Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




யோவானு 8:19 - Moundadan Chetty

19 அம்மங்ங ஆக்க “நின்ன அப்பாங் எல்லி இத்தீனெ?” ஹளி கேட்டுரு; ஏசு ஆக்களகூடெ, “நிங்காக நன்னும் கொத்தில்லெ, நன்ன அப்பனும் கொத்தில்லெ; நா ஏற ஹளிட்டுள்ளுது அருதித்தங்ங ஒந்சமெ நன்ன அப்பனும் அருதிப்புரு” ஹளி ஹளிதாங்.

Faic an caibideil Dèan lethbhreac




யோவானு 8:19
24 Iomraidhean Croise  

ஆ சமெயாளெ ஏசு “அப்பா! ஆகாச, பூமி எல்லதங்ஙும் எஜமானனாயிற்றெ இப்பாவனே! ஈ காரெ ஒக்க புத்திமான்மாரிகும், படிப்பறிவு உள்ளாக்காகும் காட்டிகொடாதெ, சிப்பி மக்கள ஹாற இப்பா ஈக்காக காட்டி கொட்டுதுகொண்டு நினங்ங நண்ணி ஹளுதாப்புது.


அவங் ஈ லோகாளெ இத்தாங். அவனகொண்டாப்புது லோக உட்டாதுது; எந்நங்ங அவங் ஏற ஹளி லோகக்காரு அருதுபில்லெ.


தெய்வத ஒப்பனும் ஒரிக்கிலும் கண்டுபில்லெ; எந்நங்ங தன்னகூடெ சேர்நிப்பா ஒந்தே மங்ஙனாயிப்பா தெய்வ தென்னெயாப்புது, அப்பனாயிப்பா தெய்வ ஏற ஹளி நங்க எல்லாரிகும் அறிசிதாவாங்.


நன்ன ஹளாயிச்சுது ஏற ஹளி அறியாத்துதுகொண்டாப்புது ஆக்க நன்ன ஹேதினாளெ நிங்கள உபத்தருசுது.


ஆக்க நன்னும், நன்ன அப்பனும் அறியாத்துதுகொண்டாப்புது இந்த்தெ ஒக்க கீவுது.


ஒந்தே ஒந்து சத்திய தெய்வமாயிப்பா நின்னும், நீ ஹளாய்ச்சா ஏசுக்கிறிஸ்தினும் மனசிலுமாடுதாப்புது நித்திய ஜீவித.


அந்த்தெ ஏசு அம்பலதாளெ உபதேச கீதண்டிப்பங்ங, ஒச்செகாட்டி, “நா ஏற ஹளியும், எல்லிந்த பந்துது ஹளியும் நிங்க எல்லாரிகும் கொத்துட்டு; எந்நங்ங நா நன்ன சொந்த இஷ்டப்பிரகார பந்துபில்லெ; நன்ன ஹளாயிச்சுது சத்திய உள்ளாவனாப்புது, அது ஏற ஹளி நிங்காக கொத்தில்லெ.


தெய்வாக இஷ்டப்படா ஹாற எந்த்தெ நெடிவுது ஹளி சிந்திசி, தெற்று குற்ற கீயாதெ சத்தியநேரோடெ ஜீவிசிவா; ஏனாக ஹளிங்ங, நிங்களாளெ செலாக்க தெய்வதகூடெ ஒந்து பெந்தம் இல்லாதெ நெடதீரெ; இது கேட்டட்டு நிங்காக நாண பொப்பத்தெ பேக்காயாப்புது நா இதொக்க ஹளிதப்புது.


எந்நங்ங ஈக தெய்வ நிங்கள அப்பனாப்புது ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்துட்டு; அதே ஹாற தென்னெ தெய்வும் தன்ன சொந்த மக்களாயிற்றெ நிங்கள தெரெஞ்ஞெத்தி ஹடதெயல்லோ? ஹிந்தெ ஏனாக நிங்க ஒந்து கழிவும் இல்லாத்த, ஒந்நங்ஙும் உபகாரபடாத்த, ஈ லோகாளெ நெடிவா ஒந்நொந்து ஆஜாரங்ஙளிக ஹிந்திகும் ஹோயி அடிமெ ஆப்புது?


ஏனாக ஹளிங்ங, நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின அப்பனாயிப்பா தெய்வ ஏமாரி மதிப்புள்ளாவாங் ஹளி நங்க பூரணமாயிற்றெ அறிவத்துள்ளா அறிவும் புத்தியும் தப்பா பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தன்ன சொகாரெத அறிவத்துள்ளா அறிவும், புத்தியும் நிங்காகும் கிட்டட்டெ ஹளி பிரார்த்தனெ கீவுதாப்புது.


அதுமாத்தற அல்ல, நிங்க தெய்வதபற்றி அறிவா அறிவினாளெ வளரத்தெ பேக்காயும், எல்லா காரெயாளெயும் தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசத்தெகும், நிங்க கீவா காரெ ஒக்க பிரயோஜன உள்ளுதாயிற்றெ இப்பத்தெகும் பேக்காயி பிரார்த்தனெ கீவுதாப்புது.


இதுவரெ ஒப்பனகொண்டும் காம்பத்தெ பற்றாத்த தெய்வத ஆ ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது நங்காக காட்டி தந்நாவாங்; அதுமாத்தற அல்ல, ஆ ஏசு தென்னெயாப்புது எல்லா சிருஷ்டிகும் தெலெக்குட்டி மங்ஙன ஹாற தொட்டாவனாயி இப்பாவாங்.


தெய்வ ஏற ஹளிட்டுள்ளுதனும், தெய்வத மதிப்பு ஏன ஹளிட்டுள்ளுதனும் தன்ன மங்ஙனாயிப்பா ஏசு காட்டீனெ; அவங் தன்ன வாக்கின சக்திகொண்டு, ஈ லோகாளெ உள்ளா எல்லதனும் தாஙி நிருத்தாவனும் ஆப்புது; அவங் மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிச்சு களிஞட்டு, சொர்க்காளெ இப்பா தன்ன அப்பன பலபக்க உள்ளா மதிப்புள்ளா சலதாளெ ஹோயி குளுதுதீனெ.


எல்லா மனுஷரினும் ரெட்ச்செபடுசத்தெபேக்காயி தெய்வ ஹளாயிச்சா ஏசின அங்ஙிகரிசாத்தவனகூடெ நங்கள அப்பனாயிப்பா தெய்வ உட்டாக; நன்ன ரெட்ச்சிசத்தெபேக்காயி ஏசு இத்தீனெ ஹளி ஹளாவனகூடெ ஆப்புது தெய்வ இப்புது.


சத்தியமாயிற்றுள்ளா தெய்வத, நங்க மனசிலுமாடுக்கு ஹளிட்டாப்புது தெய்வத மங்ஙனாயிப்பா ஏசு ஈ லோகாக பந்துது; அவனகூடெ பெந்த உள்ளாக்களாயி ஜீவுசுது தென்னெயாப்புது நேராயிற்றுள்ளா ஜீவித; அவங் தென்னெயாப்புது தெய்வத சத்திய; சாவில்லாத்த ஜீவனும் அவங் தென்னெயாப்புது.


ஏனாக ஹளிங்ங கிறிஸ்து ஹளிகொட்டுதனகூடெ பேறெ கொறே காரெயுங்கூடி கூட்டி கீவாக்க லோகாளெ இத்தீரெ; கிறிஸ்து ஹளிதனல்லாதெ அந்த்தெ கூட்டிகீவா ஒப்பனகூடெயும் தெய்வ உட்டாக; எந்நங்ங கிறிஸ்து ஹளிகொட்டா காரெத மாத்தற கீவாக்க ஏறோ ஆக்களகூடெ கிறிஸ்தும், தன்ன அப்பனும் இத்தீரெ.


Lean sinn:

Sanasan


Sanasan