9 காமெனெதி அம்ரெ பகவான் ஏசு கிறிஸ்துகெ கிருபொ கித்க மேட் மெனஸ்த தும்கொ களாய். தெனு தனவான்கன் ரீ:மெளி, துமி தனவான் ஹோஸ்தக் தெனு தும்ரெகுர்சி துர்பள் ஹொயாஸ். (பிலி 2:6-8)
சிகுர் ஸொடரிய ந:ன்ன ஜட்கிஸோன்கின், ஸுக்கெ பு⁴ஞிர் ஹொடரிய மூள்ஸோன் தெனு பகவான்கெ வத்தானுக் அய்கி ஹொட்யாஸ்; அமி ஹவ்டரிய ஸிங்கார்கின், ஸவுந்தர்யம் தெங்கொ நீ: அம்கொ ஒப்பயெ ரூப் மெளி தெங்கொ ஹொதெனி.
சீயோனு, மீ துரெஜோள் வேன் ப்ரேவ் தொவ்ரியஹால் மீ துரெகுர்சி ப்ரார்தன கெரு; எருசலேமூ, தூ ஸொடுவி பொந்தஸ்த லெங்கு மீ கோ³ஸ் ரா:னா. துரெ நீதி உடாவ் தி³வொஸோன்கின், துரெ ரக்ஷண் ஸுரிது ஹுஜாள்ஸோன் ப்ரகாஸிஞ்சய்.
ஹொயெதி மீ அஸ்கி மென்க்யானுக் நாஸ் கெர்னா மெனி பகவான் ஸங்கராஸ். ‘நஜ்ஜெ திராட்செ ஜ²ட்கினும் பொள்ளான் ரி:யெதி, தெல்லெ ஜ²ட்கிக் செக்குங்கன்; தெமாம் பொள்ளான் ஸே’ மெனி மென்க்யான் மெனன். திஸோஸ் மொகொ ஸேவொ கெரரிய ஸெவ்கன்னுக் ஹவ்டி மீ அஸ்கி இஸ்ரயேல்னுக் நாஸ் கெர்னா
ரி:யெத் மெளி அமி தெங்கொ அட்டம்கன் ரா:னாஸ்ததானுக் தூ ஸெந்துருக் ஜீ, ஸிட்³வொ தகி முல்லொகன் அப்பரிய ம:ளிகெ தோணுக் ஹுடி ஸா. ஒண்டெ ருப்பா காஸ் ரா:ய். தெல்லெ கள்ளி ஜீ, மொகொகின் தொகொ செர்சி த⁴வ்ரா வரி பந்தி" மெனி ஸங்க்யாஸ்.
மெனிகு பெடொ காம் க²டஸ்தக் அவ்யானி; காம் கெரஸ்தக் அவ்யாஸ். ஜுகு மென்க்யானுக் ரக்ஷண் கெரஸ்ததானுக்கின், அபுல் ஜீவுக் க்ரயம்கன் தேஸ்தக் தெனு அவ்யாஸ்” மெனி ஸங்க்யாஸ்.
ஏசு தெகொஜோள், “கொ²லானுக் க²ணிகின், அகாஸு பக்ஷினுக் கூ⁴ட் ஸே. மெனிகு பெடாக் தொஸ்கொ தொவஸ்தக் மெளி தாம் நீ:" மெனி ஸங்க்யாஸ்.
எனொ ஹொடய்து நா:கீ? மரியாள்கெ பெடொ நா:கீ? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் எங்கொ பை⁴ன் நா:கீ? எகொ பெ⁴ய்னான் மெளி ஏட் அம்ரெ கா³மும் ஸேனா?’ மெனி மென்யாஸ். இஸனி ஏசுக் ஸாதாரண மெனிகுகன் தெனு ஹவ்டெஹால் தெனு ஏசுக் கெனம் தியானி.
அநீதிகன் அப்பெ புலோகு ஆஸ்தினும் துமி நீதிகன் ரா:னா ஜியெதி, கோன் தும்கொ நொம்மி மோல் வேன் ஹொயெ நிஜ்ஜம் ஆஸ்தினுக் ஒப்பிஞ்சி தேன்.
தேட் தெனொ அபுல் பெ²ய்லட் பெடாக் ஜெனிஸ். ஸெத்ரமும் தாம் நீ:னாஸ்தஹால் நு:ருக் பொட்டாம் குவ்ணி, கா³யுன் சொரொ காரிய நீபும் நிஞ்ஜடிஸ்.
ஏரோதுகெ கார்யதரிஸி கூசாகெ பெய்ல் யோவன்னாள்கின், சூசன்னாள்கின், அங்குன் ஜுகு அம்மான் ஏசுக் சீஷிகன் ஹொத்யாஸ். எனு அஸ்கின் அபுல் ஆஸ்தின்ஹால் ஏசுக்கின் தெங்கொ சிஷ்யானுக் ஸேவொ கெர்யாஸ். (மத் 27:55,56; மாற்கு 15:40,41; லூக் 23:49)
ஏசு தெகொ ஸீ, “கொ²லானுக் க²ணிகின், அகாஸு பக்ஷினுக் கூ⁴ட் ஸே. மெனிகு பெடாக் தொஸ்கொ தொவஸ்தக் மெளி தாம் நீ:’’ மெனி ஸங்க்யாஸ்.
ஹுஜாள்கன் ப்ரகாஸிஞ்சரிய தெனு எல்லெ புலோகுக் அவ்யாஸ்; தெங்கொ வாட்கன் தேவ் எல்லெ புலோகுக் உரு கெர்யாஸ். புலோகு மென்க்யான்கீ தெங்கொ களைளியானி.
வத்தொ மெனிகுகன் உரு ஹொயி அம்ரெ ம:ஜார் ஜிவ்யாஸ்; பரலோகு பா³புகெ ஒண்டே பெடாக் பாத்யம் ஹொயெ மஹிமெக் அமி தெக்யாஸ். தேவுகெ கிருபொகின், ஸத்யம் தெங்கொஜோள் பரிபூர்ணுகன் ஹொதெஸ்.
கோனக்மெனெதி, நியாய ப்ரமாண் மோசே வாட்கன் தெனி பொடெஸ்; கிருபொகின் ஸத்யம் ஏசு கிறிஸ்து வாட்கன் அவ்ரியொ.
ஏசு தெங்கொ ஸீ, “எல்லெ ஸெத்து³ மொகொகுர்சி நா: தும்ரெகுர்சீஸ்.
பா³புக் பாத்யம் ஹொயெ அஸ்கி மொகொ பாத்யம். தேஹாலிமூஸ் ‘பரிஸுத்த ஆவி ஹொயாஸ்தெனு மீ ஸங்கெ போதனானுக் தும்கொ இவர்கன் ஸங்கன்’ மெனி மீ மெனெஸ்.
ஸத்ய வத்தானுக் அய்கி தெனு தும்கொ பரிபூர்ணுகன் பாத்யம் ஹோஸ்ததானுக் தெங்கொகுர்சி மீ மொகோஸ் பரிபூர்ணுகன் ஒப்பிஞ்சி தேரியொ.
இஸ்ரயேல்னு பாப் கெரெஹால் புலோகுக் லெ:க்க நீ:ஸ்த ஆஸீர்வாத் அப்பெஸ். யூதர்னு தேவுக் ஸெர்ககன் களைளுனாஸ்தஹால் யூத குலமும் உஜுனா மென்க்யானுக் தேவ் லெ:க்க நீ:ஸ்தக் ஆஸீர்வாத் கெர்யாஸ். யூதர்னு அஸ்கின் தேவுக் களைளி ரக்ஷண் பொந்தி ரி:யெதி, அங்குன் கித்ககி மேட் ஹொயெ ஆஸீர்வாத் தெங்கொ அப்பி³ ரா:ய்.
காமெனெதி, கிறிஸ்து அபுலுக் ஒப்பயெதானுக் ஜிவ்யானி. “தும்கொ தூஷன கெரெ மென்க்யானுகெ தூஷன வத்தான் மொர் தொஸ்கர் பொடெஸ். மெனி வேதும் லிக்கிரியதானுக் கிறிஸ்துகெ ஜிவ்னமும் சலெஸ். (ஸங் 69:9)
ஹொயெதி அமி பாபிகன் ர:தோஸ் கிறிஸ்து அம்ரெகுர்சி அபுல் ஜீவுக் தியாஸ். தேவ் அம்ரெஜோள் ப்ரேவ்கன் ஸே மெனஸ்தக் எல்லேஸ் ஸாக்ஷி.
அபுல் ஸொந்தம் பெடொ மெனி மெளி ஸானாஸ்தக் அம்கொ அஸ்கினாகுர்சி அபுல் பெடாக் ஒப்பிஞ்சி தியெ தேவ், அம்கொ பஜெ ஸேஸ்தெ துஸ்ரயெ அஸ்கி தேனா ஜேடன்கீ?
ஏசு கிறிஸ்து வாட்கன் தும்கொ தெனி பொடெ தேவுகெ மஹா ப்ரேவுக் ஹவ்டி மீ தேவுக் ஜுகு தந்யவாத் ஸங்கரியொ.
முல்லா மெனிக் ஆதாம், மத்திம்ரீ: உரு ஹொயெஸ். தெனொ மத்திக் பாத்யம். தி³வ ஆதாம் அகாஸும்ரீ: அவ்யாஸ். (யோவா 3:13,31)
பகவான் ஏசு கிறிஸ்துகெ கிருபொகின், தேவுகெ ப்ரேவ்கின், பரிஸுத்த ஆவிகெ ஐக்யம் தும்ரெ அஸ்கினா ஸெந்தொ ரா:ந்தக்!
அமி விசார் பொடெத் மெளி கொப்பிம் ஸொந்தோஷ்கன் ஸே. அமி துர்பள்கன் ரி:யெத் மெளி ஜுகுதெங்காக் தனவான் கெரடராஸ். அம்கொ கொன்னி நீ: மெனெத் மெளி அம்கொ அஸ்கி பாத்யம்.
கிறிஸ்து ஏசு வாட்கன் தேவுகெ மஹா ப்ரேவுக்கின், இவர் கெல்லன் முஸுனாஸ்த தெங்கொ கிருபொ பொரெ ஐஸ்வர்யமுக் அவஞ்ஜாரிய தின்னுநும் மெளி அஸ்கினாக் களடஸ்தக் இஸனி கெர்யாஸ்.
புத்திக் அந்தானா தெல்லெ ப்ரேவுக் களைளஸ்தக் தும்கொ ஞான் அப்புனொ மெனிகின், தேவ் பரிபூர்ணுகன் ஸேஸ்தெஸோன் துமி மெளி பரிபூர்ணுகன் ர:னொ மெனி மீ ப்ரார்தன கெரரியொ. (பிலி 4:19)
தேவுகெ மென்க்யானும் மீஸ் ஜுகு ந:ன்தெனொகன் ரி:யெத் மெளி கிறிஸ்துகெ லெ:க்க நீ:ஸ்த ஐஸ்வர்யமுக் நிகர்கன் ஸேஸ்தெ சொக்கட் ஸமசாருக் யூத குலமும் உஜுனா மென்க்யானுக் களடஸ்ததானுக்கின், தேவுகெ ரகசிய யோசன அத்தொ கோனக் பூர்தி ஹோரெஸ் மெனி இவர்கன் ஸங்கஸ்தக் எல்லெ கிருபொ மொகொ அப்பிரியொ.
அத்தொ மீ தும்ரெகுர்சி பாட் பொந்தஸ்தெமாம் ஸொந்தோஷ்கன் ஸே. கிறிஸ்து அபுல் ஸரீர் ஹொயெ தேவு ஸபாகுர்சி பாட் பொட்யாஸ். திஸோஸ் மீ மெளி தேவு ஸபாகுர்சி மொர் ஸரீரும் பாத பொந்தரியொ.
ஐஸ்வர்யவானுன் சொக்கட்யெ கெரஸ்தெமாம்கின், ஹேது கெரஸ்தெமாம் ம:ட்ட மொன்னுகன் ர:னொ. அபுல்ஜோள் ஸேஸ்தெயெ தரளம்கன் தேஸ்தெனுகன் ர:னொ மெனி தூ தெங்கொ புத்தி ஸங்கி.
அமி ஜிவரிய எல்லெ ஸெத்ல காலும் தேவ் அம்ரெஜோள் அபுல் பெடா வாட்கன் வத்தொ கெர்யாஸ். எனு அஸ்கிதெக பாத்யவான்கன் ரா:ஸ்தக் தேவ் எங்கொ ந்யமுன் கெர்யாஸ். தேவ் எங்கொ வாட்கன் புலோகுனுக் உரு கெர்யாஸ்.
மொர் ப்ரேவ் பொரெ பை⁴ பெ⁴ய்னானு, மீ ஸங்கஸ்த அய்குவொ. புலோகுர் துர்பள்னுக் தேவ் விஸ்வாஸும் ஐஸ்வர்யவான்கன் கெரி தொவ்ரியாஸ்னா? அபுல்ஜோள் ப்ரேவ்கன் ஸேஸ்தெங்கொ தொ³வுஸ் மெனி தேவ் வாக்கு தியெ ராஜ்யமுக் தெனு பாத்யம் கெல்லன்.
தூ பொந்தரிய பாத மொகொ களாய். தூ துர்பள் மெனி மொகொ களாய். ஹொயெதி தூஸ் ஐஸ்வர்யவான். அபுலுக் யூதர்னு மெனி மெல்லஸ்தெனு தொகொ தூஷன கெரராஸ்த மொகொ களாய். தெனு யூதர்னூஸ் நா: சாத்தான்கெ மென்க்யான்.
ஜெகிஞ்சஸ்தெனு மீ தேரிய அஸ்கி ஆஸீர்வாதுக் பாத்யம் கெல்லய். மீ தெங்கொ தேவ்கன் ர:வு. தெனு மொகொ நு:ருன்கன் ரா:ன்.
தூ ஐஸ்வர்யவான் ஹொனொ மெனெதி விஸ்தவும் தகி ஸுத்தி⁴ கெரெ ஸொந்நாக் மொர்ஜோள்ரீ: மோலுக் கள்ளெ. வஸ்தர் நீ:ஸ்தக் அவலக்ஷணம்கன் ஹிப்பிரிய தூ, மீ தேரிய ஹுஜாள் வஸ்தருக் பி²ல்லெ. துரெ தொளொ சொக்கட் தெக்காஸ்தக் தூ ஹொகத் ஸொட்லெ.