Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




தீத்து 1:16 - Moundadan Chetty

16 ஆக்க தெய்வ நம்பிக்கெ உள்ளாக்களாப்புது ஹளி ஹளியண்டீரெ; எந்நங்ங ஆக்கள ஜீவிதாளெ அதன காம்பத்தெ பற்றுதில்லெ; அந்த்தலாக்க அருவருப்பு ஆதாக்களும், அனிசரணெ கெட்டாக்களும், ஒள்ளெ காரெ ஒந்நனும் கீவத்தெ யோக்கிதெ இல்லாத்தாக்களும் ஆப்புது.

Faic an caibideil Dèan lethbhreac




தீத்து 1:16
27 Iomraidhean Croise  

தெய்வதபற்றி அறிவத்தெகும், அதன ஏற்றெத்தத்தெகும் ஆக்காக மனசில்லாத்துதுகொண்டு, ஆக்கள ஆசெபிரகார பேடாத்த காரெ கீயட்டெ ஹளி தெய்வ ஆக்கள புட்டுடுத்து.


இந்த்தலதொக்க கீதங்ஙும் தெற்றொந்து அல்ல, ஹளி நிங்கள ஒப்பனும் ஏமாத்தாதெ இருக்கிங்ஙி ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; இந்த்தல பேடாத்த காரெ ஒக்க கீதண்டு, தெய்வத வாக்கிக அனிசரெணெ இல்லாதெ நெடிவா ஆள்க்காறிக தெய்வ சிட்ச்செ கொடுகு.


ஈ நேமத தந்திப்புது சத்தியநேராயிற்றெ நெடிவா ஆள்க்காறிக அல்ல ஹளியும் நங்காக கொத்துட்டு; ஹிந்தெ இது ஏறங்ங பேக்காயி தெய்வ தந்திப்புது ஹளிங்ங, தெய்வ நேமத தெரிசாக்க, தெய்வத அதிகாரக கீளடங்ஙாத்தாக்க, தெய்வ பிஜார இல்லாத்தாக்க, தெற்று குற்ற கீவாக்க, அசுத்தம்மாரு, தெய்வபக்தி இல்லாத்தாக்க, அப்பனும் அவ்வெதும் கொல்லாக்க, கொலெகாரு,


ஒப்பாங் தன்ன சொந்தக்காறிகும், பிறித்தியேகிச்சு தன்ன ஊருகாறிகும், பேக்காத்த காரெ ஒந்நனும் நோடிகொடாத்தாவனாயி இத்தங்ங, அவங் தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாவனும், தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்கள காட்டிலும் மோசப்பட்டாவனும் ஆப்புது.


அந்த்தெ தெய்வாகபேக்காயி கெலச கீவாவங், ஈ வஜனங்கொண்டு ஒள்ளெ காரெ சகலதும் கீவத்தெ பூரணமாயிற்றெ தெகெஞ்ஞாவனும், கழிவுள்ளாவனும் ஆப்பத்தெ பற்றுகு.


நீ சபெக்காறிக ஓர்மெ படிசி ஹளிகொடத்துள்ளுது ஏன ஒக்க ஹளிங்ங; பாடதாளெ உள்ளா தலவம்மாரிகும், சர்க்காரு அதிகாரிமாரிகும் அனிசரிசி நெடிவத்தெகும், அடங்ஙி இப்பத்தெகும், சகல ஒள்ளெ காரெ கீயிவத்தெ ஒரிங்ஙி இப்பாக்களாயும் இருக்கு ஹளி ஹளு.


ஏனாக ஹளிங்ங, ஒந்துகாலதாளெ நங்களும் ஒந்தும் அறியாத்தாக்களாயி இத்தும்; அனிசரணெ கெட்டாக்களாயும், பட்டெ தெற்றி நெடிவாக்களாயும், பலவித ஆசெக அடிமெப்பட்டாக்களாயும், துருபுத்தி உள்ளாக்களாயும், ஹொட்டெகிச்சு உள்ளாக்களாயும், தம்மெலெ தம்மெலெ ஹகெ தீப்பாக்களாயும் ஜீவிசிண்டித்தும்.


எந்த்தெ ஹளிங்ங, ஒப்பாங் தெய்வதகூடெ ஒள்ளெ பெந்த உட்டு ஹளி ஹளிட்டும், தன்ன ஜீவிதாளெ தெய்வ நேமத கைக்கொண்டு நெடெயாதித்தங்ங, அவங் பொள்ளு ஹளி நெடிவாவனும், தெய்வ ஹளிதா சத்தியதபற்றி ஒந்தும் அறியாத்தாவனும் ஆப்புது.


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வ நங்களமேலெ கருணெ காட்டிப்பங்ங, நங்க பேசித்தர கீது எந்த்தெ ஒக்க நெடதங்ஙும், தெற்று ஒந்தும் இல்லெ ஹளியும், அதங்ஙொந்தும் தெய்வ சிட்ச்செ தார ஹளியும் படிசிகொட்டண்டு, ஏசின அங்ஙிகரிசாத்த கொறே கள்ளம்மாரு நிங்கள சபெயாளெ தந்தறபரமாயிற்றெ ஹுக்கிதீரெ; அதுகொண்டு, அதனபற்றி எளிவுது அத்தியாவிசெ ஆப்புது ஹளி நா கண்டிங்; அந்த்தலாக்க தெய்வதும், ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வ நங்காக கீதுதன பற்றியும் மனசிலுமாடாதெ, ஜனங்ஙளிக தெற்றாயிற்றெ உபதேச கீதண்டித்தீரெ; அந்த்தலாக்காக தெய்வ ஒள்ளெ சிட்ச்செ கொடுகு ஹளிட்டுள்ளுது நேரத்தே தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ.


எந்நங்ங, அசுத்தி உள்ளா ஒந்தும் அதன ஒளெயெ ஹோக; அதே ஹாற தென்னெ, பொள்ளு ஹளாக்களும், தெய்வாக அறப்புள்ளா காரெ கீவாக்களும், அதன ஒளெயெ ஹோப்பத்தெபற்ற; ஆடுமறியாயிப்பாவாங் பீத்திப்பா ஜீவபுஸ்தகதாளெ ஹெசறுள்ளாக்க மாத்தறே ஆ பட்டணத ஒளெயெ ஹோப்பத்தெ பற்றுகொள்ளு.


எந்நங்ங, தைரெ இல்லாத்தாக்க, தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்க, தெய்வாக அறப்புள்ளா காரெ கீவாக்க, கொலெகாரு, பேசித்தர கீவாக்க, மந்தறவாதிமாரு, பிம்மத கும்முடாக்க, பொள்ளு ஹளாக்க இந்த்தெ உள்ளா எல்லாரினும், எறடாமாத்த மரண ஹளா கிச்சும், கெந்தகும் கத்திண்டிப்பா கடலாளெ தள்ளுவிங்” ஹளி ஹளிதாங்.


Lean sinn:

Sanasan


Sanasan