Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 பேதுரு 1:8 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

8 நீமு அவுருன நோடிதே இல்லா. ஆதிரிவு அவுரு மேல அன்பாங்க இத்தாரி. ஈக நீமு அவுருன நோடுலாங்க இத்துரிவு நீமு அவுரு மேல நம்பிக்கெ மடகி ஏளுவுக்கே முடுஞ்சுனார்த அளவியெ சந்தோஷதுனால தும்ப சந்தோஷவாங்க இத்தாரி.

Faic an caibideil Dèan lethbhreac




1 பேதுரு 1:8
37 Iomraidhean Croise  

ஒந்தொப்பா நன்னுனபுட அவுனோட அப்பனொத்ரவோ, அவ்வெயொத்ரவோ தும்ப அன்பு மடகிரெ அவ நனியெ ஏத்தோனு இல்லா. ஒந்தொப்பா நன்னுனபுட அவுனோட மகனொத்ரவோ, மகளொத்ரவோ அன்பாங்க இத்துரெ அவ நனியெ ஏத்தோனு இல்லா.


நீமு நன்னு மேல அன்பாங்க இத்துரெ, நன்னு கட்டளெகோளுன கேளி அது ஏளுவுது மாதர நெடைரி.


நன்னு கட்டளெகோளுன ஏத்துகோண்டு அது மாதர நெடைவோனுத்தா நன்னு மேல அன்பாங்க இத்தான. நன்னு மேல அன்பாங்க இருவோனு மேல நன்னு அப்பாவாத தேவருவு அன்பாங்க இருவுரு. நானுவு அவுனு மேல அன்பாங்க இத்து அவுனியெ நன்னுன தோர்சுவே” அந்தேளிரு.


நன்னு மேல அன்பாங்க இருனார்தோனு நானு ஏளுவுதுன கேளி நெடைனார்ரா. நீமு கேளுவுது மாத்து நன்னோடது இல்லா. அது நன்னுன கெளுசித நன்னு அப்பாவாத தேவரோடது.


அதே மாதர நீமுவு ஈக மனசு கஷ்டான அனுபவுசுத்தாரி. ஆதிரிவு நானு திருசிவு நிம்முன நோடுவே. ஆக நீமு சந்தோஷபடுவுரி. ஒந்தொப்புனுவு நிம்மு சந்தோஷான நிம்மொத்ர இத்து எத்தி ஆக்குவுக்கு முடுஞ்சுனார்து.


அதுக்கு யேசு அவுனொத்ர, “தோமாவே, நிய்யி நன்னுன நோடிதுனால நம்புத்தாயி? நன்னுன நோடுலாங்கவே நம்புவோரு கொட்டுமடகிதோரு” அந்தேளிரு.


யேசு அவுருகோளொத்ர, “தேவரு நிமியெ அப்பாவாங்க இத்துரெ, நீமு நன்னொத்ர அன்பாங்க இருவுரி. ஏக்கந்துர நானு தேவரொத்ர இத்து பந்தவனி. நானாங்கவே பர்லா. அவுருத்தா நன்னுன கெளுசிரு.


அப்பறா அவ அவுருகோளுன அவுனோட மனெயொழக கூங்கிகோண்டு பந்து அவுருகோளியெ உண்ணுவுக்கு கூளு கொட்டா. அவ அவுனோட குடும்பதுல இருவுது எல்லாருகூடவு சேந்து தேவரு மேல நம்பிக்கெ மடகிதுனால தும்ப சந்தோஷபட்டா.


தேவரு நம்மு பதுக்குன ஆட்சிமாடுவாங்க நாமு எதுன உண்ணுத்திரி இல்லாந்துர எதுன குடித்திரி அம்புது முக்கியவில்லா. ஆதர மத்தோரொத்ர நேர்மெயாதோராங்கவு, சமாதானவாங்கவு, தும்ப சுத்தவாத ஆவியாதவரு கொடுவுது சந்தோஷதோடைவு பதுக்குவுதுத்தா முக்கியவாதது.


நமியெ நம்பிக்கென கொடுவுது தேவரு நீமு அவுரு மேல நம்பிக்கெயாங்க இருவுதுனால நிமியெ சந்தோஷானவு, நிம்மதினவு கொடாட்டு. தும்ப சுத்தவாத ஆவியாதவரோட பெலதுனால நீமு தேவரு மேல மடகுவுது நம்பிக்கெ இன்னுவு தும்ப தொட்டுதாங்காவுது.


ஆண்டவராத யேசு கிறிஸ்துவொத்ர அன்பாங்க இருனார்தோனியெ சாபா பராட்டு. நம்மு ஆண்டவரு பத்தார.


நாமு அவுரோடவரு அந்து தோர்சுவுக்கு அடெயாளவாங்க அவுரு தும்ப சுத்தவாத ஆவியாதவருன நம்மு மனசொழக கொட்டுயித்தார. தேவரு நமியெ கொட்டுயிருவுது வாக்குகோளு எல்லாத்துனவு அவுரு நெறெவேறுசுவுரு அந்து உறுதிபடுசுத்தார.


அல்லி அவ அவுனோட மைய்யிகூட ஓதுனோ இல்லாந்துர மைய்யின புட்டுகோட்டு ஓதுனோ நனியெ தெளினார்து. தேவரியெ மட்டுத்தா தெளிவுது.


ஈ ஒலகதுல நாமு நோடுவுது இதுகோளு எல்லாவு கொஞ்ச காலக்குத்தா இருவுது. அதுனால நாமு அதுகோளு மேல நம்மு மனசுன மடகுவுதுயில்லா. இல்லி நம்மு கண்ணியெ தெளிலாங்க இருவுது மேலத்தா நாமு நம்மு மனசுன மடகுத்திரி. ஏக்கந்துர அதுகோளுத்தா ஏவாங்குவு நெலச்சுயித்தாத.


அதுனால நாமு நம்மு கண்ணுகோளுல அவுருன நோடுவுதுனால ஈ ஒலகதுல பதுக்குலாங்க அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெனாலத்தா பதுக்குத்திரி.


தேவரு நமியெ கொட்ட கிப்டுன பத்தி ஏளுவுக்கு மாத்தேயில்லா. அதுக்காக நாமு அவுரியெ நன்றி ஏளுவாரி.


ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரு நெடசுவுது மாதர மாடுவோரு மாடுவுது ஏனந்துர: மத்தோரொத்ர அன்பாங்க இருவுது, சந்தோஷவாங்க இருவுது, நிம்மதியாங்க இருவுது, தும்ப பொறுமெயாங்க இருவுது, எரக்கவாங்க இருவுது, மத்தோரியெ ஒள்ளிது மாடுவுது, மத்தோரோட நம்பிக்கெயெ ஏத்தோராங்க இருவுது,


நாமு கிறிஸ்து யேசு மேல நம்பிக்கெ மடகியிருவோராங்க இத்துரெ நாமு சுன்னத்து மாடி இத்துரியோ மாடுலாங்க இத்துரியோ ஏ பிரியோஜனவு இல்லா. ஆதர கிறிஸ்து யேசு மேல நம்பிக்கெ மடகுவுதுவு, மத்தோரு மேல அன்பாங்க இருவுதுவு மட்டுத்தா முக்கியா.


ஒந்தொப்புருனாலைவு முழுசாங்க புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த அவுரோட அன்புன நீமு தெளுகோம்புக்குவு, அவுரொத்ர இருவுது கொணகோளு எல்லாவு ஏ கொறெயுவு இல்லாங்க நிம்மொத்ரவு இருவுக்குவு அவுரொத்ர வேண்டுத்தினி.


நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மேல அன்பு மடகியிருவுதுன புட்டுபுடுலாங்க ஏவாங்குவு அவுரு மேல அன்பாங்க இருவோரியெ தேவரு அவுரோட கருணென தோர்சுவுக்குவு அவுரொத்ர வேண்டுத்தினி. ஆமென்.


நானு நிம்முகூட இருவுதுனால நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்காயி சந்தோஷவாங்க இருவுரி. அதுனால நிம்மு எல்லாருகூடவு தங்கி இருவே அந்து உறுதியாங்க நம்புத்தினி.


ஏக்கந்துர ஈங்கே மைய்யில மாடுவுது சுன்னத்து மாதர காரியகோளுல நம்பிக்கெ மடகுலாங்க தேவரோட ஆவியாதவரு ஒதவினால அவுருன கும்புட்டு நம்முன தேவரோட ஜனகோளாங்க மாடித கிறிஸ்து யேசுன புகழ்ந்து ஏளுவுது நாமுத்தா நெஜவாங்கவே சுன்னத்து மாடிதோரு.


நீமு ஆண்டவருகூட ஐக்கியவாங்க இருவுதுனால ஏவாங்குவு சந்தோஷவாங்க இருரி. நீமு சந்தோஷவாங்க இருரி அந்து திருசிவு ஏளுத்தினி.


நம்பிக்கெ அம்புது, நாமு எதுருநோடிகோண்டு இருவுது நெடைவுது அந்து உறுதியாங்க இருவுதுவு, நம்முனால நோடுவுக்கு முடுஞ்சுனார்துன பத்தி ஏ சந்தேகவு இல்லாங்க நிச்சியவாங்க இருவுதுவுத்தா.


நம்பிக்கெனாலத்தா அவ நோடுவுக்கு முடுஞ்சுனார்த தேவருன நோடுவுது மாதர உறுதியாங்க இத்துகோட்டு, ராஜாவோட கோப்பக்கு அஞ்சுலாங்க எகிப்துனபுட்டு பொறபட்டு ஓதா.


ஈக நீமு கொஞ்ச காலக்கு தும்ப வித சோதனெகோளுனால கஷ்டபடு பேக்காங்க இத்துரிவு ஆ உரிமெ சொத்துன நெனசி சந்தோஷவாங்க இத்தாரி.


அதுனால அவுரு மேல நம்பிக்கெ மடகியிருவுது நிமியெ ஆ கல்லு தும்ப பெலெ இருவுது கல்லாங்க இத்தாத. ஆதர அவுரு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெ அது தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதித மாதர “மனெ கட்டுவோரு பேடா அந்தேளி ஒதுக்கித கல்லுத்தா மூலெகல்லாங்க ஆத்து. ஈ கல்லு அவுருகோளுன தடுக்கி பிழுவுக்கு மாடுவுது கல்லாங்கவு, அவுருகோளுன பிழுவுக்கு மாடுவுது பாறெயாங்கவு ஆயோத்து.”


ஈங்கே மாடிரெ, தொட்டுதாங்க இருவுது மேசுவோனு வெளிபடுவாங்க நிமியெ பாடியோகுனார்த அற்புதவாத கிரீடான கொடுவுரு.


Lean sinn:

Sanasan


Sanasan