Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




ரோமாக்காரு 12:7 - Moundadan Chetty

7 அதே ஹாற தென்னெ தெய்வ ஒப்பங்ங, மற்றுள்ளாக்கள சகாசத்துள்ளா வர கொட்டித்தங்ங, அவங் தெய்வதமேலெ பீத்திப்பா நம்பிக்கெபிரகார சகாசட்டெ; அதே ஹாற தென்னெ, மற்றுள்ளாக்காக புத்தி ஹளிகொடாவாங், தெய்வதமேலெ உள்ளா நம்பிக்கெபிரகார புத்தி ஹளிகொடட்டெ.

Faic an caibideil Dèan lethbhreac




ரோமாக்காரு 12:7
31 Iomraidhean Croise  

அதுகொண்டு நிங்க ஹோயி, சகல ஜாதிக்காறினும் நனங்ங சிஷ்யம்மாராயி மாடிட்டு, நன்ன அப்பன ஹெசறாளெயும், மங்ஙனாயிப்பா நன்ன ஹெசறாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவின ஹெசறாளெயும் ஸ்நானகர்ம கீதுகொட்டு,


அவங் ஒந்துஜின சந்தெக ஏசினப்படெ பந்தட்டு, “ரபீ! நீ தெய்வ ஹளாய்ச்சா குரு ஆப்புது ஹளி நங்காக கொத்துட்டு; எந்த்தெ ஹளிங்ங, தெய்வ நின்னகூடெ உள்ளுதுகொண்டாப்புது இந்த்தல அல்புதங்ஙளொக்க நின்னகொண்டு கீவத்தெ பற்றுது, அல்லிங்ஙி கீவத்தெபற்ற” ஹளி ஹளிதாங்.


அந்தியோக்கியாளெ உள்ளா சபெயாளெ பொளிச்சப்பாடிமாரும், உபதேசிமாரும் இத்துரு; ஆக்களாளெ பர்னபாசும், கருப்பாங் ஹளா சிமியோனும், சிரேனே பாடக்காறனாயிப்பா லூகியும், தேசத கால்பாக பரிச்சண்டித்தா ஏரோதினகூடெ இத்து, தொடுதாதா மனாயீனும், சவுலும் இத்துரு.


ஒள்ளேது ஒந்நனும், நா நிங்காக மறெச்சு பீத்துபில்லெ; பொது சலதாளெயும், ஊராந்தரும் பந்து, நா நிங்காக ஒள்ளெ காரெ ஹளிதந்நி.


அதுகொண்டு தெய்வ தன்ன சொந்த சோரெயாளெ நேடிதா தன்ன சபெத மேசத்தெ, மேல்நோட்டக்காறாயிற்றெ பரிசுத்த ஆல்ப்மாவு நிங்கள நிருத்திப்புது கொண்டு நிங்களும் ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; தன்ன ஆடின ஹாற இப்பா ஜனாதும் ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா.


ஆ காலதாளெ ஏசின நம்பா ஆள்க்காறா எண்ண கூடித்து; அம்மங்ங, ஏசின நம்பாக்களாளெ கிரீக்கு பாஷெ கூட்டகூடா விதவெகளு, அந்தந்து நங்காக பேக்காத்த தீனி காரெயாளெ நங்கள ஒயித்தாயி நோடி நெடத்துதில்லெ ஹளி, எபிரெய பாஷெ கூட்டகூடா ஆள்க்காறிக எதிராயிற்றெ கொணுத்தண்டு இத்துரு.


அதுகொண்டாப்புது தெய்வ, சபெயாளெயும், முந்தெ அப்போஸ்தலம்மாரினும், எறடாமாத்து பொளிச்சப்பாடிமாரினும், மூறாமாத்து உபதேசிமாரினும், அடுத்து, அல்புத கீவாக்கள, அடுத்து தெண்ணகாறா சுகமாடாக்கள, அடுத்து, மற்றுள்ளாக்கள சகாசாக்கள, அடுத்து மேல்நோட்டக்காறின, அடுத்து அன்னிய பாஷெ கூட்டகூடாக்கள இந்த்தெ பல வராதும் தெய்வ தந்து சபெயாளெ நங்கள நேமிசிப்புது.


அதே ஹாற தென்னெ, ஏசுக்கிறிஸ்து ஒப்பனே எங்கிலும், அவங் நங்காக தப்பா கெலச பலதும் உட்டு.


அந்த்தெ ஆதங்ங, நன்ன கூட்டுக்காறே! நிங்க கீவத்துள்ளுது ஏன ஹளிங்ங, நிங்க பாட்டு பாடிங்ஙும் செரி, உபதேச கீதங்ஙும் செரி, பொளிச்சப்பாடு ஹளிங்ஙும் செரி, அன்னிய பாஷெ கூட்டகூடிங்ஙும் செரி, அதன அர்த்த ஹளிகொட்டங்ஙும் செரி, ஏதுகாரெ கீதங்ஙும் செரி அதொக்க சபெயாளெ உள்ளாக்க தெய்வபக்தியாளெ வளரத்தெ பேக்காயிதென்னெ கீயிக்கு.


நிங்காக தெய்வகாரெபற்றி படிசிதப்பாக்காக, நிங்காகுள்ளா எல்லதனாளெயும் ஒந்து ஓகிரி கொட்டு சகாசிவா.


அதுமாத்தறல்ல, ஈக வளர்ந்நு பொப்பா தன்ன சரீரமாயிற்றெ இப்பா சபெக்காரு எல்லாரும் தெய்வத மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி ஒயித்தாயி மனசிலுமாடி, பரிசுத்த ஜீவிதாளெ ஒறப்புள்ளாக்களாயி, ஏசின நம்பா நம்பிக்கெ உள்ளா ஜீவிதாளெ எல்லாரும் ஒரிமெ உள்ளாக்களாயி வளர்ந்நு, ஏசின ஹாற தென்னெ கொறவில்லாத்தாக்களாயிற்றெ ஆப்பாவரெட்ட, நங்களாளெ செலாக்க முந்தெ ஏசுக்கிறிஸ்தினபற்றி அறியாத்த ஜனங்ஙளப்படெ ஹோயி, அப்போஸ்தல கெலசகீவத்தெகும், செலாக்க தெய்வ ஹளிதா காரெத பொளிச்சப்பாடாயிற்றெ ஹளா கெலசகீவத்தெகும், செலாக்க ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமான அருசா கெலசகீவத்தெகும், செலாக்க சபெயாளெ உள்ளா ஜனங்ஙளா நோடி நெடத்தா மேல்நோட்ட கெலசகீவத்தெகும், செலாக்க ஏசுக்கிறிஸ்தினபற்றி சபெயாளெ உள்ளாக்காக படிசிகொடா கெலசாக பேக்காயிற்றும் நேமிசி பீத்திப்புதாப்புது.


நிங்க அர்க்கிப்பினகூடெ, ஏசுக்கிறிஸ்து நினங்ங ஏல்சிதா கெலசத வளரெ ஜாகர்தெயாயிற்றெ கீயிக்கு ஹளி அவன கண்டு கூட்டகூடிவா.


அதுகொண்டாப்புது யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காறிக ஏசினமேலெ உள்ளா நம்பிக்கெத பற்றியும், சத்தியமாயிற்றுள்ளா ஒள்ளெ வர்த்தமானதும் அருசத்தெபேக்காயி, தெய்வ நன்ன அப்போஸ்தலனாயிற்றும், உபதேசியாயிற்றும் நேமிசிப்புது; நா ஹளுது பொள்ளல்ல; ஒக்க நேருதென்னெயாப்புது.


எந்நங்ங மூப்பனாயிற்றெ இப்பாவாங் எந்த்தெஒக்க இருக்கு ஹளிங்ங, அவனபற்றி ஒப்புரும் குற்ற ஹளாத்த நெலெயாளெ ஜீவுசாவனும், ஒந்து ஹிண்டுறாகூடெ மாத்தற பதுக்கு மாடாவனும், எல்லா காரெயாளெயும், எல்லா ஆசெயாளெயும் தன்ன நேந்திறசத்தெ கழிவுள்ளாவனும், மற்றுள்ளாக்கள எடேக மதிப்புள்ளாவனும், தன்ன ஊரிக பொப்பாக்கள சீகருசாவனும், உபதேசகீவத்தெ கழிவுள்ளாவனும் ஆயிருக்கு.


நீ நின்ன ஜீவிதாதபற்றியும், நீ உபதேசகீவா காரெபற்றியும் வளரெ ஜாகர்தெயாயிரு; நா நின்னகூடெ ஹளிதன ஒக்க கீதண்டே இரு; நீ அந்த்தெ கீதங்ங, தெய்வ நின்னும் நின்ன உபதேச கேளா ஆள்க்காறினும் ஞாயவிதிந்த ரெட்ச்சிசுகு.


சபெ காரெ ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தா மூப்பம்மாரா எருடு மடங்ஙு பெகுமானுசுக்கு; பிறித்தியேகிச்சு வஜன படிசி கொடுதனாளெயும், உபதேச கீவுதனாளெயும் ஒக்க கூடுதலு கஷ்டப்படா மூப்பம்மாரின ஒக்க எருடு மடங்ஙு பெகுமான கொட்டு நெடத்துக்கு.


நா பலரா முந்தாகும் ஹளிதா காரெ ஒக்க நீ கேட்டித்தெயல்லோ? அதனொக்க நீ மற்றுள்ளாக்கள கையி ஏல்சி கொடு; ஆக்க நினங்ங நம்பத்தெ பற்றிதாக்களும், மற்றுள்ளாக்கள படுசத்தெ கழிவுள்ளாக்களும் ஆயிருக்கு.


அதே ஹாற தெய்வாகபேக்காயி கெலச கீவாவங், ஜெகளகூடத்தெ பாடில்லெ, எல்லாரினகூடெயும் சாந்தமாயிற்றெ இப்பத்தெகும், உபதேசகீவத்தெ கழிவுள்ளாவனும், ஷெமெ உள்ளாவனும் ஆயிருக்கு.


நினங்ங ஹளிகொடத்தெ நேர இத்தங்ஙும் இல்லிங்கிலும், ஏகோத்தும் நீ வஜன ஹளிகொடத்தெ தயாராயிற்றெ இரு; நீ படிசிகொடங்ங, சமாதானமாயிற்றெ ஜனங்ஙளா ஹளி திருத்து, அடக்க நெலேக நிருத்து, தைரெபடுசு.


Lean sinn:

Sanasan


Sanasan