2 அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “ஆக்காக அந்த்தெ சம்போசித்து ஹளிட்டு, கலிலாளெ உள்ளா மற்றுள்ளாக்கள காட்டிலும் ஈ சத்தாக்க தெற்று குற்ற கீதாக்களாயிக்கு ஹளி நிங்க பிஜாரிசீரெயல்லோ?
ஆ சமெயாளெ செல ஆள்க்காரு ஏசினப்படெ பந்தட்டு, கலிலந்த எருசலேம் அம்பலாக ஹோயி தெய்வாக ஹரெக்கெ களிப்பத்தெ ஹோதாக்காள ஒக்க பிலாத்து கொந்தா காரெத ஏசினகூடெ ஹளிரு.
அந்த்தெ அல்ல! நிங்கள பேடாத்த பட்டெ ஒக்க புட்டு, தெய்வதபக்க திரிஞ்ஞுதில்லிங்ஙி ஆக்கள ஹாற தென்னெ நிங்களும் நாசாயிண்டு ஹோப்புரு ஹளி நா நிங்களகூடெ ஹளுதாப்புது.
அல்லிங்ஙி, சீலோவாம் ஹளா சலதாளெ கோபுர இடுது பித்தட்டு ஹதினெட்டு ஆள்க்காரு சத்தண்டு ஹோதுறல்லோ? அதுகொண்டு எருசலேம் பட்டணாளெ இப்பாக்கள காட்டிலும், சத்தண்டுஹோதா ஆள்க்காரு தெற்று குற்ற கீதாக்களாப்புது ஹளி நிங்க பிஜாரிசீரெ அல்லோ?
அம்மங்ங ஏசின சிஷ்யம்மாரு தன்னகூடெ, “குரூ! இவங் குருடனாயி ஹுட்டிது ஏற கீதா குற்ற? இவங் கீதா குற்றோ? அல்ல இவன அப்பனும் அவ்வெயும் கீதா குற்றோ?” ஹளி கேட்டுரு.
ஹாவு அவன கையிமேலெ கச்சி தூஙிப்புது ஆ தீவுகாரு கண்டட்டு, “இவங் தீர்ச்செயாயிற்றும் கொலெகாறங் தென்னெ, சம்சே இல்லெ; இவங் கடலிந்த தப்பிசி பந்தட்டும் நீதிதேவி இவன புட்டுபில்லல்லோ!” ஹளி ஆக்க தம்மெலெ கூட்டகூடிரு.