பிலிப்பியரு 3:9 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா9 கிறிஸ்துன நன்னு லாபவாங்க மடகிகோம்புக்குவு, அவுருகூட ஐக்கியவாங்க இருவுக்குவுத்தா நானு ஈங்கே நெனசுத்தினி. யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுனால நானு தேவரோட பார்வெல நேர்மெயாதோனாங்க ஆவுக்கு முடுஞ்சுனார்து. ஆதர கிறிஸ்து மேல மடகுவுது நம்பிக்கெனாலத்தா நானு அவுரோட பார்வெல நேர்மெயாதோனாங்க ஆவுக்கு முடுஞ்சுத்தாத. ஈங்கே அவுரு மேல மடகுவுது நம்பிக்கெ மூலியவாங்க தேவரு கொடுவுது அவுரோட நேர்மென ஈசிகோண்டதுனாலத்தா நானு அவுரோட பார்வெல நேர்மெயாதோனாங்க இத்தவனி. Faic an caibideil |
யூதமத சட்டதுனால பாவதோட அதிகாரதுல இத்து நமியெ விடுதலெ கொடுவுக்கு முடுஞ்சுலா. ஏக்கந்துர நம்மொழக இருவுது பாவமாடுவுது கொணதுனால நாமு தேவரோட சட்டா ஏளுவுதுன கேளி நெடைவுக்கு முடுஞ்சுலா. ஆதர தேவரோட சட்டதுனால மாடுவுக்கு முடுஞ்சுனார்துன தேவரு மாடிரு. நம்மு பாவகோளியாக பலியாவுக்காக தேவரு அவுரோட மகன்ன நம்மு மாதர மனுஷனாங்க கெளுசிரு. ஆங்கே தேவரு பாவதோட அதிகாரக்கு ஒந்து முடிவுன கொண்டுகோண்டு பந்துரு.
நாமு மாடியித்த ஒள்ளி காரியகோளியாக தேவரு நம்முன பாவகோளுல இத்து காப்பாத்துலா. ஆதர நம்முன தெளுகோம்புக்கு அவுரு முடுவுமாடிதுனாலைவு, நம்மு மேல கருணென தோர்சுவுக்கு அவுரு விரும்பிதுனாலைவு அவுரு நம்முன காப்பாத்தி நாமு தும்ப சுத்தவாத பதுக்குன பதுக்குவுக்கு நம்முன கூங்கி இத்தார. தேவரு நம்மு மேல மடகித கருணெனால அவுரு ஒலகான உண்டுமாடுவுக்கு முந்தாலயே நமியாக கிறிஸ்து யேசுன கெளுசுவுக்கு முடுவுமாடி இத்துரு.