23 அதுகொண்டாப்புது அவன அவ்வெ அப்பாங், “அவங் பிராய உள்ளாவாங் தால அவனகூடெ தென்னெ கேளிவா” ஹளி ஹளிது.
எந்நங்ங ஈக இவங்ங எந்த்தெ காழ்ச்செ கிடுத்து ஹளியும், இவங்ங காழ்ச்செ கொட்டுது ஏற ஹளியும் நங்காக கொத்தில்லெ, அவனகூடெ தென்னெ கேளிவா; அவங்ங அதங்ஙுள்ளா பிராய உட்டல்லோ, நெடதுது ஏன ஹளி அவனே ஹளட்டெ” ஹளி ஹளிரு.
ஆக்க குருடனாயித்தா அவன ஹிந்திகும் ஊதட்டு அவனகூடெ, “ஆ மனுஷங் குற்றக்காறனாப்புது ஹளி நங்காக கொத்துட்டு; நீ சத்திய ஹளிட்டு, தெய்வத பெகுமானிசு” ஹளி ஹளிரு.