29 எந்நங்ங அவங் தன்ன சத்தியநேரு உள்ளாவாங் ஹளி காட்டத்தெபேக்காயி, “நா சினேகிசத்துள்ளா அயல்காறங் ஏறா?” ஹளி ஏசினகூடெ கேட்டாங்.
எந்தட்டு சிஷ்யம்மாரினும், ஆள்க்காறினும் அரியெ ஊதட்டு, “நன்ன பட்டெ அனிசரிசத்தெ மனசுள்ளா ஏவனும் அவன சொந்த இஷ்டத ஒதுக்கிட்டு, அவங் நனங்ஙபேக்காயி கஷ்டப்படத்தெயும், சாயிவத்தெயும் தயாராயி நன்ன அனிசருசுக்கு” ஹளி ஹளிதாங்.
இஞ்ஞி ஹளு! கள்ளம்மாரா கையாளெ குடிங்ஙிதா யூதங்ங, ஈ மூறு ஆள்க்காறாளெ ஏற அயல்காறங்?” ஹளி கேட்டாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, நிங்க மற்றுள்ளாக்கள முந்தாக ஒள்ளேக்கள ஹாற காட்டீரெ, எந்நங்ங, நிங்கள மனசினாளெ ஏன ஹடதெ ஹளிட்டுள்ளுது தெய்வாக கொத்துட்டு; நிங்க மனுஷம்மாரா முந்தாக ஒள்ளேக்கள ஹாற காட்டுதொக்க தெய்வ வெருப்பா காரெ ஆப்புது.
அதாயது தெய்வ, மனுஷம்மாரா எந்த்தெ சத்தியநேரு உள்ளாக்களாயிற்றெ கணக்குமாடீதெ ஹளி அறிவத்தெ மனசில்லாதெ, ஆக்கள சொந்த கழிவினாளெ தெய்வாக ஏற்றாக்களாயி ஆப்பத்தெக நோடீரெ.
நா சுன்னத்து கீதுதுகொண்டு தெய்வ நன்ன சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ கணக்குமாடித்து ஹளி அப்ரகாமிக பெருமெ ஹளத்தெ பற்றுகோ? அந்த்தெ ஒரிக்கிலும் ஹளத்தெபற்ற. தெய்வத முந்தாக அவங்ங பெருமெ ஹளத்தெ ஒந்தும் இல்லெ.
அதுகொண்டு ஆ நேமதாளெ ஹளிப்பா காரெ ஒக்க கீவத்தெ நோடுதுகொண்டு ஒப்பனும் தெய்வத முந்தாக சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ நில்லத்தெ பற்ற ஹளிட்டுள்ளுது ஒயித்தாயி கொத்துட்டல்லோ! எந்நங்ங “சத்தியநேரு உள்ளாக்க, தெய்வதமேலெ உள்ளா நம்பிக்கெயாளெ ஜீவுசுரு” ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ.
ஒப்பாங் தெய்வத நம்புதுகொண்டு மாத்தற அல்ல, தெய்வ நம்பிக்கெயாளெ கீவத்துள்ளுது ஒக்க கீவங்ங மாத்தறே தெய்வ அவன தெற்று குற்ற இல்லாத்த சத்தியநேரு உள்ளாவனாயி கணக்குமாடுகு.