Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




லூக்கா 15:24 - Moundadan Chetty

24 ஏனாக ஹளிங்ங, சத்தண்டுஹோதாங் ஹளி ஹளிண்டித்தா நன்ன மங்ங, இந்து ஜீவோடெ நன்னப்படெ திரிஞ்ஞு பந்துதீனெ; காணாதெ ஹோதாவன இந்து திரிச்சு கிடுத்து ஹளி ஹளிதாங்; அந்த்தெ ஆக்க எல்லாரும் சத்யெமாடி திந்து குடுத்து, சந்தோஷமாயிற்றெ ஆடத்தெகும், பாடத்தெகும் தொடிங்ஙிரு.

Faic an caibideil Dèan lethbhreac




லூக்கா 15:24
34 Iomraidhean Croise  

அதங்ங ஏசு, “சத்தாக்கள ஹாற ஜீவிசிண்டிப்பாக்க ஹோயி சத்தாக்கள அடக்க கீயட்டெ; நீ நன்னகூடெ பா!” ஹளி ஹளிதாங்.


ஏசும் சிஷ்யம்மாரும் பெத்சாயிதா ஹளா பாடாக பந்துரு. அம்மங்ங கொறச்சு ஆள்க்காரு ஒந்து குருடன ஏசினப்படெ கொண்டுபந்தட்டு, அவன முட்டி சுகமாடுக்கு ஹளி கெஞ்சி கேட்டுரு.


கேட்டணிவா! ஹாவினும், தேளினும் சொவுட்டா ஹாற, எல்லா காரெயாளெயும் செயித்தானின ஜெயிப்பத்துள்ளா சகல அதிகாரம், சக்தியும் நா நிங்காக தந்துஹடதெ; பிசாசு நிங்காக ஒந்து தோஷம் கீயாற.


எந்தட்டு ஒள்ளெ கொளுத்த ஒந்து ஆடுமுட்டன கொந்து சத்யெமாடிவா, நங்க திந்து குடுத்து சந்தோஷமாற்றெ இப்பும்.


அம்மங்ங தன்ன தொட்ட மங்ங பைலிந்த கெலசஒக்க தீது ஊரிக பொப்பதாப்பங்ங ஊரின ஆட்டம், பாட்டும் ஒக்க கேட்டட்டு,


அதுகொண்டு, நங்க ஈக கொண்டாடுது அத்தியாவிசெ ஆப்புது; ஏனாக ஹளிங்ங நின்ன தம்மன, எல்லாரும் சத்தண்டுஹோதாங் ஹளிண்டித்துதாப்புது, எந்நங்ங அவங் ஜீவோடெ திரிச்சு பந்நனல்லோ! காணாதெ ஹோதாங்; ஈக அவன திரிச்சு கிடுத்து; அதுகொண்டு நங்க எல்லாரும் ஈக சந்தோஷமாயிற்றெ இப்பும் பா! ஹளி ஹளிதாங்; அந்த்தெ ஈ மூறு கதேதகொண்டு ஏசு ஆக்களகூடெ கூட்டகூடிதாங்.


ஒப்பங்ங நூரு ஆடு உட்டாயித்து; ஒந்துஜின அவங் காடாளெ மேசிண்டிப்பங்ங, ஒந்து ஆடு காணாதெ ஹோத்து; அம்மங்ங அவங் ஏன கீதிப்பாங்? அவங் ஆ தொண்ணூறா ஒம்பத்து ஆடினும் அல்லி புட்டட்டு, ஈ காணாதெ ஹோதா ஆடு கண்டுஹிடிப்பாவரெட்ட அதன தெண்டிண்டு ஹோகாதிப்பனோ?


நா மனுஷனாயி பந்துது ஏனாக ஹளிங்ங, காணாதெ ஹோதுதன கண்டு ஹிடிப்பத்தெகும், ரெட்ச்செ படுசத்தெகும் தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.


அதங்ங ஏசு, “சத்தாக்கள ஹாற ஜீவிசிண்டிப்பாக்க ஹோயி சத்தாக்கள அடக்க கீயட்டெ; நீ ஹோயி தெய்வராஜெத பற்றிட்டுள்ளா காரெத அருசு” ஹளி ஹளிதாங்.


ஏசு அவளகூடெ, “நா தென்னெயாப்புது ஜீவுசாவனும், ஜீவோடெ ஏள்சாவனும்; நன்ன நம்பாக்க சத்தங்ஙும் ஜீவுசுரு.


அப்பாங் சத்தாக்கள ஜீவோடெ ஏள்சி ஜீவுசத்தெ பொப்பா ஹாற, மங்ஙனும் தனங்ங இஷ்ட உள்ளாக்கள ஜீவுசத்தெ பீத்தீனெ.


எந்த்தெ ஹளிங்ங, யூதம்மாரு தெய்வத ஒதுக்கிது பொறமெக்காரு தெய்வதகூடெ சேரத்தெ எடெயாயிதீத்து; அந்த்தெ இப்பங்ங தெய்வ யூதம்மாரா தன்னகூடெ சேர்சுது சத்தாக்க ஜீவோடெ எத்து பந்தாஹாற இக்கல்லோ?


சந்தோஷப்படாக்களகூடெ கூடி நிங்களும் சந்தோஷபடிவா; கஷ்டப்படாக்களகூடெ கூடி ஆக்கள சகாசிவா.


அதே ஹாற தென்னெ நிங்களும், தெற்று குற்ற கீவா சொபாவக சத்தட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு தெய்வாகபேக்காயி ஜீவிசிவா.


பண்டு நிங்கள சரீரத, ஏதொக்க தெற்று கீவத்தெ உபயோகிசிறோ, அதொக்க இந்து நீதியுள்ளா காரெ கீவத்தெபேக்காயி தெய்வதகையி ஏல்சிகொடிவா; ஏனாக ஹளிங்ங நிங்க ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்துகளிஞட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ எத்து ஜீவிசிண்டித்தீரெயல்லோ!


ஏனாக ஹளிங்ங, தெய்வ நேமாக அடிமெயாயிற்றெ இத்தா நின்ன ஹளேஜீவித ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்தண்டுஹோத்தல்லோ? நின்ன ஹளே ஜீவிதாளெ தெய்வ தந்தா நேமங்ஙளு ஆப்புது நின்ன நெடத்திண்டித்து; எந்நங்ங, இந்து நின்ன பரிசுத்த ஆல்ப்மாவு நெடத்திண்டிப்பா ஹேதினாளெ, ஆ நேமதகொண்டு இனி நின்ன குற்றக்காறங் ஹளி ஹளத்தெபற்ற.


அதுகொண்டு, நிங்களாளெ ஒப்பங்ங ஏனிங்ஙி ஒந்து புத்திமுட்டு பொப்பதாப்பங்ங, ஆ கஷ்டதாளெ அவன சகாசிகொடுக்கு; ஒப்பங்ங ஒந்து சந்தோஷ உட்டாதங்ங, அதன மற்றுள்ளாக்காகும் பகர்ந்நு கொடுக்கு; அம்மங்ங எல்லாரிகும் சந்தோஷ உட்டாக்கல்லோ?


பண்டு நிங்க தெய்வத வாக்கு கேளாதெ தெற்று குற்ற கீதுதுகொண்டு, தெய்வத காழ்ச்செயாளெ சத்தாக்கள சமாக இத்துரு.


அந்த்தெ பொளிச்ச பொப்பங்ங இருட்டாளெ உள்ளுதொக்க ஹொறெயெ கடெகு. அதுகொண்டாப்புது, கிறிஸ்தின பொளிச்ச நின்னமேலெ உதிச்சாதெ! ஒறங்ஙிண்டிப்பாவனே நீ ஏளு! சத்தாக்கள எடெந்த ஏளு! ஹளி ஹளுது.


நிங்கள பேடாத்த சொபாவத முறிச்சு மாற்றாதெ ஜீவிசிண்டிப்பதாப்பங்ங தெய்வத காழ்ச்செயாளெ நிங்க சத்தாக்கள ஹாற இத்துரு; எந்நங்ங நிங்கள தெற்று குற்றாகபேக்காயி ஏசுக்கிறிஸ்து தன்ன மரணங்கொண்டு நிங்காகபேக்காயி கீதுதன நம்பதாப்பங்ங நிங்கள தெற்று குற்றாக ஒக்க தெய்வ மாப்பு தந்து, நிங்களும் ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ ஏள்சித்து.


தன்னபோற்றி ஹாற ஜீவுசா விதவெ, ஜீவோடெ இத்தட்டும் காரெஇல்லெ; அவ சத்தா சவாக சம தென்னெயாப்புது.


ஏசின மரணத ஓர்த்து தீனிதிம்பா நிங்களகூடெ, அந்த்தலாக்களும் தெய்வாக அஞ்சிக்கெ இல்லாதெ தீனிதிந்து, பெள்ளெ முண்டாமேலெ கறெபற்றிதா ஹாற இத்தீரெ; ஆக்க மளெ ஹுயாதெ காற்றிக பறந்நண்டு ஹோப்பா மோடத ஹாற உள்ளாக்களும் ஆப்புது; அந்த்தலாக்க பறிச்சு நட்டா ஒணக்கு மரத ஹாற உள்ளாக்களும் ஆப்புது.


சர்தி சபெயாளெ இப்பா தூதங்ங நீ இந்த்தெ எளி; தெய்வத ஏளு ஆல்ப்மாவின தன்னகூடெ நிருத்தி, ஏளு நச்சத்தறத தன்ன கையாளெ ஹிடுத்திப்பாவாங் ஹளுது ஏன ஹளிங்ங, “நின்ன பிறவர்த்தி ஏன ஹளி நனங்ங கொத்துட்டு; நீ தெய்வகாரெயாளெ ஜீவுள்ளாவன ஹாற இப்புதே ஒள்ளு; எந்நங்ங, நீ சத்தாவன ஹாற ஆப்புது இப்புது.


Lean sinn:

Sanasan


Sanasan