4 ஏனாக ஹளிங்ங, நிங்க படிச்சா காரெ ஒக்க நேருதென்னெ ஆப்புது ஹளி நிங்க அறிவத்தெபேக்காயிற்றெ நா இதொக்க ஒந்து கிரமப்பிரகார எளிவுது.
ஏசு தென்னெ ஆப்புது தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்து ஹளிட்டுள்ளுதன நிங்க நம்பத்தெகும், நம்பிட்டு அவனகொண்டு நிங்காக ஜீவித உட்டாப்பத்தெகும் ஆப்புது இதொக்க எளிதிப்புது.
அவங் எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின பட்டெதபற்றி ஒயித்தாயி படிச்சித்தாங்; அவங் ஏசினபற்றி மற்றுள்ளாக்காக பிவறாயிற்றும், தெற்றில்லாதெயும், ஒள்ளெ தால்பரியத்தோடெயும் ஹளிகொட்டண்டித்தாங்; எந்நங்ங அவங், யோவானு கொட்டா ஸ்நானகர்மத பற்றி மாத்தறே அருதித்தாங்.
நங்க தெய்வ நேமத படிச்சிப்புது கொண்டு செரி ஏது, தெற்று ஏது ஹளி நங்காக கொத்துட்டு; தெய்வத இஷ்ட ஏனாப்புது ஹளி நங்காக கொத்துட்டு ஹளியும் பெருமெ ஹளீரெ.
எந்நங்ஙும், நா சபெயாளெ இப்பங்ங ஹத்தாயிர வாக்கு அன்னிய பாஷெயாளெ கூட்டகூடுதன காட்டிலும், மற்றுள்ளாக்காக படிசிகொடத்தெ பேக்காயி, ஆக்காக மனசிலாப்பா ரீதியாளெ புத்தியோடெ நாக்கைது வாக்கு கூட்டகூடுதாப்புது நன்ன ஆக்கிர.
நிங்காக தெய்வகாரெபற்றி படிசிதப்பாக்காக, நிங்காகுள்ளா எல்லதனாளெயும் ஒந்து ஓகிரி கொட்டு சகாசிவா.