50 எந்நங்ங ஆகாசந்த எறங்ஙி பந்தா ஈ தீனித திம்மாவாங் ஏறாதங்ஙும் அவங் ஒரிக்கிலும் சயாங்.
சொர்க்கந்த கீளெ எறங்ஙி மனுஷனாயி ஹுட்டி பந்நாவாங் அல்லாதெ பேறெ ஒப்பனும் சொர்க்காக ஹத்தி ஹோயிபில்லெ.
அதுகொண்டு மங்ஙனமேலெ நம்பிக்கெ பீப்பாவங்ங நித்திய ஜீவித கிட்டுகு; தன்ன மங்ஙன நம்பாத்தாவங்ங நித்திய ஜீவித கிட்ட; ஆக்களமேலெ எந்தெந்தும் தெய்வாக அரிசமாத்தறே உட்டாக்கு” ஹளி ஹளிதாங்.
நன்ன வாக்கு கேட்டு, நன்ன ஹளாய்ச்சாவன நம்பாக்காக நித்திய ஜீவித கிட்டுகு; ஆக்க கீதா தெற்று குற்றாக ஞாயவிதி இல்லெ; அந்த்தலாக்க நேரத்தே சாவிந்த நித்தியஜீவிதாக கடது பந்துட்டுரு ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.
ஆகாசந்த எறங்ஙி பந்தட்டு ஈ லோகாளெ இப்பா மனுஷரிக ஜீவங் கொடாவனாப்புது தெய்வ தப்பா தீனி” ஹளி ஏசு ஹளிதாங்.
“இவங் யோசேப்பின மங்ஙனல்லோ? அவன அவ்வெயும் அப்பனும் நங்காக கொத்தில்லாத்தாக்க அல்லல்லோ? அந்த்தெ இப்பங்ங ‘நா ஆகாசந்த எறங்ஙி பந்நாவனாப்புது’ ஹளி ஹளுது எந்த்தெ?” ஹளி கூட்டகூடிண்டு இத்துரு.
நன்ன நம்பிதாவங்ங நித்திய ஜீவித கிட்டிகளிஞுத்து ஹளி நா நேராயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது.
ஆகாசந்த எறங்ஙி பந்தா ஜீவங் தப்பா தீனி நானாப்புது; ஆ தீனித திம்மாவாங் எந்தெந்தும் ஜீவுசுவாங்; நன்ன சரீர தென்னெயாப்புது லோகாளெ உள்ளாக்க ஜீவுசத்தெபேக்காயி கொடா தீனி” ஹளி ஹளிதாங்.
ஆகாசந்த எறங்ஙி பந்தா தீனி இதுதென்னெ ஆப்புது; இது நிங்கள கார்ணம்மாரு திந்தா மன்னாவின ஹாற உள்ளுதல்ல; அதன திந்தாக்க சத்தண்டுஹோதுரு, எந்நங்ங ஈ தீனித திம்பாக்க எந்தெந்தும் ஜீவுசுரு” ஹளி ஹளிதாங்.
நன்ன வாக்கு கேட்டு அனிசரிசாக்க ஒரிக்கிலும் சாயரு ஹளி, நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஏசு ஹளிதாங்.
அந்த்தெ இப்பங்ங, ஏறன ஜீவிதாளெ ஒக்க கிறிஸ்து இத்தீனெயோ, ஆக்கொக்க சொந்த இஷ்டத புட்டு, தெய்வத நீதியாளெ ஆல்ப்மாவின இஷ்டத கீவாக்களாயி இப்புரு.