எபேசியர் 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அப்படியே, நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு மீட்பைக் கொடுக்கின்ற நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்தபோது, வாக்குறுதி அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே அவரில் முத்திரை அடையாளம் இடப்பட்டீர்கள். Gade chapit laஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். Gade chapit laபரிசுத்த பைபிள்13 இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். Gade chapit la |