7 அமி கிறிஸ்துகெ அப்போஸ்தலர்னுகன் ஸேஸ்தெஹால் தும்ரெஜோள்ரீ: ஜுகுயெ கள்ளன் முஸய். ஹொயெதி அமி தும்ரெஜோள் ர:த, மாய் அபுல் நு:ருனுக் ஸீலரியஸோன் அமி தும்கொ ப்ரேவ்கன் ஸீலியாஸ்.
க³வ்ருன் பெண்டுனுக் சல்த கெரரியஸோன் தெனு அபுல் மென்க்யானுக் சல்த கெரன்; தெனு பெண்டு பில்லல்னுக் அபுல் ஹாதும் கள்ளன்; காந்துர் தய்லன்; கெ⁴ர்வார் பெண்டுனுக் நிதான்கன் சலடி பெல்லி ஜான். (எசே 34:15; யோவா 10:11)
ரஜான் தொகொ பா³ப்ஸோன் ஸீலன்; ரணின் தொகொ மாய்ஸோன் கம்சுலன்; தெனு அஸ்கின் தொகொ நமஸ் கெரன்; தெனு ப⁴ந்தைதுன்ஸோன் துரெஜோள் காம் கெரன்; தெனு தொகொ ஜுகு கெனம் தேன். தெப்பொ மீஸ் பகவான் மெனிகின், மொகொ நொம்மஸ்தெனொ அவ்மான் பொட்னான் மெனஸ்த தூ களைளய்.
மாய் அபுல் நு:ருக் ஆஸ்வாஸ் கெரரியஸோன் மீ தும்கொ ஆஸ்வாஸ் கெரு; துமி எருசலேமும் ஆஸ்வாஸ் பொந்தன்.
எல்லெ மென்க்யானுக் மீகீ உருகெரெஸ்? மீகீ எங்கொ ஜெனெஸ்? தூத் பேரிய பில்லல்னுக் ஹேமுர் தய்லரிய மாய்ஸோன் தூ எங்கொ பெல்லி ஜா மெனி ககொ மொர்ஜோள் ஸங்க்யாஸ்தெ? துமி தொ³வுஸ் மெனி வாக்கு தியெ தேஸுக் மீ கோனக் தெங்கொ சல்த கெரி பெல்லி ஜாஸ்தெ?
சளிஸ் ஒர்ஸு வளுராணும் அம்ரெ ஒள்ட்யான் கெரெ துஷ்ட க்ரியானுக் தேவ் ஸகிஞ்சிலியாஸ். (ஸங்க் 14:34; உபா 1:31)
மீ தும்ரெஜோள் ர:த, பலஹீன்கன் ஹொதெஸ். வேன் தக்கி ஒண்கிலி ஜிவெஸ். (அப் 18:9-11)
விஸ்வாஸ் உன்னொ ஸேஸ்தெங்கொ பகவான்ஜோள் பெல்லி அவஸ்தக் மீ மெளி தெங்கொஸோன் ஹொயெஸ். கோனதி தெவ்டதெங்காக்தீ ரக்ஷண் கெரஸ்தக் அஸ்கி மென்க்யானுக் ஹொயெதானுக் மீ ஜிவெஸ்.
பவுல் ஹொயெ மீ கிறிஸ்துகெ ஸாந்தமுக்கின், தயவுக் ஹவ்டி தும்ரெஜோள் ஒண்டெ மெல்லரியொ. தும்ரெ லெகுத்த மீ ரா:ஸ்தவேளு ப⁴வ்யம்கன்கின், தும்கொ ஸொட்டி துதூர் ரா:ஸ்தவேளு கண்டிப்கன் ஸே மெனி துமி ஸங்கராஸ்.
ஸிலுவாம் ஹன்னி பொடெவேளு கிறிஸ்து பலஹீன்கன் ஹொத்யாஸ் மெனஸ்த நிஜ்ஜமூஸ். ஹொயெதி தேவுகெ ஸக்திஹால் அத்தொ ஜீவ் ஸெந்தொ ஸே. திஸோஸ் தெங்கொ ஐக்யமும் ஜிவரிய அமி பலஹீன்கன் ரி:யெத் மெளி தேவுகெ பலம்ஹால் தும்கொ ஸேவொ கெரஸ்தக் மெனி அமி ஜீவ் ஸெங்கொ ரா:ன்.
ப்ரேவ் பொரெ நு:ருனு, கிறிஸ்துகெ ஸுபா⁴வ் தும்ராம் உரு ஹோஸ்த லெந்து, மீ ஜத்கெம் பாத பொந்தரிய மாய்ஸோன் மீ பீர் பாத பொந்தரியொ.
பா³ப் அபுல் பில்லல்னுக் ஆஸ்வாஸ் கெரரியஸோன் அமி தும்கொ ஆஸ்வாஸ் கெர்யாஸ். துமி ஸத்யமுக் ஸாக்ஷிகன் ர:னொ மெனி புத்தி ஸங்க்யாஸ். விஸ்வாஸும் தீ⁴ர்குகன் ர:னொ மெனி மெல்லியாஸ். எல்லெ அஸ்கி தும்கொ களாய்.
தேவ்ஜோள்ரீ: அவரிய ஞான்கீ பரிஸுத்தம்கன் ரா:ய். தெல்லேஸ் தெகா முக்ய ஸுபா⁴வ். தெல்லெ ஞான் ஸமதானுக் காரணகன் ரா:ய். ஒர்சிலி ரா:ய். ஸ்நேகம்கன் ரா:ய். தயவுகன் ரா:ய்; சொக்கட்யெ கெரய். ஸெர்ககன் நியாவ் ஸார்வொ கெரய். போலி வேஷம் தகுனா.