18 நீதிகன் ஜிவ்னொ மெனி ஹவ்டி அத்தொ லெகுத்தாம் தேவுக் களைளியெ மென்க்யான்ஜோள் எனு ம:ட்டபோன்கன் வத்தொ கெரி, அபுல் ஸரீர இச்சான்தானுக் சல்த கெல்லி தெங்கொ தந்துர்கன் உட்சுலராஸ்.
ஒள்டு தீர்கதரிஸி ஸங்கெஸ்தெ நிஜ்ஜம் மெனி ஹவ்டி தெல்லெ தீர்கதரிஸி தெகொ ஸெந்தொ ஜீ, தெகொ கொ⁴ம்மொ க²வ்ணம் கயெஸ். ஸோகு பனி பியெஸ்.
தூ மொகொ விரோத்கன் ம:ட்டபோன் பொந்திலியெஸ்; ஜுகு மோஸ்கன் தூஷன வத்தொ கெரெஸ்தெ மீஸ் அய்கெஸ்.
“சீரியா தேஸு ரஜொ அபுல் மொன்னுக் ஒப்பயெதானுக் அஸ்கி கெரய். தெனொ அபுலுக் அஸ்கி தெய்வுன் ஸொம்மர் ம:ட்டதெனொ மெனி மெல்லய். உன்னத தேவுக் விரோத்கன் தூஷன வத்தான் கெரய். தேவ் தெகொ தண்டன தேஞ்ஜாரிய தின்னு அவஸ்த லெங்கு தெனொ இஸனி வத்தொ கெரய். காமெனெதி தேவுகெ தீர்மான்தானுக் அஸ்கி சலய்.
ஆஹா! மொர் ஸக்திஹால்கின், பலம்ஹால் எல்லெ ராஜ்யம் பெளி ஸ்ரேஷ்டுகன் ஸே. மொர் நாவுக் கெனம்கின், கீர்த்தி அப்பஸ்ததானுக் மீ பந்தெ மஹா பாபிலோன் எல்லேஸ் மெனி ம:ட்டபோன்கன் ஸங்கிலியெஸ்.
இஸனி ஜுகு விவர்னுக் ஸங்கிதி, “துஷ்டுடுகன் ஜிவரிய எல்லெ ஸந்ததிக் அப்பரிய தண்டன தும்கொ மெளி அப்புனாஸ்தானுக் துமி தும்கொ கபட்ளுவொ’’ மெனி புத்தி ஸங்கெஸ். (உபா 32:5; ஸங் 78:8)
தெல்லெ பட்ணமும் சீமோன் மெனி ஒண்டெதெனொ ஹொதெஸ். தெனொ மந்துர் கெரி சமாரியர்னுக் ஹொங்கடி அபுலுக் ஒண்டெ ம:ட்ட மெனிக்ஸோன் தெக்கட்லியெஸ்.
ஹுஜாளுக் பாத்யம் ஹொயெ மென்க்யான்ஸோன் கண்ணியம்கன் ஜிவ்னொ. போத பனி பேஸ்த, நச்சஸ்த, பொட்ஜாள், ஜெடொ, காமவிகார், வேசித்தனம் இஸான் நஜ்ஜெ ஸுபாவுனுக் தொ³ப்பிதி,
பகவான்கெ நாவ்ஹால் மீ தும்கொ பீர் பீர் ஸங்கரியொ: அஞ்ஞானின் கெரரிய அர்து நீ:ஸ்த க்ரியானுக் துமி கெரஹோனா.
தெனொ தேவுக் விரோத்கன் க்ரியொ கெரய். தேவ்கன் ஹவ்டினி பொடெஸ்தெ காய்கீ, ஆராதன கெரராஸ்தெ காய்கீ, தெக ஸொம்மர் அபுலுக் மேட் கெல்லய். தேவுகெ த⁴வ்ராம் பிஸிலி அபுலுக் தேவ் மெனி மெல்லய். (தானி 11:36; எசே 28:2)
துமி புலோகுர் ஸுகபோகம்கன் ஜிவி ஸொகுஸுகன் ஹொத்யாஸ். செக்கினி பொடஞ்ஜாரிய பெண்டுனுக் த³ள்க கெரடரியஸோன் துமி தும்கொ த³ள்க கெல்லியாஸ். துமி செக்கினி பொடஞ்ஜாரிய தின்னு மெளி அவ்டியொ.
து³ர் இச்சானும் பு³டி நாஸ் ஹொய்ரியெ எல்லெ புலோகுர் அமி தெய்வீக ஸுபா⁴வ் ஸேஸ்தெனுகன் ஜிவ்னொ மெனி தேவ் அம்கொ ஜுகு விஸேஷ வாக்குன் தீரியாஸ்.
எங்கொ தொளான் வேசி பெட்கினுக் வெக்கய். எனு கொப்பிம் பாப் கெர்லேத் ரா:ன். எனு சொட்டொ போதனானுக் விஸ்வாஸ் கெரஸ்தெங்கொ தந்துர்கன் தெ⁴ரி தொவ்லன். எங்கொ ஹன்னவ் ஆஸெ வேன் ரா:ய். தேவுகெ ஸாபன எங்கொ ஹொல்லெ அவய்.
தெங்கொ நஜ்ஜெ க்ரியானுக் ஜுகுதெனு ஸிக்குலன். தெங்கொலெந்தால் அம்ரெ ஸத்ய மார்கு தூஷன பொந்தய்.
அம்ரெ ரக்ஷகர்கின் பகவான் ஏசு கிறிஸ்துக் களைளி பாபுனும்ரீ: ஸொடுவி பொந்த்யாஸ்தெனு பீர் பாபுனும் ஸம்டி துஷ்டுடுகன் ஜிவெதி, தெங்கொ ஜிவ்னம் முல்லொ ஸொம்மர் ஜுகு மோஸ்கன் ரா:ய்.
அக்ரமம்கின் நஜ்ஜெ காமுன் கெரெ மென்க்யானுக் தெக்கி மொன்னு பாத பொடெ லோத்துக் தேவ் கபட்யாஸ்.
ப்ரேவ் பொரெஸ்தென்வோ, தும்கொ எல்லெஅஸ்கி முல்லோஸ் களாய். தேஹாலிம் துமி சொட்டொ போதகர்னுகெ அக்ரம க்ரியானும் ஸம்டி, தும்ரெ விஸ்வாஸுக் நாஸ் கெல்லுனாஸ்ததானுக் ஜாக்ரதகன் ர:வொ.
ஹுப்பரிய ஸெந்துரு லாடுன்கெ பே²வுஸோன் எனூஸ் எங்கொ அவ்மானுக் பராட் களடராஸ். எனு வாட் தடி ஜாரிய நக்ஷத்ருன். களஹந்தாரூஸ் எங்கொகுர்சி தொவ்னி பொட்ரியொ.
பல்சொ அங்குண்டெ மூகு பு⁴ஞிம்ரீ: அவெஸ்தெ மீ தெக்கெஸ். பெண்டுகெ ஸிங்க்³டொஸோன் தெக தீ³ ஸிங்க்³டான் ஹொதெஸ். ராக்ஷஸ ஸாப்ஸோன் வத்தொ கெரெஸ்.