1 அதுகளிஞட்டு, நா ஹொசா சொர்க்காதும், ஹொசா பூமிதும் கண்டிங்; முந்தளத்த பூமியும், சொர்க்கம் காணாதெ ஹோத்து; கடலும் காணாதெ ஆயிண்டுஹோத்து.
எந்த்தெ ஹளிங்ங, தெய்வத மக்களாயிப்பா நங்காக ஆ பெகுமான உள்ளா ஜீவித கிட்டதாப்பங்ங, நங்காகும் நாசத ஹிடிந்த விடுதலெ கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயோடெ எல்லா சிருஷ்டியும் காத்தண்டு ஹடதெ.
எந்நங்ங ஏசுக்கிறிஸ்து ஆ ஜினாளெ ஒப்பங்ஙும் அறியாத்தஹாற கள்ளம்மாரா ஹாற ஆப்புது பொப்புது; அம்மங்ங ஆகாசங்ஙளொக்க பயங்கர எரெச்சலோடெ மாறி, ஒந்தும் இல்லாதெ ஆயிண்டுஹோக்கு; பூமியாளெ உள்ளுதும், ஆகாசாளெ உள்ளுதும் ஒக்க பெந்து உரிகிண்டுஹோக்கு; எந்நங்ங பூமியாளெ நெடதா காரெ எல்லதும் ஞாயவிதித முந்தாக பொக்கு.
அந்த்தெ தெய்வ ஹளிதா வாக்குபிரகார சத்தியநேரு உள்ளாக்க மாத்தற ஜீவுசா ஹொசா ஆகாசங்ஙளும், ஹொசா பூமியும் பொக்கு ஹளி காத்தண்டித்தீனு.
அம்மங்ங, கடலிந்த ஒந்து மிருக ஹத்தி பொப்புது கண்டிங்; அதங்ங ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் உட்டாயித்து; அதன கொம்பாளெ ஹத்து கிரீடம் உட்டாயித்து; ஒந்நொந்து தெலேமேலெயும், தெய்வத அவமானபடுசா ஹெசறும் உட்டாயித்து.
அதுகளிஞட்டு, ஒந்து தொட்ட பெள்ளெ சிம்மாசனதும், அதனமேலெ ஒப்பாங் குளுதிப்புதும் கண்டிங்; அவன முந்தாக சொர்க்கம், பூலோகும் இத்தா சலதென்னெ இல்லாதெ ஆயிண்டுஹோத்து.
அம்மங்ங, சிம்மாசனதாளெ குளுதிப்பாவாங், “இத்தோல! நா எல்லதனும் ஹொஸ்துதாயிற்றெ மாடத்தெ ஹோதீனெ!” ஹளி ஹளிதாங்; அதுமாத்தறல்ல, “ஈ வாக்கு சத்தியம், எதார்த்தும் உள்ளுதாப்புது ஹளி எளிதீக” ஹளி ஹளிதாங்.
ஒந்து சுருளுபுஸ்தகத சுருட்டா ஹாற ஆகாச சுருண்டண்டு ஹோத்து; மலெ தீவு ஒக்க அது இத்தா சலந்த மாறி ஹோயுடுத்து.