பிலிப்பியர் 1:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது. Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது. Gade chapit laபரிசுத்த பைபிள்22 இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. Gade chapit laஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஆனாலும், இந்த உடலில் நான் தொடர்ந்து உயிர் வாழ்ந்து வந்தால் பலன் தரும் பணி செய்ய முடியும். ஆகவே நான் எதைத் தெரிவு செய்வது என்று எனக்கே தெரியவில்லை. Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். Gade chapit la |