23 ஆக்க நன்ன ஹிடுத்து கொல்லுரு; எந்நங்ங நா மூறாமாத்த ஜின ஜீவோடெ ஏளுவிங்” ஹளி ஹளிதாங்; சிஷ்யம்மாரு இதல்லி கேளதாப்பங்ங பேஜார ஹிடிப்பத்தெகூடிரு.
ஆ சமெந்த ஹிடுத்து ஏசு, தன்ன சிஷ்யம்மாராகூடெ தாங் எருசலேமிக ஹோப்பத்துட்டு ஹளியும், அல்லிபீத்து மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் தன்ன ஹிடுத்து உபதரிசி கொல்லுரு ஹளியும், மூறாமாத்த ஜினாளெ தெய்வ தன்ன ஜீவோடெ ஏளுசுகு ஹளிட்டுள்ளா காரெத பற்றியும் ஹளத்தெகூடிதாங்.
எந்தட்டு ஆக்க மலெந்த கீளெ எறஙங்ங ஏசு ஆக்களகூடெ, “மனுஷனாயி பந்தா நா சத்துகளிஞட்டு ஜீவோடெ ஏளாவரெட்டா, இல்லி கண்டுதன நிங்க ஒப்புறினகூடெயும் ஹளத்தெ பாடில்லெ” ஹளி ஒறப்பாயிற்றெ ஹளிதாங்.
ஆக்க நன்ன பரிகாசகீதட்டு, சாட்டெவாறாளெ ஹுயிது, குரிசாமேலெ தறெச்சு கொல்லத்தெபேக்காயி அன்னிய ஜாதிக்காறா கையாளெ ஏல்சிகொடுரு; எந்நங்ஙும், மூறாமாத்த ஜின நா ஜீவோடெ ஏளுவிங்” ஹளி ஹளிதாங்.
எஜமானனே, “ஆ சதியங் ஜீவோடெ இப்பங்ங, ‘நா மூறுஜின களிஞட்டு ஜீவோடெ ஏளுவிங்’ ஹளி ஹளிதாயிற்றெ நங்காக ஓர்மெ உட்டு.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “யூத மூப்பம்மாரும், வேதபண்டிதம்மாரும், தொட்டபூஜாரிமாரும் மனுஷனாயி பந்தா நன்ன ஆகாத்தாவாங் ஹளி பொறந்தள்ளி, பலவிதமாயிற்றெ உபதரிசி கொல்லுரு; எந்நங்ஙும், நா மூறுஜின களிஞட்டு ஜீவோடெ எத்து பொப்பிங்” ஹளி கூட்டகூடத்தெ கூடிதாங்.
ஹிந்தெ ஏசும் சிஷ்யம்மாரும், அல்லிந்த ஹொறட்டு கலிலா தேசகூடி கடது ஹோதுரு; அது ஒப்புரும் அறிவத்தெ பாடில்லெ ஹளி ஏசு பிஜாரிசிதாங்.
அதன பகராக நா ஹளிதா காரெத சிந்திசி பேஜாரஹிடுத்தண்டு இத்தீரெ.
ஏசு ஆக்களகூடெ “ஈ அம்பலத பொளிச்சு ஹைக்கிவா! நா மூறுஜினத ஒளெயெ அதன கெட்டக்கெ” ஹளி ஹளிதாங்.