2 தும்ரெ ஸபா மென்க்யானுக் சொக்கட் கம்சி ஸீலுவொ. தேவுக் ஒப்பயெதானுக் சல்த கெல்லுவொ. ஆதாயமுகுர்சி தேவுக் ஸேவொ கெர்னாஸ்தக் மொன்னுஜந்த உற்சாவ்கன் ஸேவொ கெருவொ.
திஸொ ரீ:மெளி யோவாஸ் ரஜொ ஹொயி 23 (தி²நவீஸ்வ) ஒர்ஸு லெங்கு ப⁴ட்டர்னு த⁴வ்ராக் சொக்கட் கெரி ஹொத்யானி.
பெட்கினும் பெ⁴ளி வேன் ஸிங்காரு! தொகொ தெல்லெ தாம் களானா ஜியெதி, பெண்டுன்கெ பாய்ஞ் பகுல்னுக் ஸீ அவ்டெ. தேட் க³வ்ருன்கெ ர:வாஸு லெகுத்த துரெ பெண்டு பில்லல்னுக் கச்சல்னு ஜுகுயெ அப்பய்.
க³வ்ருன் பெண்டுனுக் சல்த கெரரியஸோன் தெனு அபுல் மென்க்யானுக் சல்த கெரன்; தெனு பெண்டு பில்லல்னுக் அபுல் ஹாதும் கள்ளன்; காந்துர் தய்லன்; கெ⁴ர்வார் பெண்டுனுக் நிதான்கன் சலடி பெல்லி ஜான். (எசே 34:15; யோவா 10:11)
பூ⁴க் திர்னாஸ்த ஸுநான்; கொப்பிம் த்ருப்தி பொந்துனாஸ்தெனு; தும்கொ ஞான் ருவ்வொ மெளி நீ: துமி அஸ்கின் தும்ரெ மொன்னுக் ஒப்பயெதானுக் ஜிவராஸ்; ஸுய லாபும் நிகொகன் ஸே.
தெப்பொ பகவான், “மீ கொங்கக் த⁴ட்டு? அம்ரெ காம் கெரஸ்தக் கோன் ஸே?” மெனி புஸரிய ஸெத்து³ மொகொ அய்கயெஸ். தெல்லெகொ மீ, “ஏலா, மீ ஸே; மொகொ த⁴ட்டுவொ” மெனி மெனெஸ்.
மோசே ஜிவெ தின்னுநும் சலெ ஸம்பவமுக் மென்க்யான் ஹவ்டி ஸியாஸ்; ஸெந்துரு வாட்கன் அவெவேளு அபுல்நுக் சல்த கெரெ அதிபதினுக்கின், மென்க்யானுக் கபடி பெல்லி அவெ பகவான் கோட் ஸே? தெங்கொ ம:ஜார் அபுல் பரிஸுத்த ஆவிக் தட்டியாஸ்தெனு கோட் ஸே?
துமி பகவான்கெ வத்தானுக் அய்குனாஸ்தக் ஹடவாதின்கன் சல்த கெல்லராஸ்தெ ஸீதி மொர் மொன்னு பாத பொடய்; மீ கொங்கினாக் களானாஸ்தக் ரொடு. ரொடி ரொடி தொளாம் பனி லுச்சாய்; காமெனெதி பகவான்கெ ஜெனுல்னுக் பராட் தேஸுக் ப⁴ந்தைதுன்கன் பெல்லி ஜேடன்.
எருசலேமூ! துரெ விரோதின் உத்தர் திக்கும்ரீ: அவராஸ்தெ ஸா; தூ யூதா தேஸுக் ராஜ்ஜலெஹால் ஜுகு ம:ட்டபோன் பொந்திலியெஸ்; அத்தொ தெனு ப⁴ந்தைதுன்கன் ஸே.
காமெனெதி ந:ன்னான் ரீ: ம:ட்டான் லெங்கு அஸ்கினாக் ஹன்னவு ஆஸெ வேன் ஸே; தீர்கதரிஸின்ரீ: ப⁴ட்டர்னு லெங்கு அஸ்கின் சொட்டான்கன் ஸே.
தேஹாலிம் தெங்கொ ஆஸ்தினுக் மீ துஸ்ரதெங்காக் தொ³வு; தெங்கொ பெய்லானுக் துஸ்ரதெனு தொவ்லன்; ந:ன்னான்ரீ: ம:ட்டான் லெங்கு அஸ்கினாக் ஹன்னவு ஆஸெ வேன் ஸே; தீர்கதரிஸின்ரீ: ப⁴ட்டர்னு லெங்கு அஸ்கின் சொட்டொ வத்தான் கெரராஸ்.
தெங்கொ அஸ்கினாக் ராஜ்ஜலஸ்தக் மீ மொர் ஸெவ்கன் தாவீதுஸோன் ஒண்டெ ரஜாக் ந்யமுன் கெரு; தெனோஸ் தெங்கொ பத்ரம்கன் ஸீலய். (தர்ஸன 7:17)
துமீஸ் மொர் பெண்டுன்; மீஸ் தும்கொ சல்த கெரரிய க³வ்ரு; மீஸ் தும்ரெ தேவ் மெனி மஹா ப்ரபு பகவான் மெனராஸ். (ஸங் 74:1; 100:3; யோவா 10:16)
தெனு மொர்ஜோள், ‘மென்க்யான் தேரிய பலினுக் த⁴வ்ராம் காம் கெரஸ்தெனு எல்லெ சுல்லானும் ஹந்தி கான்’ மெனி ஸங்க்யாஸ்.
தெல்லெ பட்ணமு அதிபதின் லஞ்ஜம் க²டராஸ். தீர்கதரிஸின் ஹன்னவ் கள்ளி தேவுகெ வத்தானுக் ஸங்கராஸ். ஹொயெதி தெனு, “அமி பகவானுக், நொம்மி ஜிவராஸ்; பகவான் அம்ரெ ம:ஜார் ஸே; தேஹாலிம் அம்கொ கொன்னி ஹீன் அவ்னா” மெனி ம:ட்டபோன்கன் மெல்லராஸ்.
தெப்பொ இஸ்ரயேல்கெ ரஜாக் பகவான் பலம் தேன். பகவான் அபுல் நாவ் கீர்த்தி பொந்தஸ்ததானுக் அபுல் மென்க்யானுக் சல்த கெரன். அஸ்கின் தாக் நீ:ஸ்தக் ஜிவன். புலோகுர் அஸ்கிதாம் தெங்கொ ராஜ்யம் ஜுகு ஸ்ரேஷ்டுகன் ரா:ய்.
பகவானு, கர்மேல் தொங்கரும் அலக்க³ ஜிவரிய தும்ரெ மென்க்யானுக் பெண்டுன்கெ க³வ்ருஸோன் ப்ரேவ்கன் சல்த கெருவொ. தும்கொ பாத்யம் ஹொயெ மென்க்யான் முல்லொ காலும் ஜிவெஸோனூஸ் பாசான் தேஸும்கின், கீலேயாத் தேஸும் ஸுபிக்ஷம்கன் ஜிவந்தக்.
பெண்டுனுக் ஸொட்டி தமரிய மொர் க³வ்ருக் ஐயோ! தெனொ நாஸ் ஹோய். தெகொ கா²ந்து ஹொல்லெகின், ஜெய்னா தொளர் கத்கொ அவி பொடந்தக். தெகொ ஹாத் அவ்னா ஜாந்தக். தெகொ ஜெய்னா தொளொ ஹந்தார் பொடந்தக்; தெனொ கு³ட்டெ ஹோந்தக்.
மொர் பலி பீடமும் கொன்னின் பலி தேனாஸ்ததானுக் மொர் த⁴வ்ராகெ கவாடுக் கோன்தி ஜ²கி தொவெதி கித்ககி சொக்கட்கன் ரா:ய்; தும்கொ ஹவ்டி மொர் மொன்னு ருவ்வொ மெளி ஸொந்தோஷ் பொடரெனி. துமி தேரிய தட்சணானுக் மீ கள்ளுனா மெனி ஸர்வ ஸக்தி பகவான் ஸங்கராஸ்.
ஹொயெதி தூகின், துரெ பெடான் மஹா பரிஸுத்த ஸ்தலமுக்கின், பலி பீடமுக் ஸம்பந்தம் ஹொயெ அஸ்கி காமுனுக் கெர்னொ. ப⁴ட்டர்கன் ஸேவொ கெரரிய பாக்யம் தும்கொ கெத்தீ³ஸ் மீ தீரியொ. தும்கொ ஜத துஸ்ர கோன்தி பரிஸுத்த ஸ்தலமுக் லெகுத்த அவெத் மெளி மொஜ்ஜன்.
“ந:ன்ன மூகொகன் ஸேஸ்தெ துமி தக்குங்கன்; காமெனெதி தும்ரெ பா³ப் அபுல் ராஜ்யமுக் தும்கொ தேஸ்தக் ப்ரேவ்கன் ஸே.
மீ ஜியெ பல்சொ சொட்டொ போதகர்னு உகான்ஸோன் தும்ரெஜோள் அவி ஸபா மென்க்யானுகெ விஸ்வாஸுக் நாஸ் கெரன் மெனி மொகொ களாய்.
தெல்லெகொ பவுல், “துமி ககொ ரொடி மொர் மொன்னுக் மெல்கடராஸ்தெ? பகவான் ஏசுகெ ஸமசாருக் ப்ரசார் கெரரியஹால் எருசலேமும் காராம் தொப்பினி பொடஸ்த கெத்தி³ நா: மொரஸ்தக் மெளி மீ தயார்கன் ஸே’’ மெனி ஸங்கெஸ்.
ரோம தேஸும் ஸேஸ்தெ தும்கொ மெளி தேவுகெ சொக்கட் ஸமசார் ஸங்கஸ்தக் மொர் மொன்னு ப்ரேவ் பொடரெஸ்.
கோன்தி அபுல் ஸொந்த வேஞ்சும் ராணுவமும் காம் கெரன்கீ? திராட்செ ஜட்கினுக் க⁴லஸ்தெனொ தெக பொள்ளானுக் கானா ரா:ய்கீ? கா³ய், பெண்டு சொவ்ரஸ்தெனொ தெக தூதுக் பேனா ரா:ய்கீ?
போத பனி பேஸ்தெ, ரகளெ கெரஸ்தெ, ஜெடொ மல்லஸ்த ரா:ஹோனா. ஹன்னவு ஆஸெ ரா:ஹோனா. ராக்³ பொட்னாஸ்தக் ஸாந்தம்கன் ர:னொ.
திஸோஸ் உபபோதகர் மெளி கண்ணியம்கன் சல்த கெல்லி, சொட்டொ வத்தொ கெர்னாஸ்தக், போத பனி பேனாஸ்தக், ஹன்னவு ஆஸெ நீஸ்தக் ர:னொ.
தெங்கொ தோணுக் அண்சுனொ. நியாவ் நீ:ஸ்த காமும் அப்பரிய உச்லாவ்குர்சி ஹோனாஸ்தயெ போதன கெரி குடும்பமுக் ஹுடொ க⁴லராஸ்.
ஸபா போதகர்னு தேவுக் ஸேவொ கெரரியஹால் அஸ்கினாஜோள் தெங்கொ சொக்கட் நாவ் ர:னொ. தெனு ம:ட்டபோன் நீ:ஸ்தக், ராக்³ பொட்னாஸ்தக், போத பனி பேனாஸ்தக், ஜெடொ மல்லுனாஸ்தக், ஹன்னவு ஆஸெ நீ:ஸ்தக் ர:னொ.
தெனு அம்ரெ அக்ரமமுக் க்ஷமொ கெரி அம்கொ பாத்யம் கெல்லியாஸ். அமி பரிஸுத்துடுகன் ஜிவி, சொக்கட்யெ கெர்னொ மெனி தெனு அபுல் ஜீவுக் அம்ரெகுர்சி பலிகன் தியாஸ். (யாத் 19:5; உபா 4:20; ஸங் 130:8; 1 பேதுரு 2:9)
ராஜ்ஜலரிய அதிபதினுக்கின், அதிகாரினுக் ஸபா மென்க்யான் அண்கி ர:னொ மெனி தூ புத்தி ஸங்கி. தெனு அஸ்கி விதமும் சொக்கட்யெ கெரஸ்தக் தயார்கன் ர:னொ.
ஹொயெதி துரெ ஸம்மத் நீ:ஸ்தக் மீ கொன்னி கெர்னா. மீ தொகொ நிர்பந்தம் கெரரியஹால் நா: தூ தெகொ மொன்னுஜந்த செர்சுல்னொ.
தேவுகெ கிருபொ தும்கொ ஸொட்டி ஜேட்னாஸ்ததானுக் ஜாக்ரதகன் ர:வொ. கொடு பொரெ விக்கு மூள் தும்ரெ மொன்னும் ஹொடி, அஸ்கினாக் ஹீன் கெர்னாஸ்ததானுக்கின், த்யெலெந்தால் ஜுகுதெனு நாஸ் ஹோனாஸ்ததானுக் ஸீலுவொ. (உபா 29:17)
தெனு வேன் ஹன்னவு ஆஸெ ஸேஸ்தெனு. தந்துர்கன் வத்தொ கெரி தும்ரெஜோள்ரீ: ஹன்னவ் உத்கன். தேவ் தெங்கொ தண்டன தேஸ்தக் ஜுகு ஒர்ஸு முல்லோஸ் தீர்மான் கெர்திகியாஸ். தேவ் தெங்கொ தண்டன தீ³ஸ் திரன்.