் ஜியாஸ். யோவான் தெங்கொ ஸொட்டி எருசலேமுக் பிரி ஜியெஸ்.
ஹொயெதி தெனொ அபுல் ஸெங்கொ பம்பிலியா தேஸும் தேவு காம் கெரஸ்தக் அவ்னாஸ்தஹால் தெகொ பெல்லி ஜாஹோனா மெனி பவுல் ஸங்கெஸ்.
பல்சொ, ஆசியாம் தேவு ஸமசாருக் போதன கெர்னாஸ்ததானுக் பரிஸுத்த ஆவி தெங்கொ அட்டம் கெரெஹால், தெனு பிரிகியா, கலாத்தியா தேஸு வாட்கன்,
தெனு அம்பிபோலி, அப்பொலோனியா கா³மு வாட்கன் தெசலோனிக்கே பட்ணமுக் ஜீ செராஸ். தேட் யூதர்னுக் ஒண்டெ ப்ரார்தன த⁴வ்ரொ ஹொதெஸ்.
தெசலோனிக்கா பட்ணமு விஸ்வாஸின் ஸொம்மர் பெரோயா பட்ணமு விஸ்வாஸின் சொக்கட் குண்ணு ஸேஸ்தெனு. தெனு தேவுகெ வத்தானுக் மொன்னுஜந்த ஒப்பிலி, பவுல்கின் சீலா ஸங்கராஸ்தெ ஸெர்கயா மெனி வேது வத்தானுக் நிச்சு நிகொகன் செவ்தி ஸியாஸ்.
பெரோயா பட்ணமும் மெளி பவுல் தேவுகெ ஸமசார் ஸங்கரெஸ் மெனி தெசலோனிக்கா பட்ணமுகெ யூதர்னு அய்கினி பொடி, தேட் மெளி ஜீ, ஜெனுல்னுக் ஸிட்³வி ஸொடி ரகளெ கெர்யாஸ்.
தேட் ருவ்வொ தின்னு வஸி ரி:யெ பல்சொ, கலாத்தியா தேஸுக்கின், பிரிகியா தேஸுக் ஜீ, சிஷ்யான் விஸ்வாஸும் தீ⁴ர்குகன் நிள்சி ர:னொ மெனி அஸ்கினாக் தைர்யம் ஸங்கெஸ்.
தேட் மொர் ஸெங்கொ பை⁴ தீத்து நீ:னாஸ்தஹால் மொர் மொன்னுக் ஜுகு பாத லகி, மீ தேட்ரீ: மக்கெதோனியா தேஸுக் ஜியெஸ்.
பாத பொந்தரிய மென்க்யானுக் ஆஸ்வாஸ் கெரரிய தேவ், தீத்துக் தட்டி அம்ரெ மொன்னுக் ஆஸ்வாஸ் கெர்யாஸ்.
தும்ரெஜோள் மீ தொவ்ரிய தெல்லே ப்ரேவுக் தீத்துகெ மொன்னும் மெளி தியெ தேவுக் தந்யவாத் கெரரியொ.
தீத்து கோன் மெனி கோன்தீ புஸெதி, “தெனொ மொர் ஸிங்கதி; மீ தும்ரெகுர்சி கெரரிய தேவு காமும் மொகொ ஹேது கெரஸ்தெனொ" மெனி ஜவாப் ஸங்குவொ. எகொ ஸெந்தொ அமி தட்டரிய துஸ்ர பை⁴ன் மெளி கிறிஸ்துகெ நாவ் மஹிமெ பொடஸ்ததானுக் ஸேவொ கெரஸ்தெனூஸ்.
துஸ்ரதெங்காக் தெ⁴ரும் கெரரிய எல்லெ சொக்கட் காமுக் ஹர்ம்பம் கெரெ தீத்து தெல்யெ காமுக் ஹத்து³ம் ஹிப்பட்னாஸ்தக் ஸெணம் முஸட்னொ மெனி தெகொஜோள் அமி மெல்லியாஸ்.
அஸ்கின் தென்தெனு சொக்கட் ர:னொ மெனீஸ் ஹவ்டராஸ். ஏசு கிறிஸ்துக் ஒப்பயெதானுக் ர:னொ மெனி ஹவ்டரானி.
ஹன்னவு ஆஸெ, அஸ்கி ஹீனுக் காரணொகன் ஸே. ஹன்னவு ஆஸெ ஸேஸ்தெனு தேவுக் விஸ்வாஸ் கெரஸ்த ஸொட்டரியஹால் தெனு ஜுகு ப்ரசனாம் ஸம்டி கஷ்டம் பொடராஸ். (யாத் 23:8; நீதி 28:20)
ஐஸ்வர்யவானுன் ம:ட்டபோன் பொந்துல ஹோனா. நிள்சி ரா:னா ஐஸ்வர்யமும் நொம்கெ தொவ்னாஸ்தக் அமி அநுபவிஞ்சஸ்தக் அஸ்கி வித ஆஸீர்வாதுக் பரிபூர்ணுகன் தேரிய ஜீவ் ஸேஸ்தெ தேவுக் நொம்முனொ. (மாற்கு 10:24)
பிகெல்லு, எர்மொகெனேகின், ஆசியாம் ஜிவரிய அஸ்கின் மொகொ ஹாத் ஸொட்டியாஸ் மெனஸ்த தொகொ களாய்.
மொகொ முல்லாவாள் விசான கெரெவேளு, மொர் தா³வாக் மீ ஸங்கெஸ். மொகொ ஸார்புகன் ஹிப்பி வத்தொ கெரஸ்தக் கொன்னின் அவ்யானி. அஸ்கின் மொகொ ஹாத் ஸொட்டியாஸ். தேவ் தெங்கொ க்ஷமொ கெரந்தக்.
ஆதி காலுமூஸ் தேவ் எல்லெ நித்ய ஜிவ்னமுகுர்சி வாக்கு தீரியாஸ். சொட்டொ வத்தொ ஸங்குனா தேவ் அத்தொ ஸெர்க ஹொயெ காலும் அபுல் வத்தானுக் பராட் களட்யாஸ். அம்கொ ரக்ஷண் கெரரிய தேவுகெ ஆக்³ஞொதானுக் சொக்கட் ஸமசார் ஸங்கரிய தெல்லெ தெய்வீக காமுக் மீ கெர்லேத் அவரியொ.
மொர் ஸெங்கொ காம் கெரரிய மாற்கு, அரிஸ்தர்கு, தேமா; லூக்கா எனு அஸ்கின் தொகொ நமஸ்கார் ஸங்கராஸ். (அப் 12:12,25; 13:13; 15:37-39; 19:29; 27:2; 2 தீமோ 4:10-11)
நீதிகன் ஜிவரிய வாடுக் ஸொட்டி பேயோருகெ பெடொ பிலேயாம் ஜியெ வாடும் எனு ஜியாஸ். எல்லெ பிலேயாம் ஹீன் வாடும் ஜீ ஹன்னவ் ஸம்பாத்யம் கெரன் ஸியெஸ்.