32 கூட்டதாளெ கொழப்ப கூடிண்டித்து; செலாக்க அந்த்தெ ஆப்புது ஹளியும், செலாக்க இந்த்தெ ஆப்புது ஹளியும் ஆர்த்து கூக்கிண்டித்துரு; ஆக்க ஏனாக ஆப்புது கூடிபந்துது ஹளி கொறே ஆள்க்காறிக கொத்தில்லாயித்து.
அம்மங்ங ஜனங்ஙளு அந்த்தெயும், இந்த்தெயும் ஹளி பயங்கர ஒச்சேககூடிரு; அந்த்தெ ஒச்செயும், பெகளும் கூடுதலாயிண்டித்து, ஏனாப்புது இல்லி நெடிவுது ஹளி பட்டாளத்தலவங் அறியாத்துதுகொண்டு அவன கோட்டெத ஒளெயெ கொண்டுஹோப்பத்தெ ஹளிதாங்.
இந்து நெடதா கலகதபற்றி, நங்களமேலெ குற்ற பொப்பத்தெ எடெ உட்டு; ஏனாக ஹளிங்ங, இது காரெ இல்லாதெ கூடிதா கூட்ட ஆப்புது; ரோமன் அதிகாரிமாரு இதனபற்றி நங்களகூடெ கேள்வி கேட்டங்ங ஏன உத்தர ஹளத்தாக்கு? ஒந்து காரணம் ஹளத்தில்லெ” ஹளி ஹளிட்டு, ஜனங்ஙளு எல்லாரினும் ஹளாயிச்சுபுட்டாங்.
அந்த்தெ, ஆ பட்டண முழுக்க கலக உட்டாத்து; ஆக்க ஒந்தாயி கூடிபந்தட்டு, பவுலினகூடெ சங்கத்தெ பந்தித்தா மக்கதோனிகாறாயிப்பா காயு, அரிஸ்தர்க்கு ஹளாக்கள ஹிடுத்தட்டு, தொட்ட மண்டாகத ஒளெயேக எளத்தண்டு ஹோதுரு.
ஆசியா நாடினாளெ அதிகாரிமாராயி இத்தா, பவுலின கூட்டுக்காரு செலாக்களும், பவுலப்படெ ஆளா ஹளாயிச்சட்டு, “ஜாகர்தெயாயிற்றெ இருக்கு, தொட்ட மண்டாகத ஒளெயெ ஹோவாட” ஹளி ஹளிரு.