10 எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “ஆ சமெ ஆப்பதாப்பங்ங, ஒந்து ஜாதிக்காறிக இஞ்ஞொந்து ஜாதிக்காரும், ஒந்து ராஜெக இஞ்ஞொந்து ராஜெக்காரும் எதிராயிற்றெ யுத்தகீவுரு.
ஒந்து ஜாதிக்காறிக இஞ்ஞொந்து ஜாதிக்காரும், ஒந்து ராஜெக இஞ்ஞொந்து ராஜெக்காரும் எதிராயிற்றெ யுத்தகீவுரு; பல சலதாளெயும் பூமிகுலுக்க உட்டாக்கு, பஞ்ச உட்டாக்கு, இதொக்க ஹொட்டெநோம்புலு பொப்பா ஹாற உள்ளா தொட்ட கஷ்டத தொடக்க ஆப்புது.
அதுமாத்ற அல்ல பல சலதாளெ பூமிகுலுக்க உட்டாக்கு, பஞ்ச உட்டாக்கு, பலவித தெண்ண பொக்கு, ஆகாசந்த தொட்ட அடெயாளங்ஙளும் உட்டாக்கு.
அதுமாத்ற அல்ல, கலக நெடதாதெ, யுத்த பொப்பத்தெ ஹோத்தெ ஹளிட்டுள்ளா சங்ஙதி கேளங்ங, நிங்க அஞ்சுவாட; இதொக்க சம்போசுகு; எந்நங்ஙும், பெட்டெந்நு லோக அவசான ஆக” ஹளி ஹளிதாங்.
ஆக்களாளெ, அகபு ஹளா ஒப்பாங் சபெயாளெ எத்து நிந்தட்டு, “லோக முழுக்க கடும்பஞ்ச உட்டாக்கு” ஹளி தெய்வத ஆல்ப்மாவாளெ ஹளிதாங்; ஆ பஞ்ச, கிலவுதிராயன பரண காலதாளெ சம்போசித்து.
‘இஞ்ஞொந்து பரச’ ஹளி ஹளிப்புது, கண்ணிக காம்பா எல்லதும் குலிங்ஙி இல்லாதெ ஆக்கு; அதொக்க நீஙி ஹோப்பதாப்பங்ங, குலுங்ஙாத்துது ஒக்க நெலெநில்லுகு.