Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




அப்போஸ்தலம்மாரு 11:30 - Moundadan Chetty

30 அந்த்தெ ஆக்க ஹணசேகரிசிட்டு, பர்னபாசு, பவுலு ஹளாக்கள கையிகொட்டு, எருசலேமாளெ இப்பா சபெ மூப்பம்மாராகையி ஏல்சிரு.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




அப்போஸ்தலம்மாரு 11:30
21 ပူးပေါင်းရင်းမြစ်များ  

ஆ காலதாளெ ஏரோதுராஜாவு சபெயாளெ உள்ளா செலாக்கள ஹிடுத்து, உபத்தருசத்தெ கூடிதாங்.


பர்னபாசும், சவுலும் ஆக்கள ஹளாய்ச்சா கெலசத தீத்தட்டு, எருசலேமிந்த மாற்கு ஹளா யோவானின கூட்டிண்டு அந்தியோக்கியா பட்டணாக திரிஞ்ஞு பந்துரு.


அதுமாத்தற அல்ல, பவுலும், பர்னபாசுங்கூடி, ஒந்நொந்து சபெயாளெயும், ஆக்காக மூப்பம்மாரா நேமிசி, நோம்பு இத்து பிரார்த்தனெ கீதட்டு, ஈக்க நம்பிக்கெ பீத்திப்பா எஜமானனாயிப்பா ஏசினகையி மூப்பம்மாரா ஏல்சிரு.


அதுகொண்டு ஆக்காகும், பவுலு பர்னபாசு ஹளாக்காகும், பயங்கர வாக்குவாத உட்டாத்து; எந்தட்டு பவுலும், பர்னபாசும் ஆக்களகூடெ செல ஆள்க்காருங்கூடி, எருசலேமாளெ உள்ளா மூப்பம்மாரப்படெயும், அப்போஸ்தலம்மாரப்படெயும் ஹோயி ஈ காரெபற்றி கூட்டகூடுக்கு ஹளி, சபெயாளெ தீருமானிசிரு.


எந்தட்டு ஆக்க, ஒந்து கத்து எளிதி, ஆக்களகையி கொட்டு ஹளாயிச்சுபுட்டுரு; ஆ கத்தினாளெ, “அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரும், நிங்கள கூட்டுக்காருமாயி இப்பா நங்க, அந்தியோக்கியாளெயும், சிரியாளெயும், சிசிலியாளெயும் இப்பா அன்னிய ஜாதிக்காறா எடெந்த ஏசின நம்பி பந்தா கூட்டுக்காறா வாழ்த்தி எளிவுது ஏன ஹளிங்ங,


அதுகளிஞட்டு ஆக்க, எருசலேமாளெ எத்ததாப்பங்ங, சபெக்காரும், அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரு எல்லாரும் ஈக்கள “பரிவா” ஹளி சல்காரகீதுரு; அம்மங்ங, தெய்வ ஈக்களகொண்டு கீதா எல்லா காரெபற்றியும் ஆக்களகூடெ அறிசிரு.


அம்மங்ங அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரும், ஈ காரெபற்றி ஆலோசத்தெ பந்துகூடிரு.


ஹிந்தெ, ஆக்க ஒந்நொந்து பட்டணாகும் ஹோப்பங்ங, அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரும், எருசலேமாளெ பீத்து தீருமானிசிதா காரியங்ஙளு ஒக்க அனிசருசுக்கு ஹளி, அல்லிப்பா சபெக்காறிக பிவறாயிற்றெ ஹளிபந்துரு.


பவுலு, மிலேத்திந்த எபேசிக ஆளா ஹளாயிச்சு, சபெயாளெ உள்ளா மூப்பம்மாரா பொப்பத்தெ ஹளிதாங்.


பிற்றேஜின பவுலு, யாக்கோபின காம்பத்தெபேக்காயி நங்கள கூட்டிண்டு அவன ஊரிக ஹோதாங்; எருசலேம் சபெயாளெ இப்பா மூப்பம்மாரு எல்லாரும் அல்லிக பந்தித்துரு.


லேவி கோத்தறக்காறனாயிப்பா ஜோசப்பு ஹளா ஒப்பாங் சைப்ரஸ் தீவிந்த பந்தித்தாங், அப்போஸ்தலம்மாரு அவங்ங, “பர்னபாசு” ஹளி, ஹெசறு ஹைக்கிரு; அதங்ங, “தைரெபடுசாவங்” ஹளி அர்த்த.


சபெயாளெ உள்ளா மூப்பம்மாரு நின்ன தெலேமேலெ கையிபீத்து பிரார்த்தனெ கீவதாப்பங்ங, தெய்வ ஹளிட்டு பரிசுத்த ஆல்ப்மாவு நின்ன ஒளெயெ தந்தா வரங்ஙளு உட்டல்லோ? ஆ வரங்ஙளா பற்றி நீ நிசாரமாயிற்றெ பிஜாருசாதெ.


சபெ காரெ ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தா மூப்பம்மாரா எருடு மடங்ஙு பெகுமானுசுக்கு; பிறித்தியேகிச்சு வஜன படிசி கொடுதனாளெயும், உபதேச கீவுதனாளெயும் ஒக்க கூடுதலு கஷ்டப்படா மூப்பம்மாரின ஒக்க எருடு மடங்ஙு பெகுமான கொட்டு நெடத்துக்கு.


சபெயாளெ மூப்பன பற்றி ஏரிங்ஙி ஒப்பாங் குற்ற ஹளித்துட்டிங்ஙி எருடு, மூறு ஆள்க்காறா சாட்ச்சி இல்லாதெ அவன குற்றக்காறங் ஹளி தீருமானிசத்தெ பாடில்லெ.


நா நின்னகூடெ நேரத்தெ ஹளிதா ஹாற தென்னெ கீது தீயாத்த காரெ ஒக்க தீப்பத்தெ பேக்காயிற்றும், ஒந்நொந்து பட்டணதாளெ உள்ளா சபெயாளெ ஒந்நொந்து மூப்பம்மாரா தெரெஞ்ஞெத்தி நிருத்துக்கு ஹளிட்டு ஆப்புது நா நின்ன கிரேத்தா தீவினாளெ புட்டட்டு பந்துது.


நிங்களாளெ ஏரிங்ஙி ஒப்பங்ங தெண்ண பந்நங்ங சபெ காரெ ஒக்க நோடி நெடத்தா மூப்பம்மாரா ஊதுபரிசிட்டு, ஏசுக்கிறிஸ்தின சக்திதபற்றி ஹளி, எண்ணெ தேத்து பிரார்த்தனெ கீயிவா.


நா ஒந்து மூப்பன ஸ்தானதாளெ இத்தண்டு, மூப்பம்மாராயிப்பா நிங்காக புத்தி ஹளிதப்புது ஏன ஹளிங்ங; கிறிஸ்தின கஷ்டப்பாடு ஒக்க நா, நேருட்டு கண்டாவனாப்புது; கிறிஸ்து திரிச்சு பொப்பதாப்பங்ங கொண்டுபொப்பா சம்மானதாளெ நங்க எல்லாரிகும் பங்கு உட்டு.


தெய்வ தெரெஞ்ஞெத்திதா தன்ன மக்கள, பட்டெ நெடத்தா சினேக உள்ளா நன்ன அவ்வெ ஹாற இப்பா நினங்ஙும், தெய்வ நினங்ங தந்தா நின்ன மக்கள ஹாற உள்ளாக்காகும் நா ஈ கத்தாளெ எளிவுது ஏன ஹளிங்ங; நா நின்னமேலெ நேராயிற்றெ சினேக பீத்துஹடதெ; நா மாத்தறல்ல, தெய்வசத்தியத அருதிப்பா எல்லாரும் நின்னமேலெ சினேக பீத்துதீரெ; ஆ தெய்வ சினேக உள்ளுதுகொண்டாப்புது இந்த்தெ நேராயிற்றெ சினேகிசத்தெ பற்றுது. தெய்வத சத்திய, நங்கள சினேக இதொக்க ஏகோத்தும் உட்டாட்டெ.


மூப்பனாயிப்பா நா, நேராயிற்றெ சினேக பீத்திப்பா காயுவே! நா நினங்ங கத்து எளிவுது ஏன ஹளிங்ங,


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ