2 தன்ன கெலசகாறாகூடெ, “இது யோவான்ஸ்நான தென்னெயாப்புது; அவங் ஜீவோடெ எத்து பந்துதீனெ; அதுகொண்டாப்புது ஈ அல்புத பிறவர்த்தி ஒக்க அவனகொண்டு நெடிவுது” ஹளி ஹளிதாங்.
“ஈ லோகாளெ ஹுட்டிதா மனுஷராளெ பீத்து, யோவானின காட்டிலும் தொட்டாவங் ஒப்பனும் இல்லெ; எந்நங்ஙும் சொர்க்கராஜெயாளெ எல்லாரினகாட்டிலும் சிண்டாவனாயிற்றெ இப்பாவங்கூடி, அவன காட்டிலும் தொட்டாவனாயிற்றெ இப்பாங் ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.
அதங்ங ஆக்க, “செலாக்க நின்ன யோவான்ஸ்நான ஹளியும், செலாக்க எலியா ஹளியும், செலாக்க எரேமியா, அல்லிங்ஙி பொளிச்சப்பாடிமாராளெ ஏரிங்ஙி ஒப்பனாயிக்கு ஹளி ஹளீரெ” ஹளி ஹளிரு.
ஆ காலதாளெ யோவான்ஸ்நான ஹளாவாங் யூதேயாளெ உள்ளா மருபூமிக பந்தட்டு ஜனங்ஙளாகூடெ, “நிங்க கீதண்டிப்பா தெற்று குற்றத புட்டு மனசுதிரிவா; தெய்வ பரண நெடத்தா கால பந்துத்து” ஹளி பிரசங்ங கீதண்டித்தாங்.
ஏசின ஹெசறு எல்லா சலாளெயும் பாட்டாத்து; ஏரோது ராஜாவும் அது கேட்டாங்; இது யோவான்ஸ்நான தென்னெயாப்புது அவங் ஜீவோடெ எத்து பந்துதீனெ; அதுகொண்டாப்புது ஈ அல்புத பிறவர்த்தி ஒக்க அவனகொண்டு நெடிவுது ஹளி ஜனங்ஙளு ஹளிண்டித்துரு.
அதங்ங ஆக்க, “செலாக்க நின்ன யோவான்ஸ்நான ஹளியும், செலாக்க எலியா ஹளியும், செலாக்க பொளிச்சப்பாடிமாராளெ ஏரிங்ஙி ஒப்பனாயிக்கு ஹளியும் ஹளீரெ” ஹளி ஹளிரு.
ஏசு கீதா அல்புத ஒக்க ஜனங்ஙளு கண்டட்டு, யோவான்ஸ்நான தென்னெயாப்புது ஜீவோடெ எத்து பந்தட்டு, இந்த்தெ ஒக்க கீவுது! ஹளி கூட்டகூடிண்டித்துரு; கலிலா தேசாளெ கவர்னறாயித்தா ஏரோது இது கேளதாப்பங்ங அவங்ங ஆகெ வெப்றாள ஆத்து.
பல ஆள்க்காரும் ஏசினப்படெ பந்துரு; “யோவானு ஒந்து அல்புதும் கீதுபில்லெ; எந்நங்ங அவங், ஈ ஏசினபற்றி ஹளிது ஒக்க நேருதென்னெ ஆப்புது” ஹளி ஆக்க கூட்டகூடிண்டித்துரு.