Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




ரோமாக்காரு 14:13 - Moundadan Chetty

13 அதுகொண்டு இனி நங்க மற்றுள்ளா ஒப்புறினும் குற்றக்காரு ஹளி ஹளத்தெகோ, அல்லிங்ஙி ஏசின நம்பி ஜீவுசாவங்ங எடங்ஙாறாயி நில்லத்தெகோ, அல்லிங்ஙி ஒப்பன ஒந்து குற்றதாளெ குடுக்கத்தெகோ நா காரணக்காறனாயி நெடிவுதில்லெ ஹளி தீருமானிசியணிவா.

Faic an caibideil Dèan lethbhreac




ரோமாக்காரு 14:13
26 Iomraidhean Croise  

அதங்ங ஏசு அவனபக்க திரிஞட்டு, “நன்ன கண்ணா முந்தாக நில்லாதெ செயித்தானே! நீ நனங்ங தடசாக நில்லுது ஏக்க? நீ தெய்வகாரெபற்றி சிந்திசாதெ மனுஷன காரெபற்றியாப்புது சிந்திசுது” ஹளி ஹளிதாங்.


நன்னமேலெ உள்ளா நம்பிக்கெந்த அடுத்தாவன தெரிசாவங்ங கேடுகால தென்னெயாப்புது! ஒந்சமெ ஒப்பங்ங அந்த்தல பரீஷண பொக்காயிக்கு; எந்நங்ங, அதங்ங ஏற காரணக்காறனாயி இத்தீனெயோ அவங்ங கேடுகாலஆப்புது!


“நிங்க மற்றுள்ளாக்கள குற்றக்காறங் ஹளி ஹளாதிரிவா! அம்மங்ங தெய்வும் நிங்கள குற்றக்காறங் ஹளி ஹள; மனுஷரும் குற்றக்காறங் ஹளி ஹளரு.


ஞாயமாயிற்றுள்ளா காரெ இஞ்ஞேதாப்புது ஹளி தீருமானிசத்தெ நிங்காக புத்தி இல்லாத்துது ஏக்க?


நன்னமேலெ நம்பிக்கெ பீத்திப்பா, ஈ சிண்ட மக்கள ஹாற உள்ளாக்களாளெ ஏரிங்ஙி ஒப்பன தெற்று குற்ற கீவத்தெபேக்காயி, அவன பட்டெ தெரிசித்துட்டிங்ஙி, பட்டெ தெருசாவன களுத்திக தொட்ட ஆட்டுக்கல்லின கெட்டி கடலாளெ தள்ளிபுடுதாயிக்கு அவங்ங ஒள்ளேது.


அதுமாத்தறல்ல, தாவீதும் ஆக்களபற்றி, “ஆக்காக உள்ளுதனாளெ, ஒந்தாயிகூடி பிருநு சத்யெமாடி திம்புது ஆக்காக ஆபத்தாயி மாறட்டெ.


அதுகொண்டு, நின்ன ஹாற தென்னெ ஏசின நம்பி ஜீவுசவா இஞ்ஞொப்பன குற்றக்காறங் ஹளியும், நின்னகாட்டிலும் தாநாவாங் ஹளியும் நீ பிஜாருசுது ஏக்க? தெய்வ ஞாயவிதிப்பா ஜினாளெ நங்க எல்லாரும் தெய்வத முந்தாக நில்லத்தெ வேண்டி பொக்கல்லோ?


எந்நங்ங எல்லதனும் திம்பாக்க பச்செக்கறி மாத்தற திம்பாக்கள பற்றி தெற்றாயிற்றெ பிஜாருசத்தெ பாடில்லெ; பச்செக்கறி திம்பாக்க எறச்சிமீனு திம்பாக்கள குற்றக்காறாயிற்றும் பிஜாருசத்தெ பாடில்லெ. ஏனாக ஹளிங்ங தெய்வ எல்லதனும் அங்ஙிகரிசி ஹடதெயல்லோ!


அந்த்தெ தெய்வ ஒப்பன தனங்ஙபேக்காயி அங்ஙிகரிசதாப்பங்ங நீ அவன குற்றக்காறனாப்புது ஹளி ஹளத்தெ நினங்ங ஏன அதிகார? ஒப்பாங் குற்றகீதங்ங, அவன அங்ஙிகரிசத்தெகோ, அங்ஙிகரிசாதிப்பத்தெகோ தெய்வாக அதிகார உட்டல்லோ? அதுமாத்தறல்ல அவன ஒயித்துமாடத்தெகும் தெய்வாக பற்றுகல்லோ?


நன்ன கூட்டுக்காறே! நா நிங்களகூடெ ஒந்து காரெ கேளுது ஏன ஹளிங்ங, நிங்க படிச்சா கிறிஸ்தின உபதேசதாளெ ஒறச்சு நில்லிவா; ஆ காரெயாளெ முந்தாக கடெவத்தெ பற்றாத்த ஹாற நிங்கள எடேக எடங்ஙாரு உட்டுமாடாக்கள புட்டு மாறியுடிவா.


நிங்க கீவா காரெயாளெ யூதம்மாரிகோ, அன்னிய ஜாதிக்காறிகோ, சபெக்காறிகோ எடங்ஙாரு பருசாத்த ஹாற நோடியணிவா.


அதுகொண்டு ஹெண்ணாக தெலெ மூடாதெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவத்தெ பாடுட்டோ? அது செரி ஆயிக்கோ ஹளி நிங்களே சிந்திசிநோடிவா.


நா அந்த்தெ நெடிவத்துள்ளா காரண ஏசுக்கிறிஸ்தின சினேகங்கொண்டு தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, எல்லாரிக பேக்காயும் ஏசுக்கிறிஸ்து ஒப்பனே சத்துதுகொண்டு, நங்க அவங்ஙபேக்காயிற்றெ சத்தங்ஙும் சாரில்லெ ஹளி ஜீவுசுக்கு.


தெய்வ நங்காக ஏல்சிதா கெலசத ஒப்புரும் குற்ற ஹளாத்த ரீதியாளெயும், நங்களகொண்டு ஒப்புரும் தெய்வதபுட்டு பட்டெ தெற்றி ஹோகாத்த ஹாரும் ஜாகர்தெயாயிற்றெ கெலசகீதீனு.


அந்த்தெ கீதங்ங நிங்கள ஜீவிதாளெ ஏற்றும் ஒள்ளேதன தெரெஞ்ஞெத்திதாக்களாயி ஜீவுசத்தெ பற்றுகு; அம்மங்ங ஏசுக்கிறிஸ்து திரிச்சு பொப்பா ஜினாளெ ஒப்புரும் குற்ற ஹளாத்த ஹாற ஜீவுசுதன தெய்வ காங்கு.


அதுகொண்டு எள வைசுள்ளா விதவெ ஹெண்ணாக மொதெகளிச்சு மக்கள ஹெத்து குடும்ப காரெ நோடட்டெ; அதாப்புது நன்ன அபிப்பிராய; அம்மங்ங சத்துருக்களிக நங்களபற்றி ஒந்து தூஷணம் ஹளத்தெ எடெபார.


ஒள்ளெ மனசுள்ளாவாங் அந்த்தெ இச்சபட்ச்ச கீயாங்; ஆ ஒள்ளெ மனசு இல்லாத்துதுகொண்டல்லோ இந்த்தெ ஒக்க மனுஷரா தரபிரிச்சு நோடுது.


நன்ன கூட்டுக்காறே! தெய்வ நங்காக தன்ன நேமத தந்திப்புது ஏனாக ஹளிங்ங, ஆ நேமப்பிரகார நங்க ஜீவுசத்தெ ஆப்புது; ஆ நேமதகொண்டு மற்றுள்ளாக்க விதிப்பத்தெ அல்ல; அந்த்தெ நிங்க மற்றுள்ளாக்கள விதிச்சங்ங, ஆ நேமத காட்டிலும் நிங்களே தொட்டாக்க ஹளி ஆக்கு; எந்த்தெ ஹளிங்ங, ஆ நேமத தந்தா தெய்வாக மாத்தற ஒள்ளு ஒப்பன காப்பத்தெகும், கொல்லத்தெகும் அதிகார உள்ளுது; அதுகொண்டு, நிங்க தம்மெலெ, தம்மெலெ குற்றஹளிண்டு தெய்வத ஹாற இஞ்ஞொப்பன விதிப்பத்தெ நில்லுவாட; அந்த்தெஒக்க இப்பங்ங, மற்றுள்ளாவன குற்ற கண்டுஹிடிப்பத்தெ நீ ஏற?


எந்நங்ங மற்றுள்ளா எல்லாரினகூடெயும் சினேகமாயிற்றெ இப்பாவன ஜீவிதாளெ தெய்வத பொளிச்ச உட்டாக்கு; அதுகொண்டு அவங், இஞ்ஞொப்பாங் தெற்று குற்ற கீவத்தெ காரணக்காறனாயி இறங்.


எந்நங்ங, நின்னகையி செல கொறவுள்ளுதாயிற்றெ நா கண்டீனெ; பிலேயாமின உபதேசதாளெ நெடிவா செலாக்க நிங்கள எடநடுவு இத்தீரெ; ஆ பிலேயாமு ஹளாவாங், பாலாக்கு ஹளாவங்ங இஸ்ரேல்ஜன நசிப்பத்துள்ளா பட்டெத ஹளிகொட்டாவனாப்புது; அதுகொண்டு, ஆக்க பிம்மாக பூசெகளிச்சுதன திந்து பேசித்தர கீவத்தெகூடிரு.


Lean sinn:

Sanasan


Sanasan