பிலிப்பியரு 3:1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1 நன்னுகூட உட்டிதோரு மாதரயிருவோரே, கடெசியாங்க நானு நிம்மொத்ர ஏளுவுது ஏனந்துர: நீமு ஆண்டவருகூட ஐக்கியவாங்க இருவுதுனால சந்தோஷவாங்க இருரி. எழுதிதுனவே திருசிவு எழுதுவுது நனியெ ஒந்துவு கஷ்டா இல்லா. ஏக்கந்துர இதுகோளு தப்பாங்க ஏளிகொடுவோரொத்ர இத்து நிம்முன பாதுகாப்பாங்க மடகுவுது. Faic an caibideil |
கடெசியாங்க, கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நீமு சந்தோஷவாங்க இருரி. தேவரு விரும்புவுது மாதர நெடைவுதுல தேறிதோராங்க ஆவுக்கு முயற்சிமாடுரி. நானு ஏளிகொட்டுது மாதர நெடைவுக்கு கவனவாங்க இருரி. ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு பாய்ஜகள மாடுலாங்க ஒந்தே மனசு இருவோராங்க இருரி. ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு சமாதானவாங்க இருரி. ஆக அன்புனவு, நிம்மதினவு கொடுவுது தேவரு நிம்முகூட இருவுரு.
நன்னு கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நானு கடெசியாங்க நிமியே ஏளுவுது இதுத்தா: நெஜவாங்க இருவுது எதுவோ, ஒள்ளி மதுப்பு இருவுது எதுவோ, தேவரோட பார்வெல நேர்மெயாங்க இருவுது எதுவோ, பாவவில்லாங்க இருவுது எதுவோ, அன்பாங்க இருவுது எதுவோ, தேவரு விரும்புவுது ஒள்ளி கொணகோளு எதுவோ, தேவரியெ புகழுன கொண்டுகோண்டு பருவுது காரியகோளு எதுவோ அதுகோளுன பத்தியே நெனசிகோண்டே இருபேக்கு.
கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, கடெசியாங்க நாமு நிம்மொத்ர கேளிகோம்புது இதுத்தா. நீமு ஏங்கே பதுக்குபேக்கு அந்துவு, ஏங்கே தேவரியெ பிரியவாங்க நெடைவுது அந்துவு நம்மொத்ர இத்து கத்துகோண்டுரி. ஆங்கேயே நெடதுகோண்டுவு இத்தாரி. நீமு இன்னுவு அதிகவாங்க ஆங்கேயே நெடைரி அந்து ஆண்டவராத யேசு கொட்ட அதிகாரதுனால நிம்முன கெஞ்சிகேளுத்திரி.